சுமார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு H1N1 Swine Flu Influenza என்று சொல்லப்படக்கூடிய இந்தப் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்திலே மிகப்பெரிய ஒரு பீதி ஏற்பட்டு, பாதிப்புகள் ஏற்பட்டன. இப்போது மீண்டும் தமிழ்நாட்டிலே பன்றிக் காய்ச்சல் தலைதூக்கி, மக்களுக்கு ஆங்காங்கே பாதிப்புகள் வரக்கூடிய சூழலில், தமிழக அரசு அதுகுறித்து துரிதமாக சில நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதை பாராட்டுகிறேன்.
அதே நேரத்திலே, இந்தக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான பரிசோதனைச் செலவு ரூபாய் 7 ஆயிரம் என்றிருந்ததை, மாண்புமிகு சுகாதாரத்துறை அவர்கள் தலையிட்டு, 3 ஆயிரம் ரூபாயாகக் குறைத்திருக்கின்றார்கள். ஆனால், சாதாரண மக்களுக்கு இது மிகப் பெரிய தொகை. எனவே, அரசே இலவசமாக இந்தப் பரிசோதனையை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழாவது, இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழகத்திலே சிக்கன்-குனியா என்ற நோய் பரவியபோது, அதற்கு நிரந்தர வைத்தியத்தை சித்த மருத்துவத்திலே கண்டுபிடித்து, அதனால் மக்கள் பலன் அடைந்திருக்கிறார்கள். அதேபோல, சித்த வைத்தியர்கள், ‘இந்தப் பன்றிக் காய்ச்சலுக்கும் எங்களிடம் நிவாரணி இருக்கின்றது’ என்று சொல்கின்றார்கள். அத்தகைய ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த அரசாங்கம் ஊக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக