#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

24 ஏப்ரல், 2012

பழம் சாப்பிட்டா உடல் ‘பிட்’ ஆகலாம்!



Apple  
உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒருவகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர்
நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரியவந்துள்ளது. பழம், காய்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை, டைப் 2 நீரிழிவு ஏற்படுவதில்லை, சில புற்றுநோய்கள் குணமடைகின்றன. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். உடல்பருமன் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சுவையான நொறுக்கு தீனி

நொறுக்குத்தீனி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை. பழங்களையே நொறுக்கு தீனிபோல சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரீஸ், கிவி, வாழைப்பழம் போன்ற பழங்களை அழகாக கட் செய்து அலங்கரித்தால் சுவையான நொறுக்குத்தீனி ரெடி. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள், போலேட் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த பழங்களை நீங்கள் கட் செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எடுத்து சாப்பிடலாம்.

தினசரி லஞ்ச் நேரத்தில் சாலட் போலவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பழங்களுடன் முந்திரி, பாதம், பிஸ்தா, போன்றவையும், கிரீம் கலந்து ஆரோக்கியமான டெசர்ட் ஆக சாப்பிடலாம்.

ப்ரேக் ஃபாஸ்ட் பழங்கள்

காலை உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. ப்ரெட், வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. அதேபோல் உலர் பழங்களையும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆப்பிள், இனிப்பு கிழங்கு போன்றவை சத்தான காலை உணவாகும்.

பழச்சாறு அவசியம்

டின்களில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யப்படும் பழச்சாறுகளில் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடிய ரசாயனங்கள்தான் அடங்கியுள்ளன. ப்ரெஸ்சாக நாமே தயாரித்து அருந்து பழச்சாறுதான் நன்மை தரக்கூடியது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல்பருமன் போன்ற நோய்கள் தாக்குவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உங்களுடைய தினசரி உணவு முறையில் ஒரு டம்ளர் பழச்சாறு சேர்த்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக