சென்னை - இலங்கையின் தம்புல்ல ஜும்மா மசூதி தகர்க்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக வரும் சனிக்கிழமை (28/04/12) மாலை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இது பற்றி அதன் பொது செயலாளர் இக்பால் தெரிவிக்கையில்,”கடந்த சில வருடங்களாகவே இலங்கையில் இஸ்லாமியர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் முதல் படியாக கடந்த சில மாதங்களுக்கு முன் அங்குள்ள தர்காவை தகர்த்துள்ளனர். அதனைக் கண்டிக்காமல் விட்டதின் காரணத்தால் புத்தபிக்குகளின் புனித பூமி என கூறி இன்று தம்புல்ல தொழுகை பள்ளியை தகர்த்துள்ளனர். இதனைக் கண்டிக்கும் விதமாக மாபெரும் முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளோம்” என்றார் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக