
சேலம் - சேலம் ஸ்ரீரத்தினவேல் கவுண்டர் திருமண மண்டபத்தில் பா.ம.க. சார்பில் பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில தலைவரும், பா.ம.க கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான கோ.க.மணி தலைமை வகித்தார்.
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வரவேற்றார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, "புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. நாங்கள் பெண்ணாகரம் இடைத்தேர்தலில் மட்டும் தான் போட்டியிட்டு இருந்தோம். இனி எந்த இடைத் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஒரு ஓட்டுக்கு ரூ.5ஆயிரம் தருவார்கள்’’ என்று கூறினார்.
ஏற்கனவே அதிமுக சார்பில் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், எதிர்கட்சிகள் சார்பில் உறுதியான நிலைப்பாடு இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக