கோவில் கருவறையில் பெண்களை 'செக்ஸ்' உறவு கொண்டு, தான் கெடுத்த பெண்களின் சம்மதத்தோடு நடந்த 'உடலுறவு என ஆதாரத்திற்கு வீடியோ எடுத்த 'அர்ச்சகர் தேவநாதன்'
மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ‘இளம் பெண்களை’ ஆசைகாட்டி, போதையூட்டி, கற்பழித்து விட்டு, அவர்கள் சம்மத்தத்துடன் தான் உடலுறவு நடந்தது என்று கூறி விடுவதால் 98% சதவீதம் ‘கற்பழிப்புக்கள்’ அமெரிக்காவில் ‘தண்டிக்கபடுவதில்லை’. உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதிகளில் கென்னடி, கிளிண்டன் ஆகியோர், முறையே மர்லின் மன்றோ மற்றும் மொனிக்கா லேவின்ஸ்கி ஆகியோரிடம் ‘தங்களது’ திருமணத்திற்கு வெளியே ‘செக்ஸ்’ உறவுகளில் ஈடுப்பட்டனர்.
மர்லின் மன்றோ, அகால மரணமடைத்தபோது ஜனாதிபதி கென்னடியுடன், கொண்ட தவறான தொடர்பே அவளது மரணத்திற்கு காரணம் என பரவலாக பேசப்பட்டது.இது போன்றே முன்னாள் ‘ஜனாதிபதி கிளிண்டன்’ விடயத்திலும், ‘மொனிக்கா லேவின்ஸ்க்யியுடன்’ திருமணத்திற்கு வெளியே தவறான உறவு கொண்டது ‘நிருபிக்கப்பட்டவுடன்’, ஒரு போது மன்னிப்பு கேட்டு விட்டு, தனது மனைவி ‘ஹில்லாரி கிளிண்டனை’, ஜனாதிபதியாக்கும் முயற்சியிலும் இடுபட முடிந்தது.
சென்ற மாதம் கூட , ‘உலக வங்கி தலைவனாக’ செயல்பட்டு ‘கேவலப்பட்ட டொமினிக் ஸ்ட்ராஸ் கான்’ விடயத்திலும், கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணை ‘விபாச்சாரி’ என்று கூறி அமெரிக்க நீதிமன்றம் சாதாரண வழக்காக மாற்றியது.
இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு பின்னர் திருமண வாழ்க்கை அமையாமல், ‘விபச்சாரத்திற்கு’ தள்ளப்படும் கொடூரத்துடன் சமூகத்தில் கடும் ‘இழிவுகளுக்கு’ ஆளாக்கப்படுவதால் ‘வாழ முடியாத நிலைக்கு’ செல்கின்றனர்.
இப்போது அமெரிக்காவின் இந்த கொடூர ‘கற்பழிப்பு கலாச்சாரம்’ இந்தியாவிலும் வெகு வேகமாக பரவி வருகிறது. இளம் பெண்களை ‘பணம் மற்றும் உடல் அழகால்’ ஆசை காட்டி, இழுத்து சென்று ‘கற்பழித்து விட்டு’, பெண்ணின் சம்மதத்துடன் ‘கற்பழிப்பு’ நடந்த ஆதாரத்திற்கு ஓர் ‘காணொளியையும்’ எச்சரிக்கையாக எடுத்து, சட்டப்படி ‘தப்பிவிடுகிரார்கள்’.
இதற்கு ஒரு நல்ல உதாரணம், காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகரான ‘தேவநாதன்’. தான் வேலை பார்த்த கோவிலின் ‘கருவறையில்’ பல திருமணம் ஆன, மற்றும் ஆகாத பெண்களுடன் உடலுறவு கொண்ட அர்ச்சகர் ‘தேவநாதன்’, தனது ‘செக்ஸ் லீலைகளை’ வீடியோ எடுத்து வைத்திருப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருந்தான்.
அர்ச்சகர் ‘தேவநாதன்’, வீடியோ எடுத்ததற்கு காரணம், அதை பின்னர் பார்த்து ரசிப்பதும், விலைக்கு விற்பதும் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மை காரணம், வீடியோவை ஆதாரமாக வைத்து ‘பெண்களை மிரட்டி’ தொடர்ந்து ‘கற்பழிப்பதும்’, பின்னர் மாட்டிக்கொண்டால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப அதை பயன்படுத்தி கொள்வதும் தான் உண்மை நோக்கம்.
அர்ச்சகர் தேவநாதன் விடயத்தில் இவ்வாறே வழக்கு நடைபெற்று செங்கல்பட்டு மகளீர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, இழுபறி நிலையில் உள்ளது.
இந்திய குற்றவியல் சட்டப்படி 16 முதல் 18 வயதுடைய பெண்களின் சம்மதத்துடன் உறவு கொள்வது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375 ன்படி தண்டிக்க கூடிய குற்றம் ஆகாது என்றுள்ளது.
இந்த சட்டத்தால் ‘கற்பழிப்பு’ குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. திருமணம் ஆன மற்றும் ஆகாத இளம் பெண்கள் இவ்வாறு ‘கற்பழிக்கப்படும்’ நிலையில் ‘மானத்திற்கு’ அஞ்சியும், சட்டம் உதவாததாலும் புகார் கொடுப்பதில்லை.
எனவே இந்த சட்டத்தை, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்க கோரி சென்னை வழக்கறிஞர் ஜெயருத்ரன் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வழக்கறிஞர் ஜெயருத்ரன் தனது பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாக 16 -18 வயது பெண்கள் பலரை, ஆண்கள் கடத்தி உடலுறவு கொண்டு விட்டு, அவர்களை நிர்கதியாக விட்டு விட்டு செல்வது அதிகரித்து வருகிறது. நீதிமன்றங்களில் இத்தகைய வழக்குகள் அதிகளவில் தாக்கலாகும் நிலையில், காதல் என்ற போர்வையில் இக்காமச்சம்பவங்கள் நடக்கிறது.
இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானா பெண்கள் திருமணம் ஆன நிலையில், இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாழிகளை நம்பி ஏமாறுகின்றனர். இவ்வழக்குகளில் ‘கற்பழிக்கப்பட்ட’ பெண்கள், “என் சம்மதத்துடன் உறவு கொண்டதாக” கூறினாளே ‘கற்பழித்த’ ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை.
எனவே, பெண்களின் சம்மதம் இருந்தாலும் கூட, உடலுறவு கொண்டு ஏமாற்றுவது அடிப்படை உரிமையை மீறிய செயல். இந்திய தண்டனை சட்டம் 361, 366, 372 பிரிவுகள், 18 வயதுக்கு உட்பட்டவர்களை மைனர் பெண்கள் என குறிப்பிடுகிறது.
இதற்கு எதிராக 375 வது பிரிவில் 16-18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது, தண்டிக்க கூடிய குற்றம் இல்லை என கூறப்படுகிறது.
இளம் பெண்கள் வழிதவறுவது இயற்கையானது என்னும் நிலையில், அவர்களை பாதுகாப்பது சட்டத்தின் பொறுப்பு. 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள், திருமணம் செய்ய கூடாது என வலியுறுத்தும் சட்டம், உடலுறவு கொள்வதை மட்டும் எப்படி அனுமதிகிறது?
இவ்வாறான திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட ‘செக்ஸ்’ உறவில் பிறக்கும் குழந்தைகளை குப்பை தொட்டிகளில் வீசுவது நடக்கும் நிலையி, அதை சட்டம் எவ்வாறு அனுமதிக்கிறது.
பெண்களை பாதுகாக்கும் கடமை அரசுக்கு இருக்கும் நிலையில், இந்திய குற்றவியல் சட்டம் 375 வது பிரிவில் மைனர் பெண் சம்மதத்துடன், ஒருவர் உடலுறவு கொள்வது தண்டிக்க கூடிய குற்றம் இல்லை என்று கூறும் சட்டம் , அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ள அந்த போது நல மனுவை, விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து உரிய பதிலை பெறும்வகையில், மத்திய சட்டம், நீதித்துறை செயலர், பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர், தமிழக அரசு தலைமை செயலர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.
சமீபமாக, இந்திய தொலைக்காட்சிகளில் பரபரப்பாக காட்டப்பட்டு சுவாமி நித்யாந்தா மற்றும் நடிகை ரஞ்சிதாவின் படுக்கையறை சல்லாப காட்சி பற்றி விமர்சனம் செய்த சிலரும் இது போன்ற கருத்தை கூறியே தவறான உடலுறவை ஞாயப்படுத்த முயன்றனர்.
துறவி என்று தன்னை கூறிக்கொள்ளும் நித்யானந்தாவும், நடிகையான ரஞ்சிதாவும் விருப்பபட்டு ‘உடலுறவு’ கொள்வது அவர்களது உரிமை என்றும், அந்த காட்சியை வெளியிட்டதுதான் தவறென்றும் இந்த ‘கயவர்கள்’ வாதிட்டனர். அதாவது இவர்கள் விரும்பிய வகையில் ‘உடலுறவை’ எவரோடும் அனுபவிக்கலாம் என்ற ‘ப்ரீ செக்ஸ்’ (Free Sex) கொள்கையைத்தான் இவ்வாறு நாகரீகமாக வெளிப்படுத்துகின்றனர், இந்த சமூக விரோதிகள்.
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இது விடயமாக சம்பந்தப்பட்ட பெண்களுடன் ஒரு ‘செக்ஸ் ஒப்பந்தம்’ தயாரிக்கப்பட்டு, அதுவும் நித்யானந்த ஆசிரம செயல்பாடுகளுக்கு ஆதரவான சட்ட பூர்வமான ஒப்பந்தமாக காட்டப்பட இருந்ததை ‘கர்நாடக காவல்துறை’ கண்டறிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகை ரஞ்சிதவே இது பற்றி குறிப்பிடும் போது, தனது வாழ்க்கை முழுவதும் சீரழிந்து விட்டதாக கூறியுள்ளார், என்பதும், தான் ‘சந்நியாசியாகி’ நித்யானந்தவுடனே தொடர்ந்து சேவை செய்யப்போவதாக நடிகை ரஞ்சிதா கூறியிருப்பது, இவ்வாறாக சிக்கும் பெண்களின் எதிர்காலம் எப்படியெல்லாம் குடும்ப வாழ்க்கையிலிருந்து ‘பிடுங்கப்பட்டு’ சீரழிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
இத்தகைய பெண்கள் ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ (Stockholm syndrome) என அழைக்கப்படும் ‘கடத்தியவனிடமே’ சரணடையும் நிலையை அடையும் நிர்பந்தத்தை பார்க்கிறோம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் விடயத்தில் நடிகை ரஞ்சிதாவை விட மோசமாக பாதிக்கப்பட்ட ‘மோனிகா லேவின்ஸ்கி’, ரஞ்சிதா போன்று சரணடைய கூட இடமில்லாமல் (இதனால் நித்யானந்த யோக்கியன் என்று அர்த்தமல்ல) ‘லண்டனுக்கு’ தப்பி சென்று தனது மீதி வாழ்நாளை கழிக்க வேண்டிய அவலத்தில் இருப்பதும் கண்கூடு.
நன்றி.தமிழ்.யுனிட்டி மீடியா நியூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக