கர்லா வனீஸ்ஸா பரீஸ் என்பது அந்தப் பெண்ணின் பெயர். கர்ப்பிணியான அவரை பரிசோதித்த போது அவருடைய வயிற்றில் ஒன்பது குழந்தைகள் வளர்ந்து வருவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.6 பெண்குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பரீஸின் வயிற்றில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த அப்பெண்ணின் வயிற்றில் 9 குழந்தைகள் வளர்ந்து வருவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பெண்மணி டெக்ஸாஸ் அருகில் உள்ள கோகுலியாவைத் சேர்ந்த கர்லா வனீஸ்ஸா பரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தற்போது மாநிலத் தலைநகர் சால்டில்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மே 20-ம் தேதி அளவில் குழந்தைகள் பிறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக