#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

06 பிப்ரவரி, 2011

அதிமுக பொதுச்செயலளாரை ம.ம.க நிர்வாகிகள் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் 5.2.2011 சனிக்கிழமை அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பி. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அதிமுக பொருளாளர் முன்னாள் அமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர்.


அப்போது சிறுபான்மை மக்களின் சார்பான கோரிக்கைகள் அடங்கிய கடிதத்ததை அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவிடம் தமுமுக & மமக நிர்வாகிகள் வழங்கினர். மேலும் தேர்தல் வியூகங்கள் பற்றியும் விரிவாகப் பேசினர்.

04 பிப்ரவரி, 2011

தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் மமக குழுவினருடன் பேச்சுவார்த்தை

வரும் சட்டமன்றத் தேர்தலில் சகல துறைகளிலும் மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களால் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை கொண்ட அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலி, ஒ.யு. ரஹ்மதுல்லாஹ். ப. அப்துல் சமது, எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோரை உள்ளடக்கிய மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவினர் அதிமுக தலைமையகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிப வியுகங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது. சிறுபான்மை சமுதாயத்தின் கோரிக்கைகளும் அதிமுக குழுவினருடன் மமக தலைவர்க எடுத்துரைத்தார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி போ்ட்டியிட விரும்பும் தொகுதிப் பட்டியல் அதிமுக குழுவினரிடம் வழங்கப்பட்டது. இது முதல் சுற்று பேச்சு வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சு வார்த்தை முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அதிமுக குழுவினருடனான பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்ததாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 234 தொகுதிகளிலும் வெற்றிப் பெற் பாடுபடுவோம். பீகாரைப் போல் எதிர்கட்சியை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதிமுக கூட்டணி வெற்றிப் பெற் பாடுபடுவோம் என்று குறி்ப்பிட்டார்.

03 பிப்ரவரி, 2011

குடிபோதையில் இருக்கும் டிரைவரை காட்டிக் கொடுக்கும் சூப்பர் கார்; அமெரிக்காவில் தயாரிப்பு!!


தற்போது மது அருந்தி விட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் விபத்துகள் அதிகரித்து பலரின் உயிர்கள் பறிபோகின்றன. அதை தடுக்கும் வகையில் புதிய வகை சூப்பர் கார் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குடிபோதையில் இருக்கும் டிரைவரை கண்டுபிடித்து தருகிறது. இந்த அதிநவீன காரில் மனித உடலின் உணர்வுகளை பதிவு செய்யக் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. டிரைவரின் மூச்சுக் காற்று, அல்லது தோல் பகுதியின் உணர்வு மூலம் டிரைவர் குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறிய முடியும்.

இது தவிர காரின் சக்கரங்களை இயக்க கூடிய ஸ்டீயரிங், மற்றும் கதவு பூட்டுகளிலும் பொருத்தலாம். அதன் மூலம் டிரைவரின் ரத்தத்தில் கலந்து இருக்கும் ஆல்கஹாலின் விகிதத்தை கண்டறிந்து அவர் போதையில் உள்ளாரா? என கண்டறிய முடியும்.

குடிபோதையில் இருப்பது தெரிந்தால் காரை ஓட்ட அந்த டிரைவரை அனுமதிக்காமல் வேறு ஒருவரை ஓட்ட செய்யலாம். இந்த கார் வெள்ளோட்ட சோதனை நடந்தது. அமெரிக்காவில் உள்ள வால்கம் நகரில் நடந்த இந்த சோதனை ஓட்டத்தை அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ராய் லாகூட் நேரில் வந்து பார்த்தார்.

இக்காரை தயாரித்த நிபுணர்களை அவர் வெகுவாக பாராட்டினார். இந்த புதிய முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. இது போன்ற காரை புழக்கத்தில் விடவேண்டும். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.

நான் போலீஸ் இல்லை பொருக்கி!!!


கொச்சி,பிப்.3:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னை சிக்கவைத்தது முஸ்லிம் என்ற ஒரேக் காரணத்திற்காகத்தான் என அவ்வழக்கில் சமீபத்தில் விடுதலையான அப்துல் கலீம் தெரிவித்துள்ளார். கொச்சியில் ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: "கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்தவுடன் சிலமணி நேரங்களுக்குள்ளாகவே போலீசார் என்னைத் தேடிவந்தனர். என்னைக் கைதுச் செய்தபிறகு விசாரணை நடத்த போலீசாருக்கு விருப்பமில்லை. மாறாக, எப்படியாவது குண்டுவெடிப்பை நடத்தியது நான் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் அவர் குறியாக இருந்தனர்.

இதற்காக அவர்கள் என்னை கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாக்கினர். என்னை தனிமைச் சிறையில் அடைத்தனர். ஐந்து அல்லது ஆறுதினங்கள் என்னை அவர்கள் நிர்வாணமாக சிறையில் அடைத்தனர். எனது மர்மஸ்தானங்களிலும், தலையிலும் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தனர். 18 மாதம் நான் சிறையில் வாடினேன். பட்டப்படிப்பை தொடர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அவர்கள் என்னைக் கைதுச் செய்தனர். சிறையிலிருந்து நான் முதலில் விடுவிக்கப்பட்ட போதிலும் போலீசாரின் கொடுமை தொடர்ந்தது. பின்னர் நான் மருத்துவம் படிப்பதற்கு மெரிட்டில் அட்மிஷன் கிடைத்தது. ஆனால், என்னை பயங்கரவாதி என அழைத்து போலீஸ் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் என்னை மருத்துவம் படிக்க அனுமதிக்கவில்லை.

பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட எனது சகோதரர் காஜாவை நான் சந்திக்கப் போனபொழுது என்னை போலீசார் டார்ச்சர் செய்தனர். சிறையில் எனது சகோதரனுக்கு மொபைல் போனை கொண்டு கொடுத்ததாக கூறி அவர்கள் என்னை மீண்டும் சிறையிலடைத்தனர். எனது உறவினர்கள் உள்பட பலரையும் பொய்வழக்கில் சிறையிலடைத்தனர்.

வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வழக்கில் என்னை குற்றவாளியாக சேர்த்தபொழுது வீட்டை காலிச் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையிலிருக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுவாமி அஸிமானாந்தாவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தார். சக மனிதர்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்ள இஸ்லாம் கற்றுத் தருகிறது. அதனடிப்படையில்தான் நான் அஸிமானந்தாவுடன் நடந்துக் கொண்டேன். மூன்று தினங்கள் மட்டுமே எனக்கு அஸிமானந்தாவுடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

எவரும் தீவிரவாதிகளாக மாறுவதற்கு விரும்புவதில்லை. அவர்களை சமூகம்தான் அவ்வாறு ஆக்குகிறது. உண்மையான பயங்கரவாதிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை கைதுச்செய்து பயங்கரவாதிகளாக மாற்ற போலீஸ் முயற்சி செய்கிறது. நான் இனிமேல் எல்.எல்.பி(சட்டப்படிப்பு) படிப்பை தொடரப் போகிறேன். எனது அனுபவத்தை உலகம் முழுவதும் அறிவிக்க விரும்புகிறேன்." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

http://food.sify.com/cmsimages/media/apr2009/media/recipe/177995-curd.jpgதயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில் க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

நன்றி. தமிழ் சாரல்

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள....


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

நன்றி : அப்துல் அலீ்ம், ஸவுதி.


02 பிப்ரவரி, 2011

கொடுக்கல்-வாங்கலில் சாட்சி தேவை

பெங்களூர் MS. கமாலுத்தீன்
வாழ்க்கையின் பாதி பலம் நம்பிக்கை, நாளை நாம் நிச்சயம் இருப்போம் என்ற நம்பிக்கையே நம்மை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கஷ்ட நிலையை மாற்றி அமைக்கத்தானே மனிதன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். நாளை நல்ல நிலைக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை என்னும் உந்து சக்தி உள்ளே சுழன்று கொண்டிருப்பதால்தானே இந்த ஓட்டம். நன்றாக இருப்பவனும், இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவே இடைவிடாது போராடுகிறான். போட்டியும் பொறாமையும் மிகுந்த போராட்ட வாழ்க்கையில் ஹலாலாக சம்பாதிப்பதே சவாலான விஷயம். சத்தியங்களும், வாக்குறுதிகளும் சர்வ சாதாரணமாக மீறி, ஏமாற்றி பிழைப்பதை பிழையாக எண்ணாமல் பெருமையாக நினைப்பவர்கள் பெருகிவரும் காலத்தில் நாமும் வாழ்கிறோம்.

வான்மறை தந்த வழி முறையை, தூதர்(ஸல்) அவர்களின் துணையோடு செயல்படுத்தினால் சிரமங்கள் இல்லாமல் சிறப்பாகவே வாழ்ந்து போகலாம். “கொடுக்கல் வாங்கல் சிறியதோ பெரியதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்!அ(வ்வாறு எழுதுவ)து அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும், சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும்,நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதற்கு மிக நெருக்கமானதுமாக இருக்கும்” (அல்குர்ஆன் 2:282)

இவ்வசனத்தை செயல்படுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட சிரமங்கள் ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் நிறையவே நிகழ்ந்துள்ளது. முட்டி விட்டு குனிந்து செல்பவர்கள்தாம் நாம். வலியை மட்டும் நினைவில் நிறுத்தியவர் எச்சரிக்கையோடு எப்போதும் இருப்பார். மறந்தவர்; காயத்தோடு காண்பது கண்கூடு. இறையச்சம் இல்லாதவர்கள் தாம் ஏமாற்றுகிறார்கள். நம்பிக்கை துரோகத்தை நடுங்காமல் செய்கிறார்கள். இத்தகையவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. தரித்திரம் அவர்களை தொடரவே செய்யும்.

அன்னியர்களிடம் எழுதி வாங்கலாம், கொடுக்கல்-வாங்கலை, அண்ணியோன்யமாக இருப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்வது? உறவுகளும், நட்புகளும் உரசிக் கொண்டு எதிரிகளாக மாறி போனதற்கு “அண்ணியோன்யம்” அசைக்க முடியாத நம்பிக்கையும் எழுதி வாங்க தடையாக இருப்பதாக நினைக்கிறோம். இழப்பு ஏற்படும் போது, ஏமாற்றப்பட்டு நிற்கும்போது ஏற்படும் அவமானமும், வேதனையும் எழுதி வாங்கியிருந்தால் இந் நிலைக்கு ஆளாகி இருக்காமல் தப்பியிருக்கலாமே என எண்ணத் தோன்றும். இப்பிரச்சனைக்கும் நெறிநூலே வழிகாட்டுகிறது.

நபிமார்களின் சரித்திரத்தை வழிநெடுக அல்லாஹ் சொல்லும்போது, வெறும் சம்பவங்களை மட்டும் சொல்லாமல் பல சங்கதிகளையும் சேர்த்தே சொல்கிறான். யாஃகூப்(அலை) அவர்க ளின் முதல் மனைவியின் பிள்ளைகள், இரண்டாவது மனைவியின் பிள்ளையான யூஸுஃப் (அலை) அவர்களை விளையாட அழைத்து சென்று, கிணற்றில் தள்ளிவிட்டு, ஓநாய் கடித்து விட்டதாக ஒப்பாரி வைத்தார்கள். பொய் ரத்தத்தை சாட்சியாக்கினார்கள். அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு, புன்யாமீனை அழைத்து செல்ல அனுமதி கேட்டார்கள் யாஃகூப்(அலை) அவர்களிடம். வலியை நினைவில் வைத்திருந்த அவர்கள் இப்படி சொன்னார்கள்.

“நாம் பேசிக்கொண்டதின் மீது அல்லாஹ்வே (சாட்சியாக) பொறுப்பேற்பவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 12:66) எழுதிக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, அல்லாஹ்வை சாட்சியாக்குவதன் மூலம் பாதுகாப்பை பெறுகிறோம். “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு உள்ள வலிமை மிகப் பெரியது; சொற்களால் விளங்க வைக்க முடியாது. அது ஒருவகையான அனுபவம். இறையச்சம் உடையவர்களுக்கு இவ்வகையான அனுபவங்கள் ஏற்படும். மேலும் அல்லாஹ்வே சாட்சியாளனாக இருக்கும்போது வருத்தம் ஏற்படாது. அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

மூன்று நபர்களுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்.
1. என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்
2. சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்
3. கூலிக்கு ஒருவரை அமர்த்தி அவரிடம் வேலை வாங்கி கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்
நபி வழி செய்தியாளர்: – அபூஹுரைரா(ரழி) நபி வழி தொகுப்பு நூல்: புகாரீ 2270/2

நெறிநூல் தந்த வழிமுறையும், தூதர்(ஸல்) அவர்களின் செயல்முறையும் பின்பற்றும்போது பெரிய வருத்தங்களுக்கு இடமே இல்லை. வல்ல ரஹ்மான் இதற்கான வழியை எல்லா முஸ்லிம்களுக்கு வழங்க “துஆ’ செய்வோம். ஆமீன்.

நன்றி- ரீட் இஸ்லாம்.நெட்

சுற்றுச்சூழல் பாதிக்காத "ஏர்கூலர்' கண்டுபிடிப்பு!! மதுரை மாணவி சாதனை!!


மதுரை பிப்,1: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நவீன, "ஏர்கூலர்' உருவாக்கியதற்காக, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்ரியாவுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.ஏசி'யை பயன்படுத்துவதால் குளோரோ புளூரோ கார்பன்களின் அளவு அதிகரிக்கிறது. ஏர்கூலர் மூலம் ஓசோனில் மாற்றம் ஏற்படுகிறது. "ஏசி'க்கு மாற்றாக, அதே நேரம் ஏர்கூலரை புதிய விதமாக மாற்ற முயற்சித்தேன். களிமண் பானை, டியூப்கள், மின்விசிறி, தாமிர டியூப்கள் இவற்றின் மூலம் நவீன ஏர்கூலரை உருவாக்கினேன். வெட்டிவேர் மற்றும் நமக்குப் பிடித்தமான மூலிகைகளை ஏர்கூலரில் அடைத்தால், வெளியேறும் காற்று நறுமணமாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி வெப்பநிலையே இருப்பதால், உடலுக்கு இதமாக இருக்கும்.இந்த காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. குறைந்தபட்சம், 80 வாட்ஸ் மின்சாரம் போதும். 2,500 முதல் 3,500 ரூபாய்க்குள் செய்து விடலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கில்லாத இந்த ஏர்கூலருக்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது என்று சத்யப்ரியா கூறினார்.

மலேகான் குண்டுவெடிப்பு!! ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy__ngkE6V8xl9cZ464mWOU11kMR6XqS6X8r6dMrx5XtMWZJ29EA_VbZNeTPu1Rjt_CSwWlg3n4C_JU7KqnmbRpN3liWtdAd9tGktxV84X33_JmmyW103MAtKhvfxtwnMgurxEWlqi_2w/s1600/RSS.jpgமும்பை,பிப்.2: 2008-ம் ஆண்டில் நடைபெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரவீண் முத்தலிக் கைதுச் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்துவந்த பிரவீணை கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் லோககில் வைத்து மஹாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைதுச் செய்தனர். மஹாராஷ்ட்ரா சட்டவிரோத செயல் தடுப்புச்சட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 14-ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவருடன் சேர்த்து மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மலேகானில் குண்டுவெடிப்பு நிகழும்பொழுது இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்தின் அந்தரங்கச் செயலாளராக பணியாற்றியவர்தான் பிரவீண். இவ்வழக்கில் சதித்திட்டத்தை வெளிக்கொணர்வதில் பிரவீணின் கைது உதவிகரமாக இருக்கும் என மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பை திட்டமிடுவதற்கு புனே, நாசிக், பஞ்ச்வாதி ஆகிய இடங்களில் நடந்த ரகசிய கூட்டங்களில் பிரவீண் முத்தலிக் பங்கேற்றுள்ளார். குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை பாதுகாப்பாக வைத்திருந்த வாடகை அறையின் சாவி பிரவீண் முத்தலிக் வசமிருந்துள்ளது. அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்தான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ஃபாரன்சிக் பரிசோதனையில் உறுதியானதாக ராகேஷ் மரியா தெரிவித்தார்.

மெக்கானிக் எஞ்சினீயரிங் பட்டதாரியான பிரவீண் முத்தலிக் அபினவ் பாரத் என்ற பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராவார். இவ்வழக்கின் குற்றவாளிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். பயங்கரவாத பெண் சாமியார் பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோரை முன்னரே ஏ.டி.எஸ் கைதுச் செய்திருந்தது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி வடக்கு மஹாராஷ்ட்ராவின் நாசிக் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறுபேர் கொல்லப்பட்டிருந்தனர். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தொழுகைக்காக செல்லும் மஸ்ஜிதின் அருகில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

01 பிப்ரவரி, 2011

எகிப்தில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

<span title=
பெருங்கூட்டம் கூடியது
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டுமென்று கோரி நடந்துவருகின்ற ஆர்ப்பாட்டங்களில், தலைநகர் கெய்ரோவின் மையப் பகுதியில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் செவ்வாயன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கூடினர்.

கடந்த ஒரு வார காலமாய் நடந்துவருகின்ற ஆர்ப்பாட்டங்களில் மிக அதிகமான மக்கள் கூட்டம் இதுதான்.

தஹ்ரீர் பெருஞ்சதுக்கம் மக்கள் வெள்ளத்ததால் நிரம்பி வழிந்தது, அந்தச் சதுக்கத்தை சுற்றவரவுள்ள வீதிகளிலும் ஏராளமான மக்கள் கூடினார்கள்.

கூடிய மக்களிடையே ஒருவித குதூகலம் தென்பட்டது.

மக்கள் ஒன்றாக சேர்ந்து பாடியபடியும், பதாதைகளையும், கொடிகளையும் அசைத்த படியும் எழுச்சியுடன் காணப்பட்டனர்.

எகிப்தில் கடந்த முப்பது வருட காலத்தில் மக்கள் வாய்திறந்துச் சொல்வதற்கு அஞ்சிய விஷயங்கள் இப்போது கோஷங்களாக ஒலிக்கின்றன.

கோரிக்கை
"சமூகத்துடைய அனைத்து பிரிவு மக்களும் இங்கே கூடியுள்ளனர். அவர்களுடைய ஒரே கோரிக்கை என்னவென்றால், மறுப்பு சொல்லாமல் முபாரக் பதவி விலக வேண்டும், மக்கள் ஜனநாயக ரீதியில் தங்களுக்கு வேண்டுமான ஆட்சியை நியமித்துக்கொள்வார்கள் என்பதுதான்."
ஆர்ப்பாட்டக்காரர்கள்

கடந்த சில நாட்களாக நிலைகொண்டுள்ளது போலவே செவ்வாயன்ரும் அந்தச் சதுக்கத்தின் விளிம்பில் இராணுவ வாகனங்கள், தாங்கிகள் நின்றன. ஆயினும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சிப்பாய்கள் சிநேகமாகப் பழகுவதைக் காண முடிந்தது.

இராணுவத்தினரின் எவ்வித தடங்லும் இன்றி மக்கள் கூடுவதையும் நடமாடுவதையும் அவதானிக்க முடிந்தது.

எதிர்க்கட்சிகளுடன் அரசியல் சீர்திருத்தம் பற்றிப் பேசப்போவதாக துணையதிபர் அறிவித்திருந்தார். ஆனால் முபாரக் பதவி விலகுவதற்கு முன்பாக மற்ற விஷயங்களைப் பற்றி தாங்கள் பேசத் தயாராக இல்லை என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம் செய்தோ பிற உத்திகளைப் பயன்படுத்தியோ ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க முற்படப்போவதில்லை என எகிப்திய இராணுவம் திங்களன்று வெளிப்படையாக அறிவித்திருந்தது.

நியாயமான காரணங்களுக்காக போராடும் தம் நாட்டு மக்களுக்கு எதிராக தாங்கள் செயல்படவில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.

இருந்தாலும், தலைநகரம் கெய்ரோவுக்குள் வருகின்ற நெடுஞ்சாலைகளில் இராணுவத்தினர் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

தலைநகரில் ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கெய்ரோ நோக்கி வரக்கூடிய கார்கள் அனுமதிக்கப்பட்டாலும் பேருந்துகளும் மற்ற பெரிய வாகனங்களும் நிறுத்திப் பரிசோதிக்கப்படுகின்றன.

நன்றி.பிபிசி