#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

15 பிப்ரவரி, 2011

விலைவாசி உயர்வுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு


கடந்த பிப்ரவரி 8 அன்று அதிமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற விலைவாசி உயர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் உற்சாகமாக நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் அதிகளவில் பங்கேற்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மமகவினர் தமிழகமெங்கும் பெருந்திரளாக பங்கேற்றது குறித்து அதிமுகவும் கூட்டணிக் கட்சியினரும் வியந்து பாராட்டினர்.
 

14 பிப்ரவரி, 2011

என்கிரிப்ட் விவகாரம்: பிளாக்பெர்ரி சேவையை நிறுத்தக மத்திய அரசு உத்தரவு


இமெயில், குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு கண்காணிக்க அனுமதிக்காத பிளாக்பெர்ரி போன்கள் இணைப்பை துண்டிக்குமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் மட்டும் 4,00,000 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் பிளாக்பெர்ரி செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் அதிமானோர் பிளாக்பெர்ரி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இணையதள சேவை, இமெயில், குறுஞ்செய்தி, சமூக வலைதள சேவை போன்ற ஏராளமான வசதிகளை தனது செல்போனில் வழங்குகிறது.
இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை- செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெர்ரி மொபைலில் இல்லை.
இதில் ஒருவர் அனுப்பும் எஸ்எம்எஸை அவர் யாருக்கு அனுப்பினாரோ அவரைத் தவிர மற்றவர்களால் இடைமறித்துப் பார்க்க முடியாது. இந்தத எஸ்எம்எஸ் 'என்க்ரிப்ட்' செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சர்வர்கள் கனடாவில் தான் உள்ளன. இதனால் பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ், மெயில் போன்றவற்றை இந்திய உளவுப் பிரிவினரால் இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது.
இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெர்ரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றக்கூடும் என்பதால் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி பிளாக்பெர்ரி கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் சேவைகளை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதற்காக ஜனவரி 31-ம் தேதி வரை கெடு விதித்திருந்தது.
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது,
காலக்கெடு நீட்டிக்கப்படவும் இல்லை. அதே நேரத்தில் சேவையை முற்றிலுமாக ரத்து செய்யவும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசுக்கும், பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தொலை தொடர்பு நிறவனங்களுக்கு உரிமம் அளிக்கும்போதே அதில் செல்போன் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் தேவைப்பட்டால் அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆகையால் தேவைப்படுகையில் வாடிக்கையாளர்களின் கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களை பிளாக்பெரி பகிர்ந்து கொள்ள மறுத்தால் அதன் சேவையை துண்டிக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ஆர்.எஸ்.எஸ். காரர்களே!! நாங்க ரெடி நீங்க ரெடியா?


 

















தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப் பட்டுள்ளதாம். ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ். பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். பயங்கரவாத ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்! வரட்டும் அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார்.

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்துகிறோம் என்று கூறி பார்ப்பனர் ஆதிக்கத்தை மேலாண்மையைக் கெட்டிப்படுத்தும் ஒரு வெறிபிடித்த கூட்டம் ஆகும்.
பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிரம்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண்டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது. பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன் கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால் கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை டெபாசிட் காலியாயிற்று.
இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும், வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம். முதல் கேள்வி பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு, தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா? என்ற கேள்வி எழும். சங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள். கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும். நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

நன்றி :விடுதலை தலையங்கம்,12-02-2011

நீர்த்தேக்கம் விசயத்தில் அமெரிக்காவிடம் பாடம் படிக்குமா? இந்தியா!!














கும்பகோணம்: வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதமாக ரூ. 608 கோடியில் கொள்ளிட கரை பலப்படுத்தும் பணி நடக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை செயலாளர் தனவேல் தெரிவித்தார். வீராணம் மற்றும் பொன்னேரியிலிருந்து மண் கொண்டு வரப்பட்டு கொள்ளிடக்கரைகளை பலப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் கரையோரம் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.


சிந்திக்கவும்: இந்த 608 கோடியில் இருந்து எத்தனை பிரசன்ட் கொள்ளை அடிப்பார்களோ தெரியவில்லை. இந்த சாக்கடை அரசியல் வாதிகள் கொண்டு வரும் நலம் திட்டங்கள் எல்லாம் மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்கத்தானே!! இந்தியாவில் இருக்கும் நீர்வளங்களை முறைப்படி சேமித்தால் போதும் நமது நாடு விவசாயம் மற்றும் குடிநீர் மற்றும் இயற்க்கை வளங்களில் சிறந்து விளங்கும். அமெரிக்காவிடம் இருந்து பாடம் படியுங்கள் இது போன்ற விசயங்களில். அவர்கள் தண்ணீரை எப்படி சேமித்து வைகிறார்கள் என்று மேலே உள்ள படம் அமெரிக்காவின் கலிபோர்னிய மாகணத்தில் ரேட்டிங் என்ற இடத்தில அமைந்த மிக பெரிய அணைக்கட்டு. 

13 பிப்ரவரி, 2011

கொள்ளிடக்கரையை பலப்படுத்த வீராணம் ஏரியில் தூர்வாரும் பணி தீவிரம்

 
 
கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியை ஆழப்படுத்தி அதிக தண்ணீரை தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே கொள் ளிடக் கரையை பலப்படுத்த அரசு சுமார் ரூ.108? கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
 
அதன் மூலம் வீராணம் ஏரி, பொன்னேரி, நாரைக் கால் ஏரி ஆகிய ஏரிகளில் தூர் வாரி அந்த மண்ணை கொண்டு கொள்ளிடக் கரையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கருணா கரநல்லூர் பகுதியில் வீராணம் ஏரியில் தூர் வாரும் பணி தீவிரமாக நடந்தது.
 
பொக்லைன், டிப்பர் லாரி உதவியுடன் மண் அள்ளப்பட்டது. இந்த பணிக்கு வசதியாக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அல்லல்படும் மக்கள்


சிதம்பரம் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு தண்ணீர் வசதி இல்லாததால் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை.
சிதம்பரம்,  பிப். 13:  சிதம்பரம் ரயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தொலைவுக்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் டிசம்பர் 2006-ல் தொடங்கியது.இப்பணி ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் கழித்து முடிவுற்று 2010-ம் ஆண்டு ஏப்ரல்  23-ம் தேதி முதல் பயணிகள் ரயில் ஓடத் தொடங்கியது.அகல ரயில்பாதை அமைப்பதற்கு முன்னதாகவே 2003-ம் ஆண்டு ரூ.55 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.சிமென்ட், இரும்பு போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தால் போதிய தொகை கிடைக்காததால் ஒப்பந்தக்காரர்கள் கட்டுமானப் பணிகளை பாதியிலேயே விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் ரயில்வே நிர்வாகமே கூடுதல் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு சில மாதங்கள் முன்பு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.ஆனால் கட்டடப் பணிகள் முழுமையுறாமல் உள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்டு திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதுபோன்று குடிநீர் வசதி கிடையாது. இதனால் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயில் நிலையத்தில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.எனவே ரயில்வே நிர்வாகம் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை திறக்க வேண்டும் என்பதே பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் கோரிக்கையாகும்.

12 பிப்ரவரி, 2011

லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி எழுச்சி பொதுக்கூட்டம்

லால்பேட்டையில் நடந்த மனித நேய மக்கள் கட்சியின்காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி எழுச்சி
பொதுக்கூட்டம் மிகபெரிய எழுச்சியுடன் நடைப்பெற்றது
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
பொதுக்கூட்டம் புகைப்படங்கள்...

லால்பேட்டை 06/02/2011: லால்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியின் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் முனவ்வர் ஹுசைன் நினைவரங்கம் ஸ்கூல் தெருவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு A.M.முஹம்மது அய்யூப் B.A.,M.Cஅவர்கள்
மாவட்ட பொருளாளர் த.மு.மு.க & ம.ம.க) தலைமை தாங்கினார், A.I.இர்பானுல்லாஹ் BE (நகர பொருளாளர் த.மு.மு.க&ம.ம.க.) கிராஅத் ஓதினார், S.A.முஹம்மது ஹாரிஸ் (நகர தலைவர் த.மு.மு.க &ம.ம.க) வரவேற்புரை நிகழ்த்தினார்.

A.யாசர் அரபாத் .B.B.A.,MC (மாவட்ட செயலாளர் ம.ம.க.)
N.அமானுல்லாஹ் (ஊராட்சி மன்ற தலைவர் &மாவட்ட செயலாளர் த.மு.மு.க ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மௌலவி J.S ரிபாய் அவர்கள், மாநில துணை பொது செயலாளர் த.மு.மு.க.

S.S ஹாருன் ரஷீது அவர்கள், மாநில பொருளாளர் ம.ம.க.

R.M குணங்குடி ஹனிபா அவர்கள், மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.மு.மு.க.& ம.ம.க.
S.M ஜின்னா அவர்கள் மாநில துணை செயலாளர் த.மு.மு.க.
M.H மெஹராஜுதீன் அவர்கள் மாவட்ட தலைவர் த.மு.மு.க.&ம.ம.க
கலந்து கொண்டு சிறப்பு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நன்றிவுரை V.M முஹம்மது ஆஷிக் நூர் (நகர செயலாளர் ம.ம.க) அவர்கள் வழங்கினார்.

முபாரக் விலகல் - இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு!


எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து ஹோஸ்னி முபாரக் விலகி உள்ளதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

முபாரக்கின் பதவி விலகல் ஜனநாயகத்தை நோக்கிய எகிப்தின் பயணத்தின் தொடக்கம்தான். இது முடிவல்ல என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

எகிப்திய மக்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டுள்ளன. இனி எகிப்து பழைய எகிப்தாக இருக்காது என்றும்

வருகிறது, அனைத்து வகை செல் போனுக்கும் ஒரே சார்ஜர்
























அனைத்து வகையான செல் போனுக்கும் ஒரே சார்ஜர் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தபடுகிறது. உலகின் புகழ்பெற்ற செல் நிறுவனங்களான நோகியா, ஆப்பிள், மோட்டோரோலா, எல்ஜி, சாம்சங் உட்பட சுமார் 19 நிறுவனங்கள் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி, இந்த வருட இறுதிக்குள் அனைத்து நிறுவனங்களும் ஒரே வகையான சார்ஜர்களை தான் தயாரித்து விற்பனை செய்யும். இது குறித்த தேவையான நடவடிக்கையை ஐரோப்பிய ஆணையம் முன்னின்று செய்து வருகிறது. இந்த ஒரே சார்ஜர் மூலம், மின் கழிவைக் குறைக்க முடியும் என்றும், செல் போன் உபயோகிப்பாளர்களுக்கும் வசதியாக இருக்கும் என கூறியுள்ளது.



 

11 பிப்ரவரி, 2011

மக்கள் தொகை கணக்கெடுப்பு: இஸ்லாம் - முஸ்லிம் ஒரு முக்கிய திருத்தம்

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதம் என்ற அட்டவணையில் கீழ் இஸ்லாம் என்பதற்கு பதிலாக முஸ்லிம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக  அனைத்திந்திய அளவில் சில முஸ்லிம அமைப்புகள் நமக்கு தகவல் அளித்தன. இந்த தகவல் அடிப்படையில் மதம் என்றே கேள்விக்கு இஸ்லாம் என்பதற்கு பதிலாக முஸ்லிம் என்று கணக்கெடுப்பு படிவத்தில் அச்சிடப்பட்டிருந்ததால் முஸ்லிம் என்றே பதில் தருமாறு தமுமுக சார்பில் கேட்டுக் கொண்டோம்.
இந்நிலையில்   தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்  மதம் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  எனவே தமிழக முஸ்லிம்கள் அனைவரும், மதம் என்ற கேள்விக்கு இஸ்லாம்   என்றே குறிப்பிடவும்.

தமுமுக-மமக மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், ஜமாஅத்
நிர்வாகிகளும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கணக்கெடுப்பாளர்களுடன் உடனிருந்து விபரம் அறியாத முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். முன்னதாக நாளைய ஜும்ஆ தினத்தில் ஜும்ஆ உரைக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் சமுதாய மக்களுக்கு அறிவிப்பு செய்யுமாறு ஜமாஅத் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ் படிவம் டவுன்லோட் செய்ய இந்த சுட்டியை அழுத்துக

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Tamil_HH_Side_A_NT.pdf
http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Tamil_HH_Side_B_NT.pdf

இந்த படிவத்தில் உள்ள மதம் என்ற 7வது  அட்டவணையில் இஸ்லாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளளது.

ஆங்கில படிவம் டவுன்லோட் செய்ய பின் வரும் சுட்டியை அழுத்துக

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/English_HH_Side_A_NT.pdf
http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/English_HH_Side_B_NT.pdf
இதில் religion என்ற 7வது  அட்டவணையின் கீழ் முஸ்லிம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க