#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

18 மே, 2011

தலைமைச் செயலகத்தை இடமாற்ற தடை கோரி வழக்கு!

"சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்ட தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்தை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்" என்றுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்படுள்ளதாவது:

"1640-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோட்டைதான் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஜார்ஜ் கோட்டை, அரசு அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

17 மே, 2011

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்!

மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி  
வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும்  உண்டாவதாக!

இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டு அவனிடமே நமது தேவைகளை பொறுப்புச் சாட்டி அதற்குரிய காரணிகளை இனங்கண்டு  செயல்படுத்துவதாகும்.

16 மே, 2011

மனிதநேய மக்கள் கட்சி முதலமைச்சர் பதவி ஏற்ப்பு வீழாவை புறக்கணிப்பு''

ஜெயலலிதா பதவி ஏற்பில் நரேந்திர மோடி பங்கேற்ற காரணத்தால் தமுமுக மற்றும் ம.ம.கவினர...் தலைவர் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்சா உள்பட யாரும் பதவி ஏற்புவிழாவில் கலந்துகொள்ளவில்லை. முதன் முதலாக வெற்றிபெற்ற ம.ம.கவினர் முதல் பதவி ஏற்புவிழாவையே கொள்கைக்காக புறக்கணித்துள்ளனர். எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.
இது சம்மந்தமான அதிகாரப்பூர்வமான செய்தி இன்று மாலை இன்ஷா அல்லாஹ் வெளிவரும்.

14 மே, 2011

என் தோல்விக்காக கலங்காதீர்கள்...

எம்.தமிமுன் அன்சாரி

அன்பிற்குரிய நண்பர்களே, சகோதரர்களே...

...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.
எத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.

தங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை.

13 மே, 2011

ராமநாதபுரத்திலும் ,ஆம்பூரிலும் மனிதநேயமக்கள் கட்சி அமோக வெற்றி"

இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலியை விட 15,849 ஓட்டுக்கள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்றார். அல்ஹம்து லில்லாஹ்.

மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி (அல்ஹம்துலில்லாஹ்)

ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.அஸ்லம் பாஷா பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.

2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும் 2007 ல் மாவட்ட செயலாளராகவும்இ 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.


12 மே, 2011

துபாயில் முதல் சம்பவம்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தமிழக வாலிபர் குதித்து தற்கொலை


 
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. இந்த கட்டிடம் மொத்தம் 147 மாடிகளைக் கொண்டதாகும்.
 
துபாயில் முதல் சம்பவம்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தமிழக வாலிபர் குதித்து தற்கொலைஇதில் 45 மற்றும் 108 மாடி என இரண்டே இரண்டு மாடிகளில் மட்டும் மக்கள் வசிக்கிறார்கள். மற்ற 145 மாடிகளிலும் பல்வேறு கார்ப்ரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  
 
அரப்டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (வயது 38) என்பவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனம் புர்ஜ் கலீபா கட்டிடத்தின் 120-வது மாடியில் உள்ளது.

10 மே, 2011

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100  சதவிதம் தேர்ச்சி  
 
2100  க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயிலும் லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி   +2 மாணவ மாணவியர் 100  சதவிதம் தேர்ச்சி  பெற்று இருக்கின்றனர்
 
A .M .சமிஹா  -1136          H .R .ஷிரின் பானு -1099                  A.H.ஜீனத்துன்னிஷா -1082
D/O.மர்ஹும்,அப்துல் முனிர்           D/O.ஹபிபுர்  ரஹ்மான்                     D/O.அப்துல் ஹாலித்
வடக்குத்தெரு                    மேலத்தெரு                                         ஹைஸ்கூல் பின்புறம் 
 
                                                                 1000 ABOVE
A .H .உம்மு சல்மா -1064                S .லாமிய பர்வீன்-1059         M .A .அஜிபா பேகம் -1037
 
A .சுமையா பானு -1015                    நஜர்னா சார்மின் -1014
 
                                                                             900 ABOVE
H . மஸ்ரூரா  பேகம் -990                              F .  நிஸ்வானா பானு -927
A .அர்சியா பேகம்- 982                                    A .நஸ்ரின் பானு -925
I.நூருல் ஹய-957                                            A .முசைதக 924
M .H .முனவ்வரா-943                                       J .நஸ்ரின் பெமினா -916
S .சப்ரியா பேகம்-935                                       M .H .ரிபாயா பானு -906
இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று லால்பேட்டை வரலாற்றில் புதிய அத்தியாயமாக 1136 மார்க்குகள் பெற்றது குறித்து பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமதிடம் கேட்டபோது கூறியதாவது:அல்ஹம்துலில்லாஹ்.. கடந்த பத்து வருடங்களில் 1039 மதிப்பெண் தான் அதிகமாக இருந்துள்ளது.இவ்வருடம் புதிய சாதனையை நமது பள்ளி எட்டியிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் மநிலத்திலேயே முதலிடம் பெறும் மாணாக்கர்களை நமது இமாம் கஸ்ஸாலி உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.இந்த சிறப்பான வெற்றியை நமது பள்ளிக்கு பெற்றுத்தந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியகள், நிர்வாகிகள்,பெற்றோர்கள்,ஊர்மக்கள் மற்றும் பள்ளியின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
 
  நன்றி.  லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

மார்பக புற்றுநோய்: விழிப்புடன் இருங்கள்

  சென்னை மார்பக மையத்தின் இயக்குனர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன்:இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது மிக எளிதாக தவிர்க்கக் கூடிய பிரச்னை. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.நாற்பது வயதிற்கு மேல், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை முழுமையாக மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது முக்கியம். மார்பகப் புற்றுநோயை கண்டறிய,

09 மே, 2011

பாபரி மஸ்ஜித் வழக்கு: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு தமுமுக வரவேற்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை.

பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கிய கட்டப்பஞ்சாயத்து பாணியிலான தீர்ப்பிற்கு இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தடையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனமார வரவேற்கிறது.

அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வினோதமானது என்றும்  தகராறுக்குரிய இடத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது  தேவையில்லாத சட்ட தாவாக்களை ஏற்படுத்திவிட்டது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று இவ்வழக்கில் கருத்து தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

12ம் வகுப்பில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை


நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் முஸ்லிம் மாணவிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லிம் மாணவிகள் பெற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும் ரஹ்மத் மெட்ரி்க்  மேநிலைப்பள்ளியில் படித்த மாணவி அய்னுல் மர்லியா தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அப்பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றார். தமுமுக திருவரூர் மாவட்ட துணைச் செயலாளர் தீன் முஹம்மது, முத்துப்பேட்டை  நகரச் செயலாளர் முஹம்மது யாசீன், நகரப் பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரைப் பாராட்டினர். தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தொலைப்பேசி வாயிலாக தனது பாராட்டுகளை மாணவி மர்லியாவிடம் தெரிவித்தார். மாணவி மர்லியா தான் மருத்துவம் படிக்க விரும்புவதாக அப்போது தெரிவித்தார்.