பெங்களூர்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நான் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வர, எனக்கு சிறுவயதில் பேட்டிங் பயிற்சி அளித்த ரமாகாந்த் சார் தான் காரணம் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
05 செப்டம்பர், 2012
'ரமாகாந்த் சார்' அளித்த பயிற்சி தான் எனது இன்றைய நிலைக்கு காரணம்: சச்சின்
பெங்களூர்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நான் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வர, எனக்கு சிறுவயதில் பேட்டிங் பயிற்சி அளித்த ரமாகாந்த் சார் தான் காரணம் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வரும் இவர், அதிக போட்டிகளில் விளையாடியவர், அதிக ரன்களை எடுத்தவர், கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் உட்பட பல சாதனைகளை படைத்தவர்.
04 செப்டம்பர், 2012
அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்!
வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-
ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.
தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
03 செப்டம்பர், 2012
அறிவியல், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சவுதி பெண்கள்
அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் சவுதி அரேபிய பெண்கள் சிறந்து விளங்கு என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
யுனஸ்கோ வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி சமார்பாட்னி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மேற்கத்திய நாட்டு பெண்களை காட்டிலும் சவுதி அரேபிய பெண்கள் அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அதிக அளவில் பட்டம் பெறுகின்றனர்.
சவுதி அரேபியாவில் 40 சதவிகித மருத்துவர்கள் பெண்களே. அறிவியல் படித்த பெண்களில் பலருக்கு சிறந்த மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாம் உபயோகிக்கும் கழிவறையை விட கையடக்கத் தொலைபேசியில் பத்துமடங்கு அதிகம் கிருமிகள்
நாம் உபயோகிக்கும் கழிவறையை விட கையடக்கத் தொலைபேசியில் பத்துமடங்கு அதிகம் கிருமிகள் இருக்கிறது என்று ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடை இல்லாத மனிதன் அரைமனிதன் என்பது பிரபலமான பழமொழி. அதுபோல கையடக்கத் தொலைபேசியின் இல்லாத மனிதன் செல்லாக்காசு என்று புதுமொழி உருவாகும் அளவிற்கு கையடக்கத் தொலைபேசியின் ஆதிக்கம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. கையடக்கத் தொலைபேசியினை புதிது புதிதாக வாங்குவதாகட்டும். அதற்கு டாப் அப் செய்வதாகட்டும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரும் அதை சரியாக செய்வார்கள். தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு சாதனம் இன்றைக்கு பலவிதமான உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
நரேந்திர மோடிக்கு தூக்கு எப்போது...?
“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”
01 செப்டம்பர், 2012
நீங்க 'ரமலான் முஸ்லிமா'????
அஸ்ஸலாமு அழைக்கும்,
இறைவனின் மாபெரும் உதவியோடு அருட்கொடையாம் ரமலானை கடந்து வந்திருக்கிறோம். சற்று பொருத்து யோசித்து பார்ப்போம்!
இந்த ரமலான் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?ரமளானில் அதிகமாக குர் ஆன் ஓதினோம்...
அதிகமாக இரவு வணக்கம் புரிந்தோம்...
தவறாமல் பஜ்ரு தொழுதோம்.....
தான தர்மங்கள் அதிகம் செய்தோம்....
பாவமன்னிப்பு அதிகம் கேட்டோம்...
நன்மைகள் அதிகம் செய்தோம்....
நோன்பு வைத்து கொண்டு டிவி பார்க்காமல் இருந்தோம்........
பொய் பேசுவதை தவிர்த்து கொண்டோம்..
கோபப்படுவதை, சண்டையிடுவதை தவிர்த்தோ அல்லது குறைத்து கொண்டோம்.
வெட்டி பேச்சு பேசுவதை குறைத்து கொண்டோம்....
இறைவனின் மாபெரும் உதவியோடு அருட்கொடையாம் ரமலானை கடந்து வந்திருக்கிறோம். சற்று பொருத்து யோசித்து பார்ப்போம்!
அதிகமாக இரவு வணக்கம் புரிந்தோம்...
தவறாமல் பஜ்ரு தொழுதோம்.....
தான தர்மங்கள் அதிகம் செய்தோம்....
பாவமன்னிப்பு அதிகம் கேட்டோம்...
நன்மைகள் அதிகம் செய்தோம்....
நோன்பு வைத்து கொண்டு டிவி பார்க்காமல் இருந்தோம்........
பொய் பேசுவதை தவிர்த்து கொண்டோம்..
கோபப்படுவதை, சண்டையிடுவதை தவிர்த்தோ அல்லது குறைத்து கொண்டோம்.
வெட்டி பேச்சு பேசுவதை குறைத்து கொண்டோம்....
அஸ்ஸாம் கலவரம் - பிரச்சனை திசை திருப்பப்பட்டது - கல்கி இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி

நேரடியாகப் பிரச்சனைக்கு வருகிறேன். அஸ்ஸாமில் உள்ள வங்காள முஸ்லிம்கள் அனைவரும் ஊடுருவக்காரர்கள்களோ, சட்டவிரோதமாக குடியேறியவர்களோ அல்ல. அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு சென்று குடியேறியவர்கள். அதற்கென்று ஊடுருவல் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றரை கொடி பேர் சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறி இருக்கிறார்கள் என்பது சங்பரிவாரின் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர்கள் அப்படி சொல்வது எல்லையை பாதுகாக்கும் நமது ராணுவத்தை களங்கப்படுத்துவது ஆகும். 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஆகதிகள் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பதும் இந்திரா காந்தி மனிதாபிமானத்தோடு அவர்களை அனுமதித்து மறுவாழ்வுக்கு உதவினார் என்பதும் வரலாற்று உண்மை. ஆனால் வழக்கம்போல பா.ஜ.க. கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை குழப்புகிறது.
நெஞ்சு பொறுக்குதில்லையே…
என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்?
சமாதி வனக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போராடிய எனக்கே சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி,பக்தி மணக்க மயிலிறகு மந்திரங்களும் சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்….
நெஞ்சு பொறுக்குதில்லையே
நபி (ஸல்) பலதார மணம் புரிந்தது ஏன்??

நபி (ஸல்) நல்ல உடல் வலிமையும் திடகாத்திரமும் கொண்ட இளமைக் காலத்தில் தன்னை விட 15 வயது அதிகமான கதீஜா (ரலி) அவர்களுடனே ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள். கதீஜா (ரலி) மரணமான பின்பே ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவரும் வயதில் நபி (ஸல்) அவர்களை விட மூத்தவராக இருந்தார். அதற்குப் பின் தனது வயோதிக காலத்தில்தான் பல திருமணங்களைச் செய்தார்கள். இதை நன்கு சிந்திப்பவர் “நபி (ஸல்) பல திருமணங் களை செய்தது, அதிக ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற் காகத்தான்” என்று கூறவே முடியாது. மாறாக, அதற்குப் பல உயர்ந்த உன்னத நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும் என அறியலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
