#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

13 செப்டம்பர், 2010

தொழுதிடுவோம் வாருங்களேன்..


நிலையில்லாத உலகமதில்
நிரந்தரமின்றி வாழும் நாம்
நித்திய ஜீவன் அல்லாஹுவை
நித்தம் தொழுதிட வேண்டாமா?

நிம்மதியில்லா உள்ளத்தில்
நிலைதடுமாறும் எண்ணங்களை
நேர்மையாளன் அவனிடத்தில்
கூறி முறையிட வேண்டாமா?

அற்பமான இவ்வுலகில் – மிக
சொற்பகாலம் வாழும் நாம் – வெகு
நுட்பமாய் நற்செயல் புரிந்து – இறை
நட்பைப் பெற்றிட வேண்டாமா?

நாளைய நீதி மன்றத்தில்
நேர்மையாளன் முன்னிலையில் – சற்றும்
நிலைகுலையாமல் பதிலளிக்கும்
நெஞ்சுரம் நமக்கு வேண்டாமா?

அல்லாஹ்-வுக்கும் அவன் தூதர்
அண்ணல் நபிக்கும் வழிபட்டு – புனித
அருள்மறை போற்றும் சுவனத்தை – நாம்
அடைந்திட முயல வேண்டாமா?

பாவமறியா புருஷர்களா? நாம்
தவறே செய்யா மானிடரா?
நிறைமனதோடு முறையிடவே – அவனை
நித்தம் தொழுவோம் வாருங்களேன.

இறையில்ல பாங்கோசை இரவு பகல் கேட்கிறதே
நம் காதில் விழவில்லையா?
முறையாகச் சென்றங்கு நிறைவாகத் தொழுதேற
நல்லெண்ணம் வரவில்லையா?

கந்தூரி பெயராலே கச்சேரி நடக்கின்ற
ஊர்தேடி செல்கின்றோமே
பார்க்கின்ற இடமெல்லாம் பள்ளிகள் பலவிருந்தும்
பாராமல் போகின்றோமே

மரணத்தித்தின் பின்னாலே மறுவாழ்வு உண்டென்ற
நம்பிக்கை எழவில்லையா? – அந்த
மஃஷரின் அதிபதி வழங்கிடும் தீர்ப்புக்கு
பலியாவோம் நாமில்லையா?

உத்தமதிருநபியின் உம்மத்து நாமமென்று
உணர்ச்சிதான் வரவில்லையா? அந்த
சத்திய திருநாதர் காட்டிய வழியிலே
தொழுதிடுவோம் வாருங்களேன்

மரித்த நம் உடலதனை மண்ணறையில் வைத்தபின்
நமது நிலை என்னாகுமோ?
முன்கர்-நகீர் கேட்டும் கேள்வி அனைத்திற்கும்
நமது பதில் எதுவாகுமோ?

நாம் மைய்யித்தாகுமுன் – நம்மைத் தொழவைக்கும் முன்
நாம் தொழுதிடல் வேண்டுமன்றோ?
மறுமையின் தலைவாயில் மண்ணறைப் புகுமுன்னே
தொழுதிடுவோம் வாருங்களேன்.

முஸ்லிமாய் பிறந்த நாம் முஸ்லிமாய் வாழ்ந்து – பின்
முஸ்லிமாய் மரித்தல் வேண்டும்
முஃமினாய் சுவனமதை அடைகின்ற பாக்கியம்
நமக்கெல்லாம் கிட்ட வேண்டும் – நாம்

இறுதியாய் விடும் மூச்சு லாயிலாஹ இல்லல்லாஹ்
என்று வெளியாக வேண்டும்
கலிமாவோடு கரைசேர கண்ணியமாய் ஐவேளை
தொழுதிடுவோம் வாருங்களேன்

தன்னை மட்டும் வணங்குவதற்காகவே
இறைவன் நம்மை உருவாக்கினான்
மனு – ஜின் இனத்தாரை இதற்காகவல்லாது
வேறேன் படைப்பாக்கினான்?

இறைவனை வணங்காது இறுமாப்பாய் வாழ்வது – இறை
நிராகரிப் பாகுமன்றோ?
நிறைவாக இறையோனை நித்தம் ஐவேளை
தொழுதிடுவோம் வாருங்களேன்

மண்ணினால் படைத்து நம்மை மனிதானாய் உருவாக்கிய
மறையோனை மறக்கலாமா? – அந்த
மண்ணுக்கே இரையாக்கி மறுபடியும் எழுப்பிடும்
இறைவனை வெறுக்கலாமா?

இன்னுயிர் வாழும் நாம் நாளை இருப்போமா?
எண்ணிடல் வேண்டமன்றோ? – இந்த
உடலினை விட்டுயிர் பிரியுமுன்னே
தொழுதிடுவோம் வாருங்களேன்

மறுமையது உண்மையென முழுமையாய் நம்பிடும்
முஃமின்கள் நாமல்லவா? – அந்த
மஃஷர் மைததானிலே இறைவன் முன் நிலையிலே
நிறுத்தப்படுவதும் நாமல்லவா?

தொழுகையோடு ஏனைய செயல்களுக்கெல்லாம் பதில்
சொல்வதும் நாமல்லவா? – நல்ல
தீர்ப்பினது முடிவதனை தெரிந்திடும் முன்னமே
தொழுதிடுவோம் வாருங்களேன்.

மண்ணறை வேதனையை மறுமைநாள் வரையில் நாம்
அனுபவித்தாக வேண்டும் – இறை
விசாரணைக்காக நாம் மீண்டும் உயிர்பெற்று
எழுந்துதான் ஆக வேண்டும்.

படைத்தவன் கேட்டிடும் கேள்விகளுக்கெல்லாம் பதில்
சொல்லியே தீரவேண்டும் – அந்த
இறுதியுக நாளிலே மோட்சத்தை அடைந்திடவே
தொழுதிடுவோடும் வாருங்களேன்.

சுவனமும், நரகமும் நம்மவர்க்காகவே
படைத்தவன் இறைவனன்றோ?
உலகினில் நாம் செய்த செயல்களின் கூலிகளை
தருவதன் உரிமையன்றோ?

வணக்க வழிபாட்டுடனே மன்னிப்பை கோருவது
மாந்தர்த் கடமையென்றோ? – நல்
சுவனத்தை நாடியே துரிதமாய் ஜமா அத்தாய்
தொழுதிடுவோம் வாருங்களேன்

உலகாசாபாசங்களில் மனதை பறிகொடுத்து – நாம்
மயக்கத்திலாழ்திடாமல்
கேளிக்கை கூத்துகளில் காலத்தை கடத்தியே – நற்
கருமங்கள் செய்திடாமல்

நிலையில்லா வாழ்க்கையில் நிம்மதியிழந்து நாம்
கைசேதமடைந்திடாமல் – உடல்
நலமாயிருக்கையிலே நித்தமும் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்

இறைவன் மேல் விசுவாசம் இதயத்தில் ஏந்தியே
இரவுபகல் தொழுதல் வேண்டும்
இறையச்ச உணர்வோடு இறைத்தூதர் காட்டிய
வழியிலே தொழுதல் வேண்டும்

குறைபாடு இல்லாத நிறைவான தொழுகையாய்
நித்தமும் தொழுதல் வேண்டும்
முறையாக இறைவனை முழுமையாய் ஐவேளைத்
தொழுதிடுவோடும் வாருங்களேன்

தொழுகையை அதனதன் நேரத்தில் தொழுவதே
தொழுகையின் சிறப்பம்சமாம்
தொழுகையை தொழுகின்ற முறையோடு தொழுவதே
தொழுகையின் முழு அம்சமாம்

தொழுகையை இமாமுடன் கூட்டாகத் தொழுவதே
தொழுவோர்க்கு திருப்தி தருமே
தொழுகின்ற மக்களுடன் தோழோட தோள் நின்று
தொழுதிடுவோம் வாருங்களேன்.

பேணுதலில்லாத தொழுகையைத் தொழுவதால்
பயனேதும் கிட்டிடாது
பயபக்தி இல்லாத வணக்க வழிபாடுகளால்
புண்ணியம் கிடைத்திடாது

ஜும்மாஆ -வை மட்டுமே தவறாமல் தொழுவதால் செய்த
பாவங்கள் நீங்கிடாது
படைப்பாளன் அல்லாஹ்வை பயந்து தினம் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்

தொழுகையே இஸ்லாத்தின் தூண் என்று உரைத்த நபி
வாக்கினை மதித்தல் வேண்டும்
நிலைபாடாய் தினம் தொழுது இஸ்லாத்தின் தூணினை
கட்டியவராக வேண்டும்

தொழுகையே இல்லாமல் இஸ்லாத்தின் தூணினை
இடித்தவராகமலே
தொழுகையே சுவனத்தின் திறவு கோல் என்பதால்
தொழுதிடுவோம் வாருங்களேன்

தொழுகையே ஈமானை வலுவாக்கும் ஆயுதம்
தொழுகையே சுவனம் சேர்க்கும்
தொழுகையே மூஃமினை மோட்சத்திலாக்கிடும்
தொழுகையே மூலதனமாம்

தொழுகையே பாவச்சுமைகளைக் களைந்திடும்
தொழுகையே அரணாகுமே
தொழுகையே இருலோக வெற்றியை அடைந்திட
தொழுதிடுவோம் வாருங்களேன்

மறுமை விசாரணையில் இறைவனின் முதல்வினா
நீ தொழுதாயா? என்பதாகும்
தொழுகையே இல்லார்க்கும் அலட்சியம் செய்வோர்க்கும்
இறைத்தண்டனை கடுமையாகும்

மூஃமினை காஃபிரை வித்தியாசம் காட்டுவது
தொழுகை எனும் வணக்கமாகும்
அல்லாஹ்-வின் கிருபையால் அருள் சுவனம் நாடியே
தொழுதிடுவோம் வாருங்களேன்

திருமறை குர்ஆனில் தொழுகையை வலியுறுத்திக்
கூறாத இடங்களில்லை
திருநபியின் போதனையில் திருமறையின் சிறப்புக்களை
சொல்லாதா கிரந்தமில்லை

ஐங்கால தொழுகையின் அழைப்பினைக் கேட்காத
செவிப்புலன் எவர்க்குமில்லை
இறைவனை அஞ்சியே இரவு பகல் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்

இம்மையில் வித்திட்ட மறுமையில் அறுவடை
செய்பவன் புத்திசாலி
பொன்னான நேரங்களில் புண்ணியம் சேர்ப்பவன்
போற்றத்தகு திறமைசாலி

கைவெண்ணெய் இருக்கையில் நெய்ககலைபவன்
கோமாளி ஏமாளியே
காற்றுள் போதே தூற்றிட அழைக்கிறேன்
தொழுதிடுவோம் வாருங்களேன்

நன்றி ; ஜாக்

09 செப்டம்பர், 2010

எல்லாருக்கும் இனிய வாழ்வு மலரட்டும்! அல் ஹைராத் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்



புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

ஏக இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும் எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் ஆகும்.

ஈத்துவக்கும் இன்பம் அறியாரிகொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் என்பார் வள்ளுவர். பிறருக்கு கொடுத்து உதவுவதால் வரும் இன்பத்தை அறியாத வன்நெஞ்சர்கள்தான் தங்கள் செல்வங்களை தாமே வைத்திருந்து பிறகு அதை இழந்து செல்வார்கள் என்பது இதன் பொருளாகும்.
‘‘மாபெரும் உஹது மலை அளவு செல்வம் என்னிடம் தரப்பட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் அதை வைத்திருக்க மாட்டேன், ஏழை எளியோருக்கு தர்மம் செய்து விடுவேன்’’ என்று கூறிய நபிகள் நாயகம் தனது செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிவிட்டு இறுதிவரை எளிமை வாழ்வையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

பல லட்சம் டன் உணவு தானியங்கள் அரசு கிடங்குகளில் புழுத்து வீணாவது ஒருபுறம், பல கோடி மக்கள் வறுமை யிலும், பசியிலும் உழல்வது மறுபுறம் என உள்ள நம்நாட்டு சூழ்நிலை ஈகையின் அவசியத்தை உணர்த்துகின்றது. தனி நபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்திற்கும் ஈகை பண்பு இருந் தாக வேண்டிய அவசியத்தை நாட்டின் நிலைமை வலியுறுத்துகிறது.

நாட்டு மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டு வளமான, நலமான, இணக்கமான வாழ்வை இனிதே வாழ்ந்திட, மகிழ்ச்சி பூக்கள் வாழ்வில் மலர்ந்திட ஈகை பெருநாளில் இதயங்கனிந்து வாழ்த்துகிறோம்.

06 செப்டம்பர், 2010

தமுமுக-வின் அமீரக பொதுக்குழு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல்அய்ன், ராசல் கைமா, உம்மல்குவைன், புஜைரா என அனைத்து மண்டலங்களிலும் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமீரக பொதுக்குழுக் கூட்டம் துபாய் ஈவான் ஹோட்டலில் 03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.



தாயகத்திலிருந்து வருகைப் புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் பொதுக் குழுவில் கலந்துக் கொண்ட அனைத்து மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி மற்றும் இயக்கம் வளர்க்கும் கலை குறித்த பயிற்சியளித்தனர்.




அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. துபை மண்டல தமுமுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டம் இஃப்தார் நிகழ்ச்சியோடு சிறப்புடன் நிறைவடைந்தது.

31 ஆகஸ்ட், 2010

கண்கலங்க செய்த ரமலான் சந்திப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இறைவனின் கிருபையால் 30-8-2010 அன்று 5:00 மணியளவில் துபாய் அல்கூசில் உள்ள பாட்சி சாக்லட் கேம்பில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான தமிழக முஸ்லிம் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியை கேம்ப் த.மு.மு .க பொறுப்பாளர் சகோதரர் கொள்ளுமேடு ஜாக்கிர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.மௌலவி அப்துர்ரஹ்மான் இறைமறை வசனம் ஓதி துவங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அவர்களும் மமகவின் துனைப்போதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்.

சிவகாசி முஸ்தபா அவர்கள் ரமலான் தரும் பாடம் என்ற தலைப்பிலும் தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி அனைவரையும் உணர்வு பூர்வமாக சிந்திக்கவைத்தார்கள்.

மேலும் தமுமுக தமிழக முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்துவரும் பணிகளையும் நினைவுக் கூர்ந்தார்கள். கடந்த பாரளுமன்ற தேர்தலின்போது தமிழக ஆட்சியாளர்கள் கொள்கை சகோதரர்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களையும்,அதை கொள்கை சகோதரர்கள் எதிர்கொண்ட விதத்தையும் எடுத்துரைத்தது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட அனைவரும் இன்றைய சூழ்நிலையில் மமகவின் தேவையை விளங்கினார்கள்.

இப்தார் நிகழ்ச்சியோடு நிறைவுப் பெற இருந்த நிகழ்ச்சி சகோதர்களின் ஆர்வத்தினால் மக்ரிப் தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்தது .என்பது குற்பிடதக்கது



நிகழ்ச்சியில் கொள்ளுமேடு,லால்பேட்டை ,கொடிக்கால்பாளையம்,ஆடூர்,கண்டிவூர், அபிவிர்த்திசுரம்,குளும்மூர்,அன்பகத்துர்,சிர்காழி,சென்னை,ஆகிய ஊர்களை செர்ந்த சகோதர்கள் கலந்துகொண்டு அமர்வுவை சிறப்பித்தனர்.
"அல்ஹம்துலில்லாஹ்"

29 ஆகஸ்ட், 2010

முன்னுரை:

ஜகாத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

1. கடமை:

'முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை என்பதை புரிந்து கொள்ளலாம்.

2. நேரம்:

'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ, திர்மிதி)

நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புஹாரி)

நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.

3. நோக்கமும் பயனும்:

'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும் எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)

இந்த ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம் கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.

4. அளவு:

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்' என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன் தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.

5. கூட்டாக வசூல் செய்வது:

'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)

நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)

நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்' என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.

முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு, 'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய வேண்டும்.

முடிவுரை:

நோன்புப் பெருநாள் தர்மத்தை வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்.

உங்கள் ஜகாத்துல் பித்ராவை அல்ஹைராத் சமுக சேவைக்கு வழங்கி பெருநாள் தர்மம் நமதூர் ஏழைகளுக்கு செல்ல உதவுங்கள்.

தொடர்ப்புக்கு ;050 8909914, 050 5459619, 050 7248799

27 ஆகஸ்ட், 2010

அபுதாபியின் சாய்கோபுரம் கின்னஸ் சாதனை


ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் 160 மீட்டர் உயரமுடைய கட்டிடம் ஒன்று, உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கட்டிடம் என்ற பெருமையை அடைந்துள்ளது.

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான் உலகின் முதல் சாய்கோபுரம் என்ற பெருமையை பெற்றது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் "அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன்" என்ற நிறுவனம் சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி தொடங்கியது.

'கேபிட்டல் கேட்' என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் 160 மீட்டர் உயரமும் 35 மாடிகளையும் கொண்டது. இந்த கட்டடம் 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி மட்டுமே ஆகும்.

12 மாடிகள் செங்குத்தாகவும், மீதம் உள்ள மாடிகள் சிறிய அளவில் சாய்ந்தும் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

ஐந்து நட்சத்திர ஓட்டல்களும், அலுவலகங்களும் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்க்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆகஸ்ட், 2010

உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!



நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும் மதீனா பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.

விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்படுகின்றதாம்.

மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் என்னும் பெரிய பள்ளியில் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்களும், சவூதி கஃவா என்னும் காஃபி வகை பானமும் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள "புனித பள்ளிகள் துறை அமைச்சகம்", மதீனாவாசிகளின் விருந்தோம்பல் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ப நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அனுமதித்துள்ளது. இத்தகவல்களை அத்துறையின் மக்கள் தொடர்பாளர் அப்துல் வாஹித் அல்ஹத்தாப் தெரிவித்துள்ளார்.

மதீனாவாசிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 பேர் கொண்ட குழு, மாலைநேரத்தொழுகைக்குப் பிறகு இதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறது. பகுதி, பகுதியாக, குழு,குழுவாக தினமும் சுமார் 10 இலட்சம் (1மில்லியன்) மக்களுக்கு இஃப்தார் உணவு வழங்கப்படுகிறது.

ஈத்தம்பழம், தயிர், ஷ்ரைக் எனப்படும் ரொட்டி, டக்கா எனப்படும் கஞ்சி போன்ற உணவு, சவூதி கஃவா ஆகிய உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றனவாம். மட்டுமின்றி, 20,000 குளிர்விகளில் புனித ஜம்ஜம் நீரும் வழங்கப்படுகிறது. பெருமளவு மதீனா பெண்களும் இதில் பங்கெடுக்கின்றனர்.

12 நிமிடங்கள் நீடிக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் 2,000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மின்னணு துடைப்பான்கள் மூலம் சுத்தம் செய்கின்றனர். அதன் பின் மஃக்ரிபு தொழுகை முடிந்த பின்னாலும், ஈத்தம் பழங்களும், கஃவா பானமும் வழங்கப்படுகிறதாம்.

நோன்பு துறப்பு மட்டுமின்றி, நோன்பு வைப்பதற்கான சஹர் உணவும், இந்திய மற்றும் சவூதி உணவு வகைகளாக, சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு வழங்கப்படுகிறதாம்.

அல்-அய்னில் இப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்...

23 ஆகஸ்ட், 2010

முஸ்லிம்களுக்கும் மற்றவர்களைப் போன்றே உரிமை உண்டு - ஒபாமா


"தம்முடைய மதத்தைப் பின்பற்றுவதில் மற்றவர்களுக்கு இருக்கும் அதே உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
நியூயார்க்கில், இடிக்கப்பட்ட இரட்டை கோபுரங்களுக்கு அருகில் உள்ள பகுதியொன்றில்,புதிய மசூதி ஒன்றும் (முஸ்லிம்) சமூகக்கூடம் ஒன்றும் கட்டப்படுவதற்கும் அவர் ஒப்புமை அளித்துள்ளார்.

வெள்ளை மாளிகை ஏற்பாட்டில் புனித ரமளான் மாத நோன்பு துறப்பு நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், இக்கருத்தை அவர் வெளியிட்டார்.

பல்வேறு அரபு, இஸ்லாமிய நாடுகளின் தூதர்களும், உயர் அலுவலர்களும், இரண்டு அமெரிக்க முஸ்லிம் எம்.பிக்களுமாக, 100க்கும் அதிகமானோர் இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

"தம்முடைய மதத்தைப் பின்பற்றுவதில் இருக்கும் உரிமையில் புதிய வழிபாட்டுத்தலங்களை நிறுவுவதும், சமூகநலக்கூடங்களை அமைத்துக்கொள்வதும் அடங்கும்" என்றும் ஒபாமா குறிப்பிட்டார் "உள்ளூர் சட்டதிட்டங்களுக்கேற்ப அவை செயற்பட வேண்டும்".

இரட்டைக் கோபுரங்களுக்கு அருகில் மசூதி அமையவிருப்பது குறித்து நியூயார்க் நகரில் விவாதங்கள் அனலடிக்கும் வேளையில் அதிபரின் இந்தப் பேச்சு சுட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

நியூயார்க் நகரின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் அமைய உள்ள மசூதி பற்றிய அதிபரின் இந்த முதற்பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாதப் பிரதிவாதங்கள் கிளம்பியுள்ளன.

முன்னதாக, "இது முழுக்க முழுக்க உள்ளூர் நிலைபாட்டைப் பொருத்தது" என்று வெள்ளை மாளிகை கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி;இந்நேரம்.