#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

08 மே, 2011

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்‏



அஸ்ஸலாமுஅலைக்கும்
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.
As received From: Mashud Khan


பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.

காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

06 மே, 2011

கர்ப்ப காலத்தில் கவலை அடையும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறக்கும்

baby
சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவன ஆராய்ச்சியாளர்கள், வங்காள தேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். குழந்தை பிறப்பதற்கு முன்பு 6 முதல் 8 மாத கர்ப்பிணிகள் 720 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.


அப்போது அவர்களில் பலர் வறுமை, குடும்ப பிரச்சினை போன்ற பலவித சூழ் நிலைகளால் மன அழுத்தம் மற்றும் கவலையுடன் இருந்தனர். சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறந்தது.
அவர்களில் மன கவலையுடன் இருந்த கர்ப்பிணி களுக்கு மிகவும் எடை குறைந்த குழந்தைகள் பிறந்து இருந்தன. இவ்வாறு பிறந்த குழந்தைகள் இறந்தன. எனவே கர்ப்பகாலத்தின் போது பெண்கள் மனக்கவலை எதுவுமின்றி மகிழ்ச்சியாக இருந்தால்தான் ஆரோக்கியமான அதிக எடையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 நன்றி.  மீனகம்   

சிகரட் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்



துர்நாற்றமுள்ள சுவாசம், மஞ்சள் பற்கள், கறைபடிந்த விரல்களும் உதடுகளும், வயதான தோற்றமும் சுருக்கங்களும் இப்படி சிலவற்றை நீங்கள் தவிர்க்க முடியாது!
இது மட்டுமல்ல நுரையீரல் புற்றுநோய், எம்பிசிமா, மலட்டுத்தன்மை, இதய நோய்கள், பக்கவாதம் இவ்வாறானவற்றையும் நீங்கள் தவிர்க்கவே முடியாது.
நீங்கள் புகைப்பவராக இருந்தால் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டும் ஏன் தொடர்ந்து புகைக்க வேண்டும்?

புகைப்பவர்கள் யார்?

புகைத்தல் என்பது இனம், பால், குலம், சமூகம் போன்ற எல்லா எல்லைக் கோடுகளையும் கடந்தது.
நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு நிலையத்தின் அறிக்கைப் படி அமெரிக்காவில் 20 வீதமான மக்கள் தொகையில் 46 மில்லியன் பேர் வரையிலான இளம் வயதினர் இந்த புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

04 மே, 2011

காட்டுமன்னார்கோவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

  காட்டுமன்னார்கோவில் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.இது குறித்து காட்டுமன்னார்கோவில் வேளாண் துறை உதவி இயக்குனர் மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேளாண் இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது. பசுந்தாள் உரப்பயிர் தக்கை பூண்டு, ஜின்சல்பேட் மானிய விலையில் காட்டுமன்னார்கோவில், திருமுட்டம், ஆயங்குடி வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜிப்சம் மற்றும் சிங்சல்பேட் வாங்கி பயனடையவும், சம்பா சாகுபடி விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி தக்கை பூண்டு பசுந்தாள் உரப்பயிர் விதைத்து மடக்கி உழுது மண் வளத்தை பெருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர்.

முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது. மாடர்ன் முஸ்லிம்கள்(?) சிலர் “தாடி என்பது அரபியர்களின் வழக்கம், அந்த அடிப்படையை ஒட்டியே நபியவர்கள் தாடி வைத்திருந்தனர்” அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறத் துவங்கியுள்ளனர். தாடி என்பது அரபியர்களின் வழக்கம் என்பதும் உண்மையே! அபூ ஜஹ்ல் உட்பட பல அரபியர்கள் தாடி வைத்திருந்தனர். “மக்கத்துக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல், பத்ரு போர்க் களத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் போது, இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள், அபூஜஹ்லின் தாடியைப் பிடித்துக் கொண்டு “நீதான் அபூஜஹ்லா” என்று கேட்டனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல் : முஸ்லிம் இதை சிலர் “தாடி அரபிகளின் வழக்கம்” என்று கூறி முழுக்கச் சிரைத்து விடுகின்றனர். “நாட்டு வழக்கம்” என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்தால் அதை நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நபியவர்கள் கோதுமை உணவு உண்டார்கள் என்பதற்காக, நாமும் கோதுமை உண்வு தான் உண்ண வேண்டுமா? என்று அவர்கள் கேட்கின்றனர். “நாட்டு வழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை” என்பது உண்மைதான் என்றாலும், ஒரு வழக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திக் கட்டளை இட்டு விட்டால் அது மார்க்கத்தின் சட்டமாக ஆகி விடும். அதை நாம் பின்பற்றியே ஆக வேண்டும். கோதுமை உணவைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீங்களும் கோதுமை உண்ணுங்கள்!” என்று நமக்குத்

01 மே, 2011

மிஸ்டுகால் (Missed Call)


பாதையில் ஊரும் பாம்பை பிடித்து தனது பைக்குள் போட்டுக்
கொண்டது போல் தான் மொபைல் போன்களை நாம் எமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைகின்றோம்.

...ஒரு சிறிய மிஸ்டுகால் என்றால் உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதை பார்த்துவிட்டுத் தான் அல்லது விடையளித்துவிட்டுத்தான் அடுத்த விசயத்திற்கு நம்மை திசைதிருப்புகின்றோம்.



நமது கையிலிருக்கும் அந்த மொபையில் எந்தளவு நமக்கு பயனளிக்கின்றது என்று நாம் உறுதிப்படுத்துகின்றோமா என்றால், இல்லை.
சிலருக்கு எந்த வருமானமும் இருக்காது, ஆனால் பல கால்கள் வந்துகொண்டே இருக்கும்.

பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவளித்து அதை வாங்கி பாவிக்கின்றோம்.நாம் கடுமையான வேலையில் சிக்கி கடும் கஷ்டத்தில் வந்து தூங்குவோம், நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது சிறிதாக ஒரு மிஸ்டுகால் வந்துவிட்டால் ஏதோ தூக்கத்தில் பாம்பு கடித்துவிட்டது போல் அல்லது சுனாமி வந்தது போல் அசிர்ச்சியுற்று எழுகின்றோம், உடனே பதிலளிக்க முயல்கின்றோம்.

அப்படியென்றால் நமது வீட்டுக்கு பக்கத்தில், நம்மை படைத்த, நமக்கு உணவளிக்கின்ற, நமக்கு நல்ல தூக்கத்தை தந்த அந்த அல்லாஹ்வின் வீட்டிலிருந்து அழைப்பு வருகின்றது அந்த அதிகாலை “சுபஹ்” வேளை, ஆனால் நாம் அயர்ந்து, ஆழ்ந்து தூங்குகின்றோம்.

ஒரு மிஸ்டுகால் (Missed called)க்கு ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழும்புகின்றோம்.

ஆனால் பெறிய சத்தத்தில் அழைப்பு கேற்கின்றது, “வெற்றியின் பக்கம் வாருங்கள்” என அழைக்கப்படுகின்றது ஆனால் நாம் செவிடர்களாக தூங்குகின்றோம்.

وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ [البقرة 

"பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்"

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ [البقرة : 153
"நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்”.
நன்றி:TNTJ Student Wing WEB TEAM

30 ஏப்ரல், 2011

இறைச்சிக்கறியில் ஒளிந்திருக்கும் ஆபத்து

mutton_leg
பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் சல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட.
சிவப்பு இறைச்சி புற்றுநோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.  சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்குமாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் வரும் பல நன்மைகள் ?

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.
சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.
புற்றுநோய் - 180 நாட்கள்.
காசநோய் - 90 நாட்கள்.
நன்றி.ஞானமுத்து

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!


முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது.

முகமது நபியை இழிவுபடுத்தியதாக வெஸ்டர்கார்ட் மற்றும் அவர் வரைந்த சித்திரத்தை வெளியிட்ட டானிஷ் நாளிதழ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அவர்கள் ஆஜராகாத நிலையிலேயே ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று தொடங்கப்பட்டுவிட்டதாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான தாரிக் ஹவாமதா கூறியுள்ளார்.

குறைந்து கொண்டே வரும் இளைஞர்கள்! தலைவர்கள் அதிர்ச்சி

ஒரு பக்கம் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் அதேசமயம் மறுபக்கம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையிலும்  நாம் இருவர் நமக்கொருவர் திட்டத்தைக் கைவிட தலைவர்கள் தயாராக இல்லை. 
 
சென்ற ஆண்டு சீனாவில் மக்கள் தொகைக் கணக்கிடும் பணி துவங்கியது. அதன் முடிவுகள், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சில கணக்கெடுப்புகள் சீன தலைவர்களுக்கு  அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. சீன மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி  சீனாவின் தற்போதைய மொத்த மக்கள் தொகை 134 கோடியாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில், துருக்கி அல்லது அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ் அல்லது ஓகியோ மாகாணங்களைச் சேர்த்தால் வரும் மக்கள் தொகை அளவுக்கு சமமாக உள்ளது. அதாவது, 74 கோடி அதிகரித்துள்ளது.