14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியை வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது ஸ்பெயின்.அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 ஜூலை, 2012
யூரோ கோப்பை கால்பந்து: அதிரடியான ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி மீண்டும் சாம்பியனானது ஸ்பெயின்
14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியை வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது ஸ்பெயின்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இணையானது யூரோ கோப்பை கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டிகளில் ஐரோப்பிய கண்டத்து அணிகள் மட்டும் பங்கேற்கும். நடப்புத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்தின.
கொளுத்தும் வெயிலால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்தது சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல்
கொளுத்தும் வெயிலால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை யில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 47.50 அடியாகும். இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நாள்தோறும் 76 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
ஹெல்மெட் போடாதவர்களுக்கு கேரளாவில் புதுமையான தண்டனை

திருவனந்தபுரம், ஜூலை 1-பைக்குகளில் ஹெல்மெட் அணியா மல் செல்பவர்களுக்கு காவல்துறையினர் இம்போசிஷன் தண் டனை வழங்குவது நல்ல பலனைத் தரும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலி யாவது அதிகரித்து வரு கிறது. ஹெல்மெட் அணியாமல் செல்ப வர்கள் தான் அதிக அளவில் பலியாகின்ற னர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லம் நகரத்தில் ஹெல்மெட் அணி யாமல் சென்றவர்களை யும், செல்போனில் பேசி யபடி வாகனம் ஓட்டி யவர்களையும் பிடித்து நூதனமான தண்டனை அளித்தனர்.
இஸ்லாத்தை ஏற்றதால், பெண் எம்.எல்.ஏ. மீது கொலை வெறி தாக்குதல்! "கள்ளக்காதல்" களங்கம்!!
அஸ்ஸாம் மாநிலத்தின் "போர்கோலா" சட்டமன்ற பெண் உறுப்பினர் "ரூமி நாத்". 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இளம் பெண் ரூமி நாத்.
கணவர் ராகேஷ் குமாருடன் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிமையில் வாழ்ந்து வந்த ரூமி நாத் எம்.எல்.ஏ., இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதுடன் "ஜாக்கி ஜாக்கீர்" என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார்.
சுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை
முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.
|
29 ஜூன், 2012
புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட்
பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப்போல தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது.
காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்
கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.
குஜராத்தில் சுவரொட்டி போர் : நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக
குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கும், மாநிலபாரதீய ஜனதா முன்னாள் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷிக்கும் பகை இருந்து வருகிறது. குஜராத்தில் மோடியை பிடிக்காதவர்கள் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்களாக மாறி மோடிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்கள் குஜராத்தின் முக்கிய நகரங்களிலும், டெல்லியிலும் மோடிக்கு எதிராக பேனர் மற்றும் சுவரொட்டி வைத்திருந்தனர். அதில், குறுகிய மனப்பான்மை உடையவர் உயர்ந்த பதவிக்கு (பிரதமர்) வர முடியாது என்று மோடியை மறைமுகமாக தாக்கி இருந்தனர்.
28 ஜூன், 2012
இணையதளங்களை தவறாக பயன்படுத்தும் சிறுவர்கள்!

உலக அளவில் இணைய தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு இன்றி இப்போது அனைவரும் இந்த இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியே.
ஆனால் எந்த அளவிற்கு இணைய தளத்தின் பயன்பாடு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு இணைய தளத்தைத் தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
27 ஜூன், 2012
உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க
இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..? (China Tissue Factory - Photo Gallery)
பாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம், வீடு, டாக்சி, பஸ், ரெஸ்டாரன்ட், மஸ்ஜித்... என எங்கே போனாலும், அங்கே ஒரு உடைத்த டிஷ்யூ பாக்ஸ் வைத்து இருக்கிறார்கள். பொதுச்சேவை..! நாம் அதில் இருந்து டிஷ்யூக்களை வேண்டியமட்டும் உருவிக்கொள்ளலாம்..!
பொதுவாகவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜிதுகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக்கொண்டு இருக்கும்போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், அசூசை இல்லாமலும்... 'துடைத்டோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக்குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர்தான்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
