#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

11 ஜனவரி, 2011

ஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு : "தினமலர்' செய்தி எதிரொலி














ராமநாதபுரம் : மூன்று ஆண்டுகளாக போராடி வந்த, ராமநாதபுரம் மாவட்ட ஊனமுற்ற தம்பதிக்கு,"தினமலர்' செய்தி எதிரொலியாக ஐந்து மணி நேரத்தில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.


பனைக்குளத்தை சேர்ந்த ஊனமுற்ற தம்பதி அப்துல் ரஹிம்(30), ஷப்ராபானு(38). நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆனதும் ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்தனர். தவழும் நிலையில் உள்ளதால், முறையிட வரும் போதெல்லாம் ஆட்டோவுக்கு செலவுச் செய்ய நேர்ந்தது. அலைந்தும் பயன் இல்லை. நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த தம்பதி மனு அளித்தனர். வழக்கம் போல அதிகாரிகள் பதிலளித்ததால், விரக்தியில் இருவரும் கண்ணீர் மல்க சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி குழந்தையுடன் வெளியேறினர். இது குறித்த செய்தி "தினமலர்' இதழில் நேற்று படத்துடன் வெளியானது. காலை 6.15 மணிக்கு நாளிதழை பார்த்ததும், கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின் படி சிவில் சப்ளை அதிகாரிகள் பனைக்குளம் வந்தனர். குழந்தையுடன் தம்பதியை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்தனர். ஐந்து மணி நேரத்திலே அனைத்து நடைமுறைகளும் முடித்து, 11.15 மணிக்கு புதிய ரேஷன் கார்டு அச்சடித்து மாவட்ட வழங்கல் அலுவலர் நெல்லைவேந்தன் வழங்கினார்.


ஷப்ராபானு கூறியதாவது: உலகத்தில் ஏன் பிறந்தோம் என்ற எண்ணத்தில் தான் நேற்று வீடு திரும்பினோம். காலை விடிந்ததும் அதிகாரிகள் முகத்தில் தான் விழித்தோம். எங்களை உதாசீனப்படுத்தியவர்களே, எங்களுக்கு கார்டு தருவதாக கூறி அழைத்துச் சென்றனர். "தினமலர்' செய்த உதவியை நான் மட்டுமல்ல எங்கள் கிராமமே மறக்காது' என, கண்ணீர் மல்க கூறினார்.

நன்றி.தினமலர்

10 ஜனவரி, 2011

சாபம் விட்டு கதறிய ஊனமுற்ற தம்பதி : ஆண்டுக் கணக்கில் அலைக்கழிப்பு


ராமநாதபுரம் : மூன்று ஆண்டுகளாக ரேஷன் கார்டு தராமல் இழுத்தடித்து வருவதைக் கண்டித்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஊனமுற்ற தம்பதி கதறி அழுதனர்.


ராமநாதபுரம் சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சாந்தி. ஆதரவற்ற இருவரும் மாற்றுத் திறனாளிகள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். மதம் மாறிய இவர்கள், தங்கள் பெயரை அப்துல் ரஹிம், ஷப்ராபானு என மாற்றி, ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் குடியேறினர். ரஹிம் சைக்கிள் மெக்கானிக் வேலையும், பானு தையல் வேலையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.


இதுவரை கிடைக்கவில்லை. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடர்ந்து தவழ்ந்து வந்து முறையிட்டனர். நேற்று குழந்தையுடன் வந்த தம்பதிக்கு, அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கொதித்த இருவரும், கதறி அழுதபடி, மனவேதனையுடன் அதிகாரிகளுக்கு சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி வெளியேறினர். இச்சம்பவத்தைப் பார்த்து மனு அளிக்க வரிசையில் நின்றவர்கள் மனவேதனை அடைந்தனர்.


அப்துல் ரஹிம் கூறியதாவது: ஓட்டு போடுவதற்கு மட்டும் காரில் வைத்து ராமநாதபுரம் அழைத்து வருகின்றனர். ரேஷன் கார்டு கேட்டால் ஆண்டு கணக்கில் அலைக்கழிக்கின்றனர். 2000 ரூபாய் கொடுத்தால் இரண்டு நாளில் ரேஷன் கார்டு தருவதாக இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். மனிதாபிமானம் செத்துவிட்டது. இனி இவர்களிடம் முறையிடப் போவதில்லை. இவ்வாறு அப்துல் ரஹிம் கூறினார்.

நன்றி.தினமலர்

கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் மாறுவேடம் புனைந்து வருமாறு மாணவ - மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடுவதும், நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ - மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதையும் காண்கிறோம். தனது பிள்ளையை கிருஷ்ணக் கடவுளாக வேடமிட்டு, ஒரு முஸ்லிம்தாய் அழைத்து செல்வதைதான் படத்தில் பார்க்கிறோம். இந்த காட்சியை கண்டதும் நம் இதயம் ஒருகணம் இயங்க மறுத்தது!. கண்ணீர்த் துளிகள் இமையை ஈரமாக்கியது!!.
இது போன்று அந்தத் தாய் செய்வதற்கு மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால்தான் முழுமையான பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதி, குழந்தையை நரக படுகுழியில் தள்ள முற்பட்டுள்ளார். பாருங்கள் என் சமுதாய மக்களே!, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று நாவால் மொழிந்த இக்குழந்தை, அல்லாஹ்விற்கு இனையுண்டு என கடவுளின் அவதாரம் பூண்டிருக்கின்றது இக்குழந்தையின் உடல்!. கொஞ்சம்கூட மனம் கூசவில்லையா?.
பாரதி, வள்ளுவன், புலி, கரடி என வேஷம் போட்டதின் பரிணாம வளர்ச்சிதான் இப்படி நிறுத்தியிருக்கின்றது தற்போது! மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயக்கப்பட்ட ஒன்றுதான். அதனால் ஒரு கேள்வியை நாம் முன்வைக்கின்றோம்!. எந்தக்குழந்தையும் அல்லது எந்த ஒரு முஸ்லிமும் இந்த வேஷம் பூண்ட நிலையிலேயே எதோ ஒரு காரணத்தினால் மரணித்துவிட்டால் மறுமையில் வல்ல அல்லாஹ்விடம் வரும்போது இதே வேஷத்துடன்தானே எழுப்பப்படுவீர்கள்! அப்போது உங்களின் நிலை என்ன?.

இப்படி வேஷமிடுவதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத்தான் சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும், அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களே யன்றி, அவற்றை மார்க்கத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதில்லை!. பெற்றோரின் இத்தகைய உற்சாகக் கோளாறு பின்னாளில், எம்மதமும் எங்களுக்கு சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்து விடுகின்றது. எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது. வெறும் தொழுகையை மட்டும் அவசரகதியில் நிறைவேற்றிவிட்டு, மார்க்கத்தின் மகத்துவத்தை தானும் அறிந்து, தன் குழந்தைக்கும் எத்திவைக்காமல் இருப்பதின் விளைவே, இதுபோன்ற அவலநிலைக்கு முக்கியகாரணம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே! நபி அவர்கள் பட்டென போட்டு உடைத்துவிட்டார்கள். நரகத்திற்கு செல்ல அல்லாஹ் இல்லை என கூறவேண்டிய அவசியம் கூட இல்லை. மாறாக இதுபோன்று வேடமிடுவதினாலேக்கூட சென்றுவிடலாம். அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.

வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே!
அடுத்ததாக கல்வி நிலையம் என்பது அறிவை வளர்த்து பயிற்சியையும் வழங்கும் இடமாகத்தானே இருக்க வேண்டுமே ஒழிய, மாணவனின் மெமரி பவரை சோதிக்கும் இடமாக இருக்கக் கூடாது. அதற்கு மருத்துவமனையும் மருத்துவர்களும் மருந்துகளும் இருக்கின்றன!.
இன்று கல்வி நிலையம் கல்வியை விட கலவியை (காதலை/காமத்தை) போதிக்கும் இடமாக ஆகி வருகின்றது. இதன் பாதிப்புதான் பத்தாம்வகுப்பு மாணவி பள்ளியிலேயே குழந்தை பெற்ற நிகழ்வு நம் தமிழ்நாட்டில் நடந்தது!. ஆண்டுவிழா என்பது வருடம் முழுவதும் கற்றுக்கொடுத்த கல்வியை ஊர் அளவிலோ, மாவட்ட அளவிலோ வெளிக்கொணரும் (விளையாட்டுப் போட்டி போலவே ஒரு போட்டியாக) விழாவாகவே இருக்க வேண்டுமே ஒழிய, அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போடும் விழாவாக இருக்ககூடாது. இதற்காகவே கலா மாஸ்டரிடம் கெமிஸ்ட்ரி என்ற போர்வையில், குத்தாட்டங்கள் (மானாட மசிராட என) குமரிகளுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் சேர்த்தே ஓடிவிளையாடு என்ற பெயரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை அவர் பார்த்துக்கொள்வார். இதுபோன்ற பள்ளி ஆண்டுவிழாவிற்கு விருந்தினராக அழைக்கப்படும் எவருமே இதை கண்டிக்காமல் கலந்துகொண்டு செல்வதையே வழக்கமாகவே வைத்திருக்கின்றனர்

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். (அல்-குர்ஆன் 66:8)

நன்றி.ஜபார்

09 ஜனவரி, 2011

இல்லற வாழ்க்கை இனித்திட-சென்னை குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.

விவாகரத்துகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் விவாகரத்து கோரி தம்பதிகள் நாடி வரும் சென்னை குடும்ப நலகோர்ட்டில், இனிமையான இல்லறத்திற்கு என்று தலைப்பில் 10 அறிவுரகளை பெரிய போர்டில் எழுதி வைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள்:

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

- சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்- அனுசரித்துப் போகுதல்- மற்றவர்களை மதித்து நடத்தல்.


மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள

10வது அறிவுரை.

விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், 'டைவர்ஸ்' கேட்டு வரும் ஜோடிகள் 'டைவர்ட்' ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

நன்றி.தட்ஸ் தமிழ்

08 ஜனவரி, 2011

அயோத்தி : இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்



<span title=

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”

பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.

செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.

“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராமபிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்கமுடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப் படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!


வட்டி குறித்த இறைவனின் எச்சரிக்கைகள்

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 2:275-276)

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-279)

“வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்” (அல்-குர்ஆன் 4:161)

“ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 3:130-132)

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்-குர்ஆன் 30:39)

வட்டி குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்: -
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் : ‘வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : -

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (என்று கூறினார்கள்). அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

07 ஜனவரி, 2011

ஆரவார வானவேடிக்கை...! ஆளுநர் உரை குறித்து மனிதநேய மக்கள் கட்சி கருத்து

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

தமிழக சட்டமன்றத்தில் இன்று (07.01.2011) நிகழ்த்தப்பட்ட ஆளுநரின் உரை பெரும் ஆரவார வானவேடிக்கையாகவே உள்ளது. மக்கள் நலன் சார்ந்த செய்திகள் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.

1 ரூபாய் அரிசி திட்டம் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏழை மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ள விலைவாசியைக் கட்டுப்படுத்துவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. சாதாரண மக்கள் காய்கறி கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி விஷம் போல் ஏறி வருகிறது. இதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அரசு உறங்கிக் கொண்டிருப்பதும் 1 ரூபாய் அரிசிக்காக தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதும் வேதனைக்குரியது.

பல நகராட்சிகளில் அரசின் பாதாள சாக்கடை திட்டம் மக்களை படுகொலை செய்யும் திட்டமாகவே மாறியுள்ளது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட படுகுழிகள் மூடப்படாமல் அக்கறையற்ற அரசாங்கத்தின் அவலச் சின்னமாகத் திகழ்கின்றன.

முதலமைச்சரின் சொந்த ஊரான திருவாரூரிலேயே பாதாள சாக்கடை படுகுழிகளால் மக்கள் சொல்லொணாத் துயரை சந்தித்து வருகின்றனர்.

புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வானவேடிக்கை வார்த்தை ஜாலமாகவே உள்ளது. ஆயிரக்கணக்கான கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. மிக அத்தியாவசியத் தேவை இருந்தும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் புதிய பணி இடங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

சிறுபான்மைக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அரசு அனுமதியும் மானியமும் மறுக்கப்பட்டு வருகின்றன.

கல்லூரிக் கல்வி இயக்குனரகத்திலேயே ஆட்கள் பற்றாக்குறையால் வேலைகள் தேங்கிக் கிடக்கும் சூழலில் புதிய பல்கலைக்கழகங்கள் துவங்குவதற்கான ஆளுநர் உரை அறிவிப்பு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. மக்கள் நலனை மையப்படுத்தாத ஆளுநரின் உரை குறித்த எங்கள் அதிருப்தியைப் பதிவு செய்கிறோம்.

நன்றி.தமுமுக.காம்

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை

டெல்லி: சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாக, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சங்கிலித் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. சென்னை சேத்துப்பட்டு எம்.வி.நாயுடு தெருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

கடந்த 1993ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 பேர் பலியாயினர். இந்த குண்டுவெடிப்பில் உடல்கள் சிதறி, எதிர் வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் மீது வந்து உடல் பாகங்கள் விழுந்தன. அந்த அளவுக்கு குண்டு வெடிப்பு மிக பயங்கரமாக நடந்தது.

இந்த வழக்கில் அபுபக்கர் சித்திக், ரபிக் அகமது, ஹைதர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீ்ர்ப்பில், இந்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டது. ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர் போன்ற வெடி பொருட்களை வாங்கியதாக மூவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒப்புதல் வாக்குமூலம் தவிர, அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வேறு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நன்றி.தட்ஸ்தமிழ்

06 ஜனவரி, 2011

அரியானா மாநிலத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் சாமியாருக்கு தொடர்பு




அரியானா மாநிலத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் சாமியாருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே அரியானா மாநிலம் வழியாக சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டு உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ரெயிலில் குண்டு வெடித்தது. இதில் 68 பேர்


அரியானா மாநிலத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் சாமியாருக்கு தொடர்பு
திரைப்படம் திரைப்படம்
புதுடெல்லி, ஜன 6-

அரியானா மாநிலத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் சாமியாருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே அரியானா மாநிலம் வழியாக சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டு உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ரெயிலில் குண்டு வெடித்தது. இதில் 68 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள் ஆவார்கள். இவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களை சந்தித்து விட்டு ரெயிலில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

இது குறித்து அரியானா மாநில போலீசார் விசாரணை நடத்தினார்கள். 3 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையின் முடிவில் இந்து சாமியார் அசீமானந்த் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் செல்லும் ரெயிலை குண்டு வைத்து தகர்த்ததாக தெரிய வந்துள்ளது.

அசீமானந்த் குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் வைத்து இந்த சதியில் ஈடுபட்டதாகவும் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சதித்திட்டத்தின் போது குண்டுக்கு குண்டு என்ற வகையில் பதிலடி கொடுப்போம் என்று ஆவேசமாக பேசியுள்ளனர்.

ஏற்கனவே ஐதராபாத்தில் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் சாமியார் அசீமானந்தாவுக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பை சேர்ந்தவர். தற்போது ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாகவும் சாமியார் அசீமானந்தாவிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நன்றி.மாலைமலர்


இவன்களை போல வெறி பிடித்த சாமியார்கள் இருக்கும் போது நம் இந்திய நாட்டில் ஒற்றுமை எப்படி வரும் பலிக்கு பலி என்ற வன்முறை தான் அதிகரிக்கும் சம்மந்த பட்ட அதிகாரிகள் கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இனிமேல் இப்படி தீவிரவாதம் எந்த வடிவிலும் வராது ஒழிக தீவிரவாதம் வாழ்க இந்திய மக்கள் ஒற்றுமை.

05 ஜனவரி, 2011

செய்தியாளர்களைக் கிண்டல் செய்யும் கருணாநிதி

முதல்வர் கருணாநிதிக்கு பத்திரிக்கை யாளர்களை சந்திப்பது என்றால் அலாதி பிரியம். அடிக்கடி பத்திரிக் கையாளர்களை சந்திப்பதன் மூலம் எப்போதும் தன்னை முதன்மைச் செய்தியில் தக்கவைத்துக் கொள்வார்.

தனக்கு விருப்பமான கேள்விகளைத் தன்னிடம் கேட்குமாறு அவரே நெருக்கமான செய்தியாளர்களிடம் சொல்லி அனுப்புவதும் அவரது பாணிகளில் ஒன்று. சில கேள்விகளை அவரே எழுதிக்கொடுத்து கேட்கச் சொல்வார் என்றும் கூறப்படுகிறது.

செய்தித் துறையோடு அளவளாவும் கருணாநிதிக்குப் பிடிக்காத ஒன்று உண்மைகளை கேள்விகளாகக் கேட்பது! பிறரைக் கேலியும் கிண்டலும் செய்யும் கருணாநிதியிடம் பலநேரம் பல பத்திரிக்கையாளர்கள் திட்டு வாங்கியது உண்டு. திமுக பிரமுகர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், கருணாநிதி டெல்லி சென்றார். அப்போது ஒரு செய்தியாளர், உங்கள் மகன் அழகிரிதான் கொலை செய்தார் என்று கூறப்படுகிறதே? என்று கேட்டார். உடனே கோபமடைந்த கருணாநிதி ‘‘நீதாண்டா கொலை செய்தாய்’’ என பதிலடி கொடுத்து அதிர வைத்தார்.

கோவையில் ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அடுக்கியபோது, கோபமாக வெளியேறியவர், ‘‘இனி கோவையில் பத்திரிக் கையாளர்களை சந்திக்க மாட்டேன்’’ என்று பாய்ந்தார். பின்னர் சரணடைந்தது வேறு விஷயம். அதுபோல் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி களைக் கேட்டனர். அமைச்சர் பூங்கோதையும், நீரா ராடியாவும் பேசிய ரகசிய டேப்புகள் குறித்து ஒரு செய்தியாளர் கேட்க, ‘‘இரண்டு பெண்கள் பேசினால் உனக்கென்ன?’’ என ஒருமையில் கேட்டு திடுக்கிட வைத்தார். அவர்கள் அரசியல் சார்பற்ற குடும்பப் பெண்கள் அல்ல. ஒருவர் அமைச்சர், இன் னொருவர் அரசியல் தரகர். இதைக்கூட உணராத கருணாநிதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

சமீபத்தில் வெங்காய விலை உயர்வு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். உடனே ‘‘பெரியாரிடம் கேளுங்கள்’’ என்றார். காரணம் பெரியார் கோபமாகப் பேசும்போது, ‘வெங்காயம்’ என அடிக்கடி கூறுவார். அதை வெங்காய விலை உயர்வோடு சம்பந்தப்படுத்தி தன்னை பெரிய ‘ராஜதந்திரி’யாக காட்டிக் கொண்டார். இவரது ராஜதந்திரம் டெல்லியில் சந்தி சிரிப்பது குறித்து அவருக்கு தெரியாதோ என்னவோ.

ஜனவரி 3 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துவிட்டு வெளியே வந்த கருணாநிதி கடுகடுவென இருந்தார். காரணம் அடையாறு பூங்காவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராததால், பிரதமர் திறந்து வைப்பதாக இருந்த அந்த நிகழ்வு ரத்தாகியது. எல்லாவற்றையும் அரையும் குறையுமாகவாவது தன்னுடைய ஆட்சியில் திறந்துவைத்து, வரலாற்றிலும் கல்வெட்டிலும் பெயர் பெறவேண்டும் என்பது அவரது வெறித்தனமான ஆசை. அடுத்த முறை தான் ஆட்சியமைக்க முடியாது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது போலும்.

இந்நிலையில், திமுக பங்கு வகிக்கும் மத்திய அரசே, மாநில அரசு உருவாக்கிய ஒரு பூங்காவுக்கு அனுமதி தராததும், அந்த விழாவில் பிரதமரும் அவரும் பங்கேற்று காட்சியளிக்க முடியாமல் போனதும் அவருக்கு பெரிய இழுக்காகி விட்டது.

அந்தக் கோபத்தில்தான் பிரதமரை வரவேற்கப் போகாமல் வைரமுத்துவின் நிகழ்ச்சிக்குப் போனார். அங்குபோய் பிரதமரை விட புலவர்தான் முக்கியம் என ‘டபாய்க்கவும்’ தவறவில்லை.

அடுத்த நாள் ஜனவரி 3 அன்று பிரதமரை அவர் ஆளுநர் மாளிகையில் சந்தித்தபோது, சந்திப்பு சுமுகமாக இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதியிடம், ‘‘திமுக&காங்கிரஸ் கூட்டணி எப்படி உள்ளது?’’ என நிருபர்கள் கேட்டனர். கேள்வி கேட்டது ஒரு பெண் நிருபர். ஸ்டாலினின் மருமகள் வயதுதான் அவருக்கு இருக்கும். அதாவது கொள்ளுப் பேத்தி வயது.அவரின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ‘‘உனக்கும் எனக்கும் உள்ள உறவு போல உள்ளது...’’ என சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். இது தொலைக்காட்சியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

கொஞ்சமும் நாகரீகமில்லாமல், வயதுக்கேற்ற பக்குவமில்லாமல் ஆபாச மாக அவர் அளித்த பதில் மிகவும் கண்டனத்திற்குரியது.

பிரதமரின் சந்திப்பில் ஏற்பட்ட விரக்தியும், காங்கிரஸ் மீதான அதிருப்தியும் அவரை நிலைகுலையச் செய்துள்ளது. அதற்காக கருணாநிதி இப்படியெல்லாமா தரம்தாழ்ந்துப் போவது?

நன்றி.தமுமுக.காம்