அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
06 ஜனவரி, 2011
அரியானா மாநிலத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் சாமியாருக்கு தொடர்பு
அரியானா மாநிலத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் சாமியாருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே அரியானா மாநிலம் வழியாக சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டு உள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ரெயிலில் குண்டு வெடித்தது. இதில் 68 பேர்
அரியானா மாநிலத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் சாமியாருக்கு தொடர்பு
திரைப்படம் திரைப்படம்
புதுடெல்லி, ஜன 6-
அரியானா மாநிலத்தில் நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் சாமியாருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே அரியானா மாநிலம் வழியாக சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டு உள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ரெயிலில் குண்டு வெடித்தது. இதில் 68 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள் ஆவார்கள். இவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களை சந்தித்து விட்டு ரெயிலில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
இது குறித்து அரியானா மாநில போலீசார் விசாரணை நடத்தினார்கள். 3 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையின் முடிவில் இந்து சாமியார் அசீமானந்த் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் செல்லும் ரெயிலை குண்டு வைத்து தகர்த்ததாக தெரிய வந்துள்ளது.
அசீமானந்த் குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் வைத்து இந்த சதியில் ஈடுபட்டதாகவும் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சதித்திட்டத்தின் போது குண்டுக்கு குண்டு என்ற வகையில் பதிலடி கொடுப்போம் என்று ஆவேசமாக பேசியுள்ளனர்.
ஏற்கனவே ஐதராபாத்தில் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் சாமியார் அசீமானந்தாவுக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பை சேர்ந்தவர். தற்போது ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாகவும் சாமியார் அசீமானந்தாவிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நன்றி.மாலைமலர்
இவன்களை போல வெறி பிடித்த சாமியார்கள் இருக்கும் போது நம் இந்திய நாட்டில் ஒற்றுமை எப்படி வரும் பலிக்கு பலி என்ற வன்முறை தான் அதிகரிக்கும் சம்மந்த பட்ட அதிகாரிகள் கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இனிமேல் இப்படி தீவிரவாதம் எந்த வடிவிலும் வராது ஒழிக தீவிரவாதம் வாழ்க இந்திய மக்கள் ஒற்றுமை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக