அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
12 ஜனவரி, 2011
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
சென்னை, ஜன. 12: தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத தனி இடஒதுக்கிட்டின் அடிப்படையில் வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. இது பற்றி அதன் தலைவர் எஸ்.எம். பாக்கர் முதல்வர் கருணாநிதிக்கு புதன்கிழமை எழுதிய கடிதம்: தமிழக முஸ்லிம்கள் தங்கள் வாழ்வாதாரமான தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாகமுஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானது இல்லை. ஆனால், தாங்கள் சட்டமாக்கிய 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு முழுமையாக தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் சமுதாய இளைஞர்களிடம் காணப்படுகிறது. போராடி வருகிறார்கள். தங்கள் ஆட்சிக் காலத்தில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றி, அதனை நடைமுறைப்படுத்தினீர்கள். எனவே, தனி இடஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், அதனை 7 சதவீதமாக உயர்த்தித் தர வேண்டும் என்று பாக்கர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக