அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
23 ஜனவரி, 2011
இந்தியக் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு:தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்!
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவதால் கச்சத்தீவுப் பகுதியை இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் நேற்று ஜெயக்குமார் என்ற தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகப் பெரும் வேதனையை மனிதநேயமுள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் என்ற தமிழக மீனவர் இலங்கை கடற்படையியனரால் ஒரு சில தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டு அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்கு முன்பு இப்போது ஜெயக்குமார் கொல்லப்பட்டுள்ளார்.
இந்திய கடலோர காவல்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள சர்மா நேற்றைய தினம் தமிழக முதலமைச்சரை சந்தித்து தமிழக மீனவர்களின் நலன்களை காப்போம் என்று உறுதி அளித்த அதே தினத்தில் இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதே போல் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ பிரதமரை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அதே நாளில் இலங்கை கடற்படை தமிழக மீனவர் ஜெயக்குமாரை சுட்டுக் கொன்றுள்ளது.
இது இலங்கை அரசின் திமிர்த்தனத்தின் எடுத்துக்காட்டாகவும் இந்தியவை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்பதை உணர்த்துவதும் போல் அமைந்துள்ளது. இது வரை 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேபோல் இப்போது மீனவர் ஜெயக்குமார் படுகொலைக்குப் பிறகும் சம்பிரதாயமாக தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு தனது கோரிக்கையை வைக்க மத்திய அரசின் சார்பாக நிதி அமைச்சரும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது தொடர் நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்குமேயானால் கச்சத்தீவுப் பகுதியை இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அப்பகுதியில் இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட முன்வர வேண்டும் என்று ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக