#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

05 ஜனவரி, 2011

செய்தியாளர்களைக் கிண்டல் செய்யும் கருணாநிதி

முதல்வர் கருணாநிதிக்கு பத்திரிக்கை யாளர்களை சந்திப்பது என்றால் அலாதி பிரியம். அடிக்கடி பத்திரிக் கையாளர்களை சந்திப்பதன் மூலம் எப்போதும் தன்னை முதன்மைச் செய்தியில் தக்கவைத்துக் கொள்வார்.

தனக்கு விருப்பமான கேள்விகளைத் தன்னிடம் கேட்குமாறு அவரே நெருக்கமான செய்தியாளர்களிடம் சொல்லி அனுப்புவதும் அவரது பாணிகளில் ஒன்று. சில கேள்விகளை அவரே எழுதிக்கொடுத்து கேட்கச் சொல்வார் என்றும் கூறப்படுகிறது.

செய்தித் துறையோடு அளவளாவும் கருணாநிதிக்குப் பிடிக்காத ஒன்று உண்மைகளை கேள்விகளாகக் கேட்பது! பிறரைக் கேலியும் கிண்டலும் செய்யும் கருணாநிதியிடம் பலநேரம் பல பத்திரிக்கையாளர்கள் திட்டு வாங்கியது உண்டு. திமுக பிரமுகர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், கருணாநிதி டெல்லி சென்றார். அப்போது ஒரு செய்தியாளர், உங்கள் மகன் அழகிரிதான் கொலை செய்தார் என்று கூறப்படுகிறதே? என்று கேட்டார். உடனே கோபமடைந்த கருணாநிதி ‘‘நீதாண்டா கொலை செய்தாய்’’ என பதிலடி கொடுத்து அதிர வைத்தார்.

கோவையில் ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அடுக்கியபோது, கோபமாக வெளியேறியவர், ‘‘இனி கோவையில் பத்திரிக் கையாளர்களை சந்திக்க மாட்டேன்’’ என்று பாய்ந்தார். பின்னர் சரணடைந்தது வேறு விஷயம். அதுபோல் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி களைக் கேட்டனர். அமைச்சர் பூங்கோதையும், நீரா ராடியாவும் பேசிய ரகசிய டேப்புகள் குறித்து ஒரு செய்தியாளர் கேட்க, ‘‘இரண்டு பெண்கள் பேசினால் உனக்கென்ன?’’ என ஒருமையில் கேட்டு திடுக்கிட வைத்தார். அவர்கள் அரசியல் சார்பற்ற குடும்பப் பெண்கள் அல்ல. ஒருவர் அமைச்சர், இன் னொருவர் அரசியல் தரகர். இதைக்கூட உணராத கருணாநிதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

சமீபத்தில் வெங்காய விலை உயர்வு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். உடனே ‘‘பெரியாரிடம் கேளுங்கள்’’ என்றார். காரணம் பெரியார் கோபமாகப் பேசும்போது, ‘வெங்காயம்’ என அடிக்கடி கூறுவார். அதை வெங்காய விலை உயர்வோடு சம்பந்தப்படுத்தி தன்னை பெரிய ‘ராஜதந்திரி’யாக காட்டிக் கொண்டார். இவரது ராஜதந்திரம் டெல்லியில் சந்தி சிரிப்பது குறித்து அவருக்கு தெரியாதோ என்னவோ.

ஜனவரி 3 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துவிட்டு வெளியே வந்த கருணாநிதி கடுகடுவென இருந்தார். காரணம் அடையாறு பூங்காவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராததால், பிரதமர் திறந்து வைப்பதாக இருந்த அந்த நிகழ்வு ரத்தாகியது. எல்லாவற்றையும் அரையும் குறையுமாகவாவது தன்னுடைய ஆட்சியில் திறந்துவைத்து, வரலாற்றிலும் கல்வெட்டிலும் பெயர் பெறவேண்டும் என்பது அவரது வெறித்தனமான ஆசை. அடுத்த முறை தான் ஆட்சியமைக்க முடியாது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது போலும்.

இந்நிலையில், திமுக பங்கு வகிக்கும் மத்திய அரசே, மாநில அரசு உருவாக்கிய ஒரு பூங்காவுக்கு அனுமதி தராததும், அந்த விழாவில் பிரதமரும் அவரும் பங்கேற்று காட்சியளிக்க முடியாமல் போனதும் அவருக்கு பெரிய இழுக்காகி விட்டது.

அந்தக் கோபத்தில்தான் பிரதமரை வரவேற்கப் போகாமல் வைரமுத்துவின் நிகழ்ச்சிக்குப் போனார். அங்குபோய் பிரதமரை விட புலவர்தான் முக்கியம் என ‘டபாய்க்கவும்’ தவறவில்லை.

அடுத்த நாள் ஜனவரி 3 அன்று பிரதமரை அவர் ஆளுநர் மாளிகையில் சந்தித்தபோது, சந்திப்பு சுமுகமாக இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதியிடம், ‘‘திமுக&காங்கிரஸ் கூட்டணி எப்படி உள்ளது?’’ என நிருபர்கள் கேட்டனர். கேள்வி கேட்டது ஒரு பெண் நிருபர். ஸ்டாலினின் மருமகள் வயதுதான் அவருக்கு இருக்கும். அதாவது கொள்ளுப் பேத்தி வயது.அவரின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ‘‘உனக்கும் எனக்கும் உள்ள உறவு போல உள்ளது...’’ என சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். இது தொலைக்காட்சியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

கொஞ்சமும் நாகரீகமில்லாமல், வயதுக்கேற்ற பக்குவமில்லாமல் ஆபாச மாக அவர் அளித்த பதில் மிகவும் கண்டனத்திற்குரியது.

பிரதமரின் சந்திப்பில் ஏற்பட்ட விரக்தியும், காங்கிரஸ் மீதான அதிருப்தியும் அவரை நிலைகுலையச் செய்துள்ளது. அதற்காக கருணாநிதி இப்படியெல்லாமா தரம்தாழ்ந்துப் போவது?

நன்றி.தமுமுக.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக