அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
22 ஜனவரி, 2011
"ஏடிஎம்"இயந்திரத்தில் எந்தநேரத்திலும் பால்
தகவல்தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் மற்றுமொரு பரிமாணமாக, "எனி டைம் மில்க்" எனும் பால் மற்றும் பால் பொருட்கள் 24 மணிநேரமும் கிடைக்கத்தக்க வகையில், மெசின்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநில கூட்டுறவ பால் விற்பனை சங்கங்களின் தலைவர் ராம்பாவு துலே கூறியதாவது, குஜராத் மாநிலத்தில், இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தாங்கள், இங்கும் இதுபோன்ற மெசின்களை அமைக்க திட்டமிட்டதாகவும், இதன் ஒருகட்டமாக, புனேயில் இந்த ஏடிஎம்களை அமைக்க உள்ளோம். இதன்மூலம், எந்தநேரத்திலும் பால் மற்றும் பால்பொருட்களை பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
நன்றி.தமிழ்வெளி
நன்றி.தமிழ்வெளி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக