தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற்றார். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்பு சின்னத்தில் இத்தேர்தலில் போட்டியிட்ட கமருஸ்ஸமான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் அசோகனை 254 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தார். முஸ்லிம்கள் மட்டுமின்றி பல தரப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெரும் அளவில் பெற்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தமுமுக
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
12 ஜனவரி, 2011
பாண்டாரவாடை ஊராட்சித் தலைவர் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக