மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று மாலை 4.30 மணிக்கு வருகை புரிந்தார். அவரை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வரவேற்றார்.
பின்னர் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மமக மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், தமுமுக மாநில துணைச் செயலாளர் கோவை சாதிக் ஆகியோருடன் சீமான், இயக்குநர் புகழேந்தி, தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் இரண்டரை மணி நேரம் உரையாடினர்.
சிறையில் இருந்தபோது தனது விடுதலைக்காக குரல் கொடுத்ததற்கு சீமான் நன்றி தெரிவித்துக் கொண்டார். எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்த-ல் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யப் போவதாகவும், எதிர்காலத்தில் மாற்று அரசியலில் இணைந்து செயல்படப் போவதாகவும், அதற்கான முன்முயற்சியாக இச்சந்திப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
நடப்பு தமிழக அரசியல் குறித்து விரிவாகப் பேசிய நிலையில், இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை குறித்தும் ஆழ்ந்து விவாதிக்கப்பட்டது. மேலும், இலங்கையில் தமிழர்களுக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் இடையே நீண்டகால நல்லுறவை ஏற்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்து இருதரப்பும் தமிழக மக்களின் நலன்களுக்காக அடிக்கடி சந்தித்துப் பேசுவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பு இருதரப்புக்கும் உற்சாகம் தருவதாகவும், மனநிறைவை அளிப்பதாகவும் இருந்தது.
நன்றி.தமுமுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக