இந்த பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாதது என்கிறார்கள். ஆமாம். 7.98 விலை உயர்வு வரலாறு காணாததுதான். பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசு 18 முறை பெட்ரோல் விலையை ஏற்றி இருப்பது இதுவரை வரலாறு காணாதது. ஒரு பிரதமராக மன்மோகன் சிங்கின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலகட்டத்துக்குள் பெட்ரோலின் விலை 90 சதவிகிதம் உயர்ந்து இருப்பது தனி வரலாறு. ஆனால், மக்கள் நொந்து வெந்து மாற்று வழியோ, மாற்றுத் தேர்வோ இல்லாமல் வதைபடுவது மட்டும் வரலாறு மீண்டும் மீண்டும் பார்ப்பது. இது இந்தியர்களுக்கான சாபக்கேடு!
நம் அனைவருக்கும் செடி, மரம் சூழ்ந்த ஒரு இடத்தை / வீட்டை பார்த்தா ஒரு சந்தோசம் வரும்...நம்ம வீட்லையும் இந்த மாதிரி பசுமையா இருந்தா எப்படி இருக்கும் என்று ஆசை படும் பலரது வீடுகளில் மரங்கள் இருப்பதில்லை...காலி இடங்கள் இருந்தும் மரங்களை நடுவதற்கு அதிகம் யோசிப்பார்கள்...
ஒரு காரணம் என்னவென்றால் சரியாக தண்ணீர் விட்டு பராமரிக்க முடியாது என்பதுதான்..அதுவும் இந்த கோடை காலத்தில் ரொம்பவே சிரமப்படணும்...விருப்பப் பட்டு அதிக மரங்கன்றுகளை நட்டுவிட்டு ஒவ்வொன்றுக்கும் தண்ணீர் விட இயலாமல் அது வாடி போவதை வேதனையோடு பார்க்கவேண்டியதாக இருக்கும்.