
இதற்காக, மாவட்டத்தின் எல்லை பகுதிகளான, மேற்கு வங்க மாநிலம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆதிவாசிகளை,
அந்த பகுதிகளில் குடியமர்த்தும் முயற்சியும் செய்து வருகிறது சங்க பரிவார விஷம கும்பல். தாக்கூர் கஞ்சின் முன்னாள் எம்.எல்.ஏ வும், ஐக்கிய ஜனதா தளத்தின் பீகார் மாநில பொதுச்செயலாளருமான, கோபால் அகர்வால் கூறுகையில், மேற்கண்ட இடம், முஸ்லிம்களின் ரஹ்மானியா பௌண்டேஷனுக்கு சொந்தமானது, என்பதை உறுதி செய்தார். மேலும், ஹிந்து முஸ்லிம் கலவரங்களுக்கு வித்திட முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தை அகர்வால் கேட்டுக் கொண்டார். சம்பவம் குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து விவரம் கேட்ட போது, இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, என்று "முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க" முயன்றனர். மாவட்ட நிர்வாகம் மவுனம் சாதித்தாலும், தாக்கூர் கஞ் பகுதியில் கடும் பீதி நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக