இது குறித்து, காரைக்கால் மாவட்ட நலவழித்துறையின் துணை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி கூறியதாவது:
"அண்டை மாநிலங்களில் டெங்கு வேகமாக பரவி வந்தபோது, காரைக்காலிலும் அதன் தாக்கம் இருந்தது. இதனால் டெங்கு
குறித்த பயம் காரைக்கால் மாவட்ட மக்களிடையே அதிகமாக இருந்தது. புதுச்சேரி அரசின் உதவியுடன், மாவட்ட நலவழித்துறை ஊழியர்களின் தீவிர சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம்களால் டெங்கு காய்சல் தற்போது 99 சதவிகிதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டும் காய்ச்சல் என வருகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்களில் 100 சதவிகிதம் டெங்கு ஒழிக்கப்பட்ட மாவட்டமாக காரைக்கால் வரும்.

இருந்த போதிலும், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நலவழித்துறை ஊழியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பொதுமக்களும் மாவட்ட நலவழித்துறையின் வேண்டுகோளை ஏற்று தங்கள் வசிக்கும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க உதவவேண்டும். ஹோமியோபதி மருத்துவர்களை கொண்டு பல்வேறு கிராமங்களில் மருத்துவ முகாம், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்தும் பப்பாளிச்சாறு, நிலவேம்புச்சாறு, மலை வேம்புச்சாறுகளை சுகாதாரத்துறை மூலம் முழுமையாக வழங்குவது சாத்தியக்கூறு குறைவு. ஆனால், அதன் பயன் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக