
இதில் தமுமுக மற்றும் ம.ம.க மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டையொட்டி மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பிரமாண்ட விளம்பரங்களும், வாகண விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக மாநாட்டு வளாகத்தில் இளைஞரணி மற்றும் மகளிரணியின் பிரமாண்ட அணிவகுப்பும் நடைபெற்றது.



மாநாட்டின் சிறப்பம்சமாக மறக்கடிக்கப்பட்ட முஸ்லிம்களின் வரலாற்றுகளை நிணைவுகூறும் வண்ணம் பிரமாண்ட புகைப்பட கண்காட்சியும், நெஞ்சை உலுக்கும் போர்க்கள காட்சிகளும், புத்தக கடைகளும் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப் பெற்றிருந்தன.
இந்த மாநாட்டில் ஆண்களுக்கு நிகராக போட்டி போட்டு பெண்களும் படையெடுத்து வந்தது. அரசியலில் சமுதாயத்திற்கான ஒரு புதிய களத்தை ம.ம.க உருவாக்கியுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக