#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

12 அக்டோபர், 2010

கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!


கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!

நல்லொழுக்க சீலர்களும், உண்மையைத் தவிர வேறு எதையும் பேசி அறியாதவர்களும், நமது பாரம்பரியமிக்க ஹிந்து தர்மத்தின் காவலர்களும், சாட்சாத் ஸ்ரீராமபிரானின் கலியுக அவதாரமுமான சங்க பரிவாரின் “காக்கி டவுசர்” கர்நாடகத்தில் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது.

குமாரசாமியின் தலைமையில் “ரத யாத்திரை” கிளம்பிய 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் மற்றும் 5 சுயேச்சை உறுப்பினர்கள், தேசமெல்லாம் சுற்றியபின் கடைசியில், “இராவணன் ஆட்சிதான் (இது கருணாநிதி பற்றிய வேதாந்தியின் வர்ணனை) எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு” என்று சென்னையில் சரணடைந்தது குறித்த வரலாறு வாசகர்கள் அறிந்ததே. ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் எல்லாம் நடந்து யுத்த காண்டமும் நேற்று முடிந்து விட்டது. பட்டாபிஷேகம்தான் பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் என்.ஆர்.ஐ அம்பிகள் இந்த காண்டத்தை, condom என்று புரிந்து கொண்டு, எங்களை ஹிந்து விரோதிகளாக சித்தரிக்கும் அபாயம் இருப்பதால் இது சமஸ்கிருத “காண்டம்” என்று தெளிவு படுத்திவிட்டு விசயத்துக்கு வருகிறோம்.

நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொண்டு எம்.எல்.ஏக்கள் நிற்கும் காட்சியை ஒளிபரப்பிய ஆங்கில சானல்கள். கான்ஸ்டிடியூசனல் கிரைசஸ் (constitutional crisis) என்று அதனை வர்ணித்தன. சட்டை கிழிந்ததனால் அரசியல் சட்டமே கிழிந்து விடுவதில்லை. “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று கவுண்டமணி சொல்வது நம் காதில் விழுகிறது. இருப்பினும், மேற்படி சட்டை கிழிந்த எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுதான் இப்போது பிரச்சினை.

000

முன்னொரு காலத்தில் அயோத்தி மாநகரத்தில் பாப்ரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இருந்தது. டிசம்பர், 6, 1992 அன்று அதனை சங்கபரிவாரம் இடித்துத் தள்ளியவுடன், அந்த இடத்துக்கு “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேற்படி சர்ச்சைக்குரிய இடம் ராமன் பிறந்த இடம் என்று ஹிந்துக்கள் (அதாவது பாரதிய ஜனதா) நம்புவதால், அதை அவர்கள் பெயருக்கு எழுதி போன மாதம் தீர்ப்பளித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

டிசம்பர் 6 போலவே, அக்டோபர் 11 ம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். நேற்று அதிகாலை 6 மணிக்கு 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களையும், எடியூரப்பா அரசை முன்னர் ஆதரித்த 6 சுயேச்சை எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர். அதிகாலை 6 மணிக்கு சட்டமன்றம் கூடிவிட்டதோ என்று வாசகர்கள் எண்ண வேண்டாம். அவாளுக்கு தேவைப்படும்போது சட்டசபை அதிகாலையில் கூடும். உயர்நீதிமன்றம் நடுராத்திரியிலும் பெயில் கொடுக்கும். “தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

இப்போது இந்த 11+6 பேருடைய “ஸ்திதி” என்ன என்பது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் சட்டப்புலியும் முன்னாள் அட்டார்னி ஜெனரலுமான சோலி சோரப்ஜியை இறக்கியிருக்கிறது பாரதிய ஜனதா. நேற்று இரண்டரை மணிநேரம் விவாதம் நடந்ததாம். இன்று காலை 10.30 முதல் நீதிமன்றத்தில் விவாதம் நடக்கிறது.

“அந்த 11+6 பேரும் தலா 25 கோடி வாங்கிவிட்டார்கள். அவர்கள் என் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. அதனால் அவர்களை இடித்து விட்டேன்” என்கிறார் எடியூரப்பா. “பணம் வாங்கினோமா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. கட்சிக் கொறடாவை மீறி வாக்களிக்காத போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எங்களை இடித்தீர்கள்?” என்பது 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களின் கேள்வி.

சுயேச்சை எம்.எல்.ஏக்களின் வாதம் இன்னும் சுவையானது. “நாங்கள் கோவிலும் அல்ல மசூதியும் அல்ல. எந்தக் கட்சி வேண்டுமானாலும் கட்டிடம் கட்டக் கூடிய காலி மனையே நாங்கள். காலி மனையை சபாநாயகர் எப்படி “இடிக்க” முடியும்?” என்பது அவர்களுடைய கேள்வி.

இந்த 11+6 பேரையும் ஓட்டுப் போட அனுமதித்து தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க எடியூரப்பா தயாராக இல்லை. டிசம்பர் 6, 1992 அன்று கடப்பாரை சேவை நடத்தி, பாபர் மசூதியை சர்ச்சைக்குரிய இடமாக மாற்றியதைப் போலவே, குரல் வாக்கெடுப்பு நடத்தி, இடிபாடுகளின் மேல் ராம் லல்லாவை நிற்க வைத்து டென்டு அடித்து இதுதான் “கோயில்” என்று இரண்டு விரலைக் காட்டி விட்டார் எடியூரப்பா.

இப்போது நீதிமன்றம் என்ன செய்யும்? ஹிந்து சமுதாயத்தின் பிரதிநிதியான எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து ராமஜென்ம பூமியை அவருக்கு எழுதிக் கொடுக்குமா? அல்லது 11+6 வழங்கும் சான்றாதாரங்களைப் பரிசீலிக்குமா? இதுதான் இந்தியா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அரசியல் சட்ட நெருக்கடி.

இன்றைக்கு இப்பிரச்சினை குறித்து தலையங்கம் எழுதியிருக்கிறது தினமணி. “தனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதும், பாஜக உறுப்பினர்கள் 11 பேரும், சுயேச்சை உறுப்பினர்கள் 5 பேரும் எதிரணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதும் தெரிந்த பிறகும், முதல்வர் எடியூரப்பா பதவியில் நீடிக்க ஏன் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும்? துணிந்து சட்டப்பேரவையை சந்தித்து, வாக்கெடுப்பு நடத்தி வெற்றியோ, தோல்வியோ, துணிவுடன் எதிர்கொண்டிருந்தால் அவரது மதிப்பும் மரியாதையும் இமயமாக உயர்ந்திருக்குமே..” என்று தினமணி அங்கலாய்த்திருக்கிறது.

என்ன செய்வது, பாபர் மசூதியில்தான் ராமர் பிறந்தார் என்பதை விவாதம் நடத்தி ஆதாரபூர்வமாக நீரூபித்திருந்தால் அத்வானியின் மதிப்பும்தான் இமயமாக உயர்ந்திருக்கும். ஆனால் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா? அதற்காகவல்லவோ கடப்பாரையைக் கையில் எடுத்தார் அத்வானி!

எடியூரப்பாவின் “மதிப்பு இமயம் போல உயர்ந்திருக்குமாம். போன வருசம் நவம்பர் மாதம் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கி, தொலைக்காட்சி காமெராக்களின் முன்னால் கண்ணீர் விட்டு அழுதாரே எடியூரப்பா, அன்றே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தால் அவருடைய மதிப்பு கிரானைட் மலையை விட இரண்டு அங்குலம் அதிகமாகவே உயர்ந்திருக்கும். அது எடியூரப்பாவுக்கு தெரியாதா என்ன?

இருப்பினும் மதிப்பு என்ற சொல்லுக்கு என்ன பொருள்? பொருள் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவையல்லவோ எடியூரப்பாவும் ஹிந்து சமூஹமும் எதிர்கொள்ளும் தத்துவஞானக் கேள்விகள். இந்த பிரம்ம விசாரங்களுக்கான விடைகள் “ரெட்டியோபநிஷத்”தில் அல்லவோ கொட்டிக் கிடக்கின்றன!

“இராம பிரானே தேசிய நாயகன், ஹிந்து கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம், ஹிந்து தர்மம்தான் ஜனநாயக பூர்வமானது” என்பவையெல்லாம் சங்கபரிவாரத்தின் நம்பிக்கைகள். “நேற்றைய குரல் வாக்கெடுப்பில் தனது ஆட்சி வெற்றி பெற்றுவிட்டது” என்பதும்கூட எடியூரப்பாவின் நம்பிக்கைதான்.

11+6 பேருடைய ஸ்திதி சர்ச்சைக்குரியது என்றும், நேற்றைய குரல் வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுவிட்டது என்பதும் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், அசோக் சிங்கால், இல.கணேசன், பொன் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அடங்கிய பெரும்பான்மை ஹிந்து சமூஹம் மற்றும், ஹிந்து சமூஹத்தை வழிநடத்துகின்ற “ஹிந்து தர்ம சன்ஸாத்” தின் வசிஷ்டர்கள் ஆகியோர் அனைவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவின்கீழ் வருகிறது. (25 ஆவது பிரிவு என்பது மத நம்பிக்கை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவு)

ஹிந்துக்களின் நம்பிக்கை குறித்தெல்லாம் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ன? பாபர் மசூதி தொடர்பான டைட்டில் சூட்டில், பட்டா-பாத்தியதையையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு, ஹிந்துக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியதே அலகாபாத் உயர்நீதிமன்றம், அதுதான் இனி ஹிந்துக்கள் தொடர்பான எல்லா வழக்குகளுக்கும் வழிகாட்டி.

விசாரிப்பதென்றால் அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவின் கீழ் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தட்டும். அப்போதுதான் இந்த அரசியல் சட்ட நெருக்கடியிலிருந்து இந்தியா மீள முடியும். இந்திய அரசியல், ஹிந்து தர்மத்தினால் வழிநடத்தப்பட்டால் மட்டும்தான் நாட்டில் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்ட முடியும்.


நன்றி- வினவு.

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

அளவுக்கதிகமான ஏற்றுமதி காரணமாக, வெள்ளைப்பூண்டு விலை எப்போதுமில்லாத வகையில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட மலைப்பூண்டு ஒரே மாதத்தில் கிலோவுக்கு 70 ரூபாய் உயர்ந்து,தற்போது, 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதம் கிலோ 150 ரூபாய்க்கு விற்ற முதல்ரக பூண்டு, 40 ரூபாய் அதகிரித்து தற்போது 190 ரூபாய்க்கு விற்கிறது. 120 ரூபாய்க்கு விற்ற சாதாரண பூண்டு 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் குஜராத், மத்திய பிரதேசத்தில் தான் அதிகளவில் பூண்டு உற்பத்தியாகிறது. இங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமாக 350 டன் என்ற அளவில் இருந்த பூண்டு ஏற்றுமதி, தற்போது 1,400 டன்னாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக பூண்டு விலை எப்போதுமில்லாத வகையில் விலை உயர்ந்துள்ளது. 'பூண்டு அதிக அளவிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தால் மட்டுமே பூண்டு விலை குறையும். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே விலை குறையும்' என தமிழக மளிகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோலவே எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 48 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பாமாயில் தற்போது 52 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூரிய காந்தி எண்ணை கிலோ 57 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும், தேங்காய் எண்ணெய் 85 ரூபாயிலிருந்து 95 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய் கிலோவுக்கு 10 ரூபாய் கூடி, 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த மாதம் 6,500 ரூபாய்க்கு விற்ற 100 கிலோ மூட்டை துவரம்பருப்பு தற்போது 6,000 ரூபாயாகவும், கென்யா, தான்சான்யாவில் இறக்குமதியாகும் இரண்டாவது ரகம் துவரம்பருப்பு 5,800லிருந்து 5,000 ரூபாயாகவும் குறைந்துள்ளன. கடந்த மாதம் 7,000 ரூபாய்க்கு விற்ற முதல் ரக பாசிப்பருப்பு மூட்டை (100 கிலோ), தற்போது 6,000 ரூபாயாகவும், இரண்டாம் ரக பாசிப் பருப்பு 6,500லிருந்து 5,500 ரூபாயாகவும் குறைந்துள்ளது. அதுபோன்றே உளுந்தம் பருப்பு மூட்டை (100 கிலோ) முதல் ரகம், 7,600 லிருந்து 7,200 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 7,200லிருந்து 6,600 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது. உள்நாட்டில் அதிகரித்துள்ள விளைச்சல் மற்றும் இறக்குமதி அதிகரிப்பாலும் பருப்பு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டு, எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டே செல்வது சாதாரண மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.


நன்றி:இந்நேரம்.காம்

11 அக்டோபர், 2010

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், அன்னையே.. என் அன்னையே.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பலவீனமடைந்து காங்கிரசின் காலடியில் தன்னை சமர்ப்பித்துக் கொண்டுள்ளது திமுக. இந்த பலவீனத்திற்கான ஒரே காரணம், இன்று திமுகவை தன்னுடைய குடும்ப நிறுவனமாக மாற்றி வைத்துள்ள கருணாநிதி மட்டும் தான்.

1580083773_262b38544b_b

தமிழகம் வருகை தந்துள்ள சோனியா, தன்னை வந்து சந்திக்காமல் போய் விட்டாரென்றால், கூட்டணியில் பிளவு என்று செய்திகள் வந்து விடுமோ என்று அஞ்சிய கருணாநிதி, திமுக காங்கிரஸ் கூட்டணி மிகுந்த பலமாக இருக்கிறது என்று காண்பித்துக் கொள்வதற்காகவே, தனது தன்மானத்தை அடகு வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று, விமான நிலையத்திலேயே சென்று சோனியாவை சந்தித்து, தனது விசுவாசத்தை காண்பித்துக் கொண்டுள்ளார். இறுமாப்பான சோனியாவும், சிரித்துப் பேசி விட்டு, திருச்சி கூட்டத்தில், காங்கிரசை பலப்படுத்துங்கள் என்று சொன்னது மட்டுமல்ல, திமுகவை கடுமையாக விமரிசித்து, கருணாநிதியின் எரிச்சலை தினந்தோறும் கிளப்பிக் கொண்டிருக்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனை அருகில் அமர வைத்ததன் மூலம், கருணாநிதிக்கு, மறைமுகமாக செய்தியும் சொல்லியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, காங்கிரசை ஒழித்துக் கட்டுவோம் என்ற கோஷத்தோடு உதித்த திமுக, இன்று காங்கிரசின் தயவில், காங்கிரசிடம் மன்றாடிக் கொண்டு இருப்பது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று முரண் ?

நாகப்பட்டினம் கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு இவ்விடத்தில் குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும்.

“கூட்டணி இன்றைக்கு ஒன்றும் நிலையானது அல்ல. எனக்குத் தெரியும். கூட்டணிகள் சில கொள்கைகளின் அடிப்படையிலேயே சேருகின்றன. (ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை) திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட கூட்டணி எப்போது ஏற்பட்டது ? அன்னை என்று எல்லோராலும் புகழப்படுகின்ற தியாகத் திருவிளக்கு என்று நான் அடிக்கடி கூறுகின்ற சோனியா காந்தி அவர்களை அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும் என்று ஒரு கூட்டம் மதவாத கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்த போது, தெற்கே இருந்து ஒரு குரல், திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு ஆதரவாக அகட்டது. தெற்கே இருந்து ஒரு கரம் நீட்டப் பட்டது. அந்தக் கரம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சொந்தமான கரம்.

அந்தக் கரத்தை நீட்டியது நாம்தான். சோனியா காந்தி அவர்களை காப்பாற்றக் கூடிய வல்லமை படைத்தவர்கள் என்பதற்காக அல்ல, அந்தக் கரத்தை நாம் நீட்டியது. ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை மாத்திரமல்ல. இந்திய தரணியிலேயே மதவாதத்தை கிளப்பி, சாதி பேதங்களை உருவாக்கி மக்களை மௌடீகர்களாக ஆக்கி அதன் காரணமாக அந்த அடிப்படையில் அரசியலை நடத்தலாம் என்று எண்ணியிருந்த பாஜக போன்ற பிற்போக்கு இயக்கங்களுக்கு யாரும் ஆதரவு அளித்து விடக் கூடாது, அவைகளுக்கு எதிர்ப்பாக இருக்கின்ற நடவடிக்கைகளுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேதான் சோனியா காந்தி அவர்களுக்கு நாம் கரம் நீட்டி வலுவளித்தோம். பக்கத் துணையாக நின்றோம். இன்றைக்கும் பக்கத் துணையாக நிற்கிறோம்.

நேற்றைக்குக் கூட அம்மையார் அவர்கள் திருச்சியில் பேசும் போது கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்றுதான் சொன்னார்கள். ஆம் ! கூட்டணி மகிழ்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. திமுகழகத்திற்கும் காங்கிரசுக்கும் உள்ள கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இது மகிழ்ச்சிகரமாக இருக்கக் கூடாது எனறு எண்ணுகின்ற ஒரு சில சூழ்ச்சிக்காரர்களுக்கு அவர்கள் அளித்த விளக்கம்.

திமுக காங்கிரஸ் கூட்டணி என்று அவர்கள் பெயர் குறித்து விளக்கம் சொல்லாவிட்டாலும் கூட எங்கள் கூட்டணி என்று அவர்கள் சொன்னதிலிருந்து (ஏன் அது மத்திய அரசு கூட்டணியை குறிக்கக் கூடாதா ) இந்தக் கூட்டணி உதயமாகும் போது, சோனியா காந்தி அவர்களைப் பற்றி தமிழகத்திலே எதிர்க்கட்சித் தலைவர் என்னனென்ன சொன்னார்.. …. ….

அந்த சோனியா காந்தியைப் பார்த்து பதிபக்தி இல்லாதவர் என்று சொன்னவர்கள் இன்க்கு சோனியா காந்தியோடு நாங்கள் கூட்டணி சேர்வோம், அணி சேர்ந்து திமுகழக ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறுகிறார்கள் என்றால், நாடு எப்படிப்பட்ட விசித்திரங்களையெல்லாம் சரித்திரத்திலே சந்திக்கிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களுடைய பேச்சை நம்புகிற அளவுக்கு இவர்களுடைய நாணயத்தை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு டெல்லியிலே உள்ளவர்கள் ஒன்றும் கண்களை மூடிக் கொண்டிருப்பவர்கள் அல்ல பச்சைக் குழந்தைகள் அல்ல. சரித்திரம் படித்தவர்கள் தான். வரலாறு தெரிந்தவர்கள் தான்.

எனவே அரசியலிலே பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நாம் பெற்றிருக்கின்ற சுயமரியாதையை என்றைக்கும் நாம் யாரும் இழந்துவிடத் தயாராக இருக்க மாட்டார்கள். அதுதான் பெரியார் எங்களுக்கு கற்றுக் கொடுத்த உணர்வு. அண்ணா எங்களுக்கு போதித்த அந்த உணர்வு சுயமரியாதைதான். “


நாடு எப்படிப்பட்ட விசித்திரங்களையெல்லாம் சரித்திரத்திலே சந்திக்கிறது என்கிறாரே கருணாநிதி … …. நாலு பண்டாரங்கள் சேர்ந்து கட்சி தொடங்கியிருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து விட்டு, அதே பாரதிய ஜனதா கட்சியோடு கருணாநிதி கூட்டணி சேர்ந்து ஐந்து வருடங்கள் பதவி சுகத்தை அனுபவிக்க வில்லை ? இன்று தான் பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சியாக தெரிகிறதா ? குஜராத்தில் நூற்றுக் கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போது, அப்போது பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலே இருந்ததனால், அது அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று கருத்து தெரிவித்தவர்தானே இந்த கருணாநிதி. ஜெயலலிதாவின் பேச்சை டெல்லியிலே நம்புவதற்கு பச்சைக் குழந்தைகள் இல்லை என்றால், இவருடைய பேச்சை மட்டும் நம்பி விடுவார்களா ?

இறுதியாக பதவி முக்கியம் அல்ல, சுயமரியாதைதான் முக்கியம் என்று கூறும் கருணாநிதி இந்த சுயமரியாதையைத் தானே விமான நிலையத்தில் சென்று சோனியாவின் காலடியில் வைத்து விட்டு வந்தார் ?

3

திருச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் “திரட்டி” கூட்டத்தை நடத்திக் காட்டியிருக்கும் காங்கிரஸ் கருணாநிதிக்கு தூக்கமில்லா இரவுகளை தந்து கொண்டிருக்கிறது. சோனியாவோடு தனக்கு இருக்கும் நல்ல உறவால், கூட்டணி பேச்சு வார்த்தையை திறம்படி சமாளிக்கலாம் என்று கருணாநிதி எண்ணியிருப் பாரேயானால், அது பகல் கனவாகவே அமையும்.

காங்கிரஸ் இல்லாமல் திமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என்பதை சோனியா நன்றாகவே அறிந்திருக்கிறார். தமிழகத்தில் ஒரு வலுவான காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்று சோனியா பேசியதில், பல அர்த்தங்கள் உண்டு.

சோனியா கருணாநிதியை சந்திக்காதது மட்டுமல்ல. தமிழகத்திற்கு மூன்று முறைகளுக்கு மேல் வருகை தந்திருந்தும், ஒரு முறை கூட, ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்காததும் கருணாநிதியை பயத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திரிபுரா மாநில ஆளுனர், தமிழகம் வந்தால் கூட, கருணாநிதியை மரியாதை நிமித்தம் சந்திக்கும் போது, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரின் மகன், கருணாநிதியை சந்திக்காமல் சென்றது, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

வரக்கூடிய சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 100க்கு குறையாத இடங்களையும், துணை முதல்வர் பதவியையும் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கேட்டால், கருணாநிதி 80க்காவது ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக கூட்டணிக்கு வந்தால், கருணாநிதி பாடு மிக மிக திண்டாட்டமாகப் போகும்.

2004ல், தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்த, கருணாநிதியை சோனியா வந்து சந்தித்தது ஒரு காலம். இன்று தானே சென்று சோனியாவை விமான நிலையத்தில் சந்திப்பது, தன்னுடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் அழகல்ல என்பது கருணாநிதிக்கு தெரியும் என்றாலும், விமான நிலையத்திற்கு சென்றதற்கான அர்த்தம் என்னவென்றால், நான் இன்னும் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் நடந்து கொள்கிறேன், ஸ்பெக்ட்ரம் விசாரணையை மட்டும் நடத்தாதீர்கள் என்பதுதான் அது.

இதன் மற்றொரு வெளிப்பாடுதான், 20 நாட்களாக நடக்கும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தில் இருந்து, திமுகவின் தொமுச மட்டும் திடீரென்று விலகிக் கொண்டது.

இதில் மிக மிக விசித்திரமானது என்னவென்றால், தனது தன்மானத்தை அடகு வைக்க சோனியாவை காண விமான நிலையம் சென்ற கருணாநிதி, அதற்கு காரணமாக, இலங்கைத் தமிழர்களின் பெயரை பயன் படுத்துவதுதான். சோனியாவை சந்திக்க கருணாநிதி சொன்ன காரணம், இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களை உடனடியாக அவர்கள் வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதுதான் அது.

கருணாநிதியின் இந்தக் கோரிக்கைக்கு, மத்திய அரசு நேரடியாக பதில் சொல்லாமல், செயலில் காட்டியிருக்கிறது. அது என்ன தெரியுமா ? காமன் வெல்த் விளையாட்டு நிறைவு விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை அழைத்திருக்கிறது மத்திய அரசு. ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்று அழித்த ராஜபக்ஷேவை அழைத்து கவுரவப் படுத்துவதை விட, கருணாநிதியையும், தமிழர்களையும் காங்கிரஸ் அரசு அவமானப் படுத்தவே முடியாது.

இந்த விழாவிலும், திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், வெட்கமில்லாமல் கலந்து கொள்ளத் தான் போகிறார்கள்.

திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, அனைத்து கொள்கைகளையும் குழி தோண்டி புதைத்த கருணாநிதி திராவிட இயக்கத்தை இந்தியா முழுவதும் வளர்க்க வேண்டும் என்று நாகை கூட்டத்தில் பேசியிருப்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.


நன்றி :சவுக்கு.காம்

பாபர் மசூதி தீர்ப்பு - சீதையின் சமையலறையில் கருகிய நீதி!

பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது!

நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.

இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.

கடந்த 24-09-2010 அன்று வெளியாக இருந்த தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் மீது இடைக்காலத்தடையாணை பெறப்பட்டு 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தால் அப்புகார் மனு தள்ளுபடி செய்யப்பட, கடந்த 30-09-2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்முறையற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றங்களால் தீர்ப்பு கூற இயலாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் அறிவித்திருந்தன. எனினும் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையிலடைக்கும் "குண்டர் தடுப்புச் சட்டம்", தீர்ப்பு வெளியாகும் சமயம் சங்பரிவாரங்கள் மீது பாயவில்லை. இதனால் சங்பரிவாரங்களில் குண்டர்களே இல்லை என்பது அர்த்தம் அல்ல என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரியும். சுதந்திர, குடியரசு தினங்களுக்கு முன்னரும் ஒவ்வொரு டிசம்பர் 6 க்கு முன்னரும் சந்தேகத்தின்பேரிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் கைது செய்யும் சட்டம், நாட்டில் திட்டமிட்டே கலவரம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சந்தேகிக்கவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கூட கைது செய்யவோ முன்வரவில்லை!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்புக்குத்தான்; உண்மையான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் என்றும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சமாதானம் சொல்லப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத தீர்ப்புக்கு ஏன் 60 ஆண்டுகால தாமதம் என்ற கேள்விக்கு யாரிடம் பதில் பெறுவது? தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியே என்று கருதப்படும் போது முஸ்லிம்களின் உடமை விசயத்தில் 60 ஆண்டுகள் தாமதப்படுத்தி அலகாபாத் நீதிமன்றம் அநீதி வழங்கியுள்ளது!

24-09-2010 வரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லிவந்த சங்பரிவாரங்கள் 30-09-2010 தேதியிட்ட தீர்ப்பைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே இதன் லட்சணம் விளங்குகிறது. தீர்ப்பு எப்படி இருப்பினும் "மேல்முறையீடு செய்வது உறுதி" என்ற அத்வானிக்கும் செலக்டிவ் அம்னீஸியா என்று நினைக்குமளவு தீர்ப்பை வரவேற்றுள்ளார். மூன்றில் இருபங்கு உரிமையைப் பெற்றுள்ளபோதும் "இந்துக்கள்" அமைதி காக்க வேண்டும் என்று RSS தலைவர் வேண்டுகோள் வைக்கிறார்! யாரை ஏமாற்ற இந்தக் கபட நாடகங்கள்!

செப்டம்பர் 24 -30 க்கு இடைப்பட்ட ஆறுநாட்களில் என்ன நடந்தது? சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முழங்கிய சங்பரிவாரங்கள் மகுடிப் பாம்பாய் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடைதேட அலைய வேண்டியதில்லை. சட்டமாவது மண்ணாங்கட்டியாவது என்பது சங்பரிவாரங்களின் இயல்பெனில், நீதியாவது மண்ணாங்கட்டியாவது என்று காங்கிரஸும் நடந்து கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூட நியாயமான தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்க முடியாதளவுக்கு நம்நாட்டு சட்டத்தின் ஓட்டைகள் பல்லிளிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதளவு 'பக்தி'முற்றிப்போன நீதிபதிகளும், லவ் ஜிஹாத், இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் வெளிப்படையாகவே விஷம்கக்கிய காவியுடை தரிக்காத நீதிபதிகளும் நம் நாட்டு நீதிமன்றங்களில் உள்ளதை நினைவில் கொள்ளவும்.

பாபர் மசூதி நடுவில்தான் ராமன் பிறந்தான் என்று இரு நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்னொரு நீதிபதியோ, பாபர் மசூதி கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்கிறார். இடிக்கப்படாத கோவிலில் முஸ்லிம்கள் தொழமாட்டார்கள் என்று தன் பங்குக்கு இன்னொரு நீதிபதி குழப்புகிறார். 1949 வரை முஸ்லிம்கள் அங்கு தொழுது வந்துள்ளதால் அங்கு கோவில் இருந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும்!

ராமர் பிறந்ததாக நீதிபதிகளால் சொல்லப்பட்டுள்ள (சங்பரிவாரங்களும் இதையேதான் சொல்லி வருகிறார்கள்) இடம் இந்துக்களுக்கு உரியதாம்! அதாவது சிலைகளை வணங்காத முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் நடுவில் இந்துக்கடவுளின் உருவச்சிலை! என்னே ஒரு வக்கிரம் பாருங்கள்! அயோத்தியில் பிறந்ததாக எவ்வித ஆதாரங்களும் இன்றி 'நம்ப'ப்படும் ராமன், பாபர் மசூதிக்குச் சற்று தள்ளி பிறந்ததாக 'நம்பி'னால் குடியா மூழ்கி விடும்?

பாபர்மசூதி, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்ற நீதிபதி கான் அவர்களின் தீர்ப்பை கருத்தில் கொண்டாலே போதும், சங்பரிவாரங்களின் ஐம்பதாண்டுகால மோசடிகள் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இதுவரை ராமன் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதே பரிவாரங்களின் நம்பிக்கை. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சங்பரிவாரங்கள் இதையும் ஏற்றுதானே ஆகவேண்டும்! ஆனால் ஏற்பார்களா?

மொத்ததில் மூன்று நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட வில்லை. ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்னொரு சாராருக்கான நீதியாகக்கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மென்மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் நீதியான தீர்ப்பாகக் கருத முடியாது. இனிமேல் எந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும்முன்னதாக, சட்டம் கடமையைச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தான்!


நன்றி; இநேரம்.காம்

பாபர் மசூதி தீர்ப்பு - சீதையின் சமையலறையில் கருகிய நீதி!

பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது!

நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.

இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.

கடந்த 24-09-2010 அன்று வெளியாக இருந்த தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் மீது இடைக்காலத்தடையாணை பெறப்பட்டு 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தால் அப்புகார் மனு தள்ளுபடி செய்யப்பட, கடந்த 30-09-2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்முறையற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றங்களால் தீர்ப்பு கூற இயலாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் அறிவித்திருந்தன. எனினும் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையிலடைக்கும் "குண்டர் தடுப்புச் சட்டம்", தீர்ப்பு வெளியாகும் சமயம் சங்பரிவாரங்கள் மீது பாயவில்லை. இதனால் சங்பரிவாரங்களில் குண்டர்களே இல்லை என்பது அர்த்தம் அல்ல என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரியும். சுதந்திர, குடியரசு தினங்களுக்கு முன்னரும் ஒவ்வொரு டிசம்பர் 6 க்கு முன்னரும் சந்தேகத்தின்பேரிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் கைது செய்யும் சட்டம், நாட்டில் திட்டமிட்டே கலவரம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சந்தேகிக்கவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கூட கைது செய்யவோ முன்வரவில்லை!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்புக்குத்தான்; உண்மையான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் என்றும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சமாதானம் சொல்லப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத தீர்ப்புக்கு ஏன் 60 ஆண்டுகால தாமதம் என்ற கேள்விக்கு யாரிடம் பதில் பெறுவது? தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியே என்று கருதப்படும் போது முஸ்லிம்களின் உடமை விசயத்தில் 60 ஆண்டுகள் தாமதப்படுத்தி அலகாபாத் நீதிமன்றம் அநீதி வழங்கியுள்ளது!

24-09-2010 வரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லிவந்த சங்பரிவாரங்கள் 30-09-2010 தேதியிட்ட தீர்ப்பைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே இதன் லட்சணம் விளங்குகிறது. தீர்ப்பு எப்படி இருப்பினும் "மேல்முறையீடு செய்வது உறுதி" என்ற அத்வானிக்கும் செலக்டிவ் அம்னீஸியா என்று நினைக்குமளவு தீர்ப்பை வரவேற்றுள்ளார். மூன்றில் இருபங்கு உரிமையைப் பெற்றுள்ளபோதும் "இந்துக்கள்" அமைதி காக்க வேண்டும் என்று RSS தலைவர் வேண்டுகோள் வைக்கிறார்! யாரை ஏமாற்ற இந்தக் கபட நாடகங்கள்!

செப்டம்பர் 24 -30 க்கு இடைப்பட்ட ஆறுநாட்களில் என்ன நடந்தது? சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முழங்கிய சங்பரிவாரங்கள் மகுடிப் பாம்பாய் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடைதேட அலைய வேண்டியதில்லை. சட்டமாவது மண்ணாங்கட்டியாவது என்பது சங்பரிவாரங்களின் இயல்பெனில், நீதியாவது மண்ணாங்கட்டியாவது என்று காங்கிரஸும் நடந்து கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூட நியாயமான தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்க முடியாதளவுக்கு நம்நாட்டு சட்டத்தின் ஓட்டைகள் பல்லிளிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதளவு 'பக்தி'முற்றிப்போன நீதிபதிகளும், லவ் ஜிஹாத், இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் வெளிப்படையாகவே விஷம்கக்கிய காவியுடை தரிக்காத நீதிபதிகளும் நம் நாட்டு நீதிமன்றங்களில் உள்ளதை நினைவில் கொள்ளவும்.

பாபர் மசூதி நடுவில்தான் ராமன் பிறந்தான் என்று இரு நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்னொரு நீதிபதியோ, பாபர் மசூதி கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்கிறார். இடிக்கப்படாத கோவிலில் முஸ்லிம்கள் தொழமாட்டார்கள் என்று தன் பங்குக்கு இன்னொரு நீதிபதி குழப்புகிறார். 1949 வரை முஸ்லிம்கள் அங்கு தொழுது வந்துள்ளதால் அங்கு கோவில் இருந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும்!

ராமர் பிறந்ததாக நீதிபதிகளால் சொல்லப்பட்டுள்ள (சங்பரிவாரங்களும் இதையேதான் சொல்லி வருகிறார்கள்) இடம் இந்துக்களுக்கு உரியதாம்! அதாவது சிலைகளை வணங்காத முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் நடுவில் இந்துக்கடவுளின் உருவச்சிலை! என்னே ஒரு வக்கிரம் பாருங்கள்! அயோத்தியில் பிறந்ததாக எவ்வித ஆதாரங்களும் இன்றி 'நம்ப'ப்படும் ராமன், பாபர் மசூதிக்குச் சற்று தள்ளி பிறந்ததாக 'நம்பி'னால் குடியா மூழ்கி விடும்?

பாபர்மசூதி, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்ற நீதிபதி கான் அவர்களின் தீர்ப்பை கருத்தில் கொண்டாலே போதும், சங்பரிவாரங்களின் ஐம்பதாண்டுகால மோசடிகள் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இதுவரை ராமன் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதே பரிவாரங்களின் நம்பிக்கை. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சங்பரிவாரங்கள் இதையும் ஏற்றுதானே ஆகவேண்டும்! ஆனால் ஏற்பார்களா?

மொத்ததில் மூன்று நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட வில்லை. ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்னொரு சாராருக்கான நீதியாகக்கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மென்மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் நீதியான தீர்ப்பாகக் கருத முடியாது. இனிமேல் எந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும்முன்னதாக, சட்டம் கடமையைச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தான்!


நன்றி; இநேரம்.காம்

10 அக்டோபர், 2010

ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

”நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, ‘இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், ‘இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

புஹாரி : 3895 ஆயிஷா (ரலி).

என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள். நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதன்று)” என்று கூறினேன்.

புஹாரி : 5228 ஆயிஷா (ரலி).

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

புஹாரி : 6130 ஆயிஷா (ரலி).

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்க மக்கள் நபிகளார் என்னிடம் தங்கும் நாள் எது என எதிர்பார்த்து வழங்கினர்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?’ என்று என்னுடைய (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.. நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாதிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)”(4:69) என்று சொல்லத் தொடங்கினார்கள்.
புஹாரி : 4436 ஆயிஷா (ரலி).

”உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்ட (கம்மிய, கரகரப்பான குரலில்), ‘அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (திருக்குர்ஆன் 04:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். எனவே, ‘இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது’ என்று நான் எண்ணிக்கொண்டேன்.

புஹாரி : 4435 ஆயிஷா (ரலி).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, ‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில்’ அல்லது ‘(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்’ எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று சொல்லி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களின் தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களின் பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், ‘இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், ‘இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) அறிந்து கொண்டேன்.

புஹாரி : 4437 ஆயிஷா (ரலி).

நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), ‘இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘சரி” என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, ‘இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

புஹாரி : 5211 ஆயிஷா (ரலி).

(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் ‘ஸரீத்’ என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3770 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்” என்று கூறினார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன்.

புஹாரி :3217 அபூ ஸலாமா (ரலி).

(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக் கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அதை மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை. இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார். என் கணவர் (மக்கா உள்ளிட்ட) ‘திஹாமா’ பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை. கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.

ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.

ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் ‘விவரமில்லாதவர்’ அல்லது ‘ஆண்மையில்லாதவர்’, சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் என்னை ஏசுவார். கேலி செய்தால்) என் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) என் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்:என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர்.

ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிரைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும். பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) ‘ஞக்’ எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.(என் கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும் அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும்.(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்து விடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுபவர்.)(என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.)

(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுளங்கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) ‘கத்’ எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, ‘உம்மு ஸாஉவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு” என்றார்.(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.) ஆயிஷா (ரலி) கூறினார்:

(என்னருமைக் கணவரான) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்’ என்றார்கள்.

புஹாரி :5189 ஆயிஷா (ரலி)

--
நன்றி- இஸ்லாம் குரல்.காம்,

08 அக்டோபர், 2010

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்

1540. நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், ‘(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘இந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!”என்று கேட்டார்கள்.

புஹாரி :3653 அபூபக்கர் (ரலி).

1541. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் மரண நோயின் போதும்) மிம்பரின் மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்), ‘அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு வாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்” என்று கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), ‘தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள். நாங்கள் அபூபக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், ‘இந்த முதியவரைப் பாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக் கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக் கொண்டிருக்க இவர், ‘தங்களுக்கு என் தந்தையரும் தாய்களும் அர்ப்பணமாகட்டும்’ என்று (அழுதபடி) கூறுகிறாரே” என்று கூறினார்கள் – இறைத்தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார் – அபூபக்ர் (ரலி) தாம் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூ பக்ர் அவர்கள் தாம். என்சமுதாயத்தாரிலிருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூ பக்ரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்) போதுமானதாகும். (என்னுடைய இந்தப்) பள்ளிவாசலில் உள்ள சாளரங்களில் அபூபக்ரின் சாளரம் தவிர மற்றவை நீடிக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3904 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1542. நபி (ஸல்) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள். ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)” என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 3662 அம்ர் பின் அல் ஆஸ் (ரலி).

1543. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, ‘நான் வந்து தங்களைக் காண(முடிய)வில்லையென்றால்..?’ என்று, – நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :3659 ஜூபைர் பின்முத்இம் (ரலி).

1544. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்” என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள் ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?’ என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, ‘இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது’ .இதைக் கேட்ட மக்கள், ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்,’நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை


நன்றி- இஸ்லாம் குரல்.காம்,

06 அக்டோபர், 2010

பாபரி பள்ளிவாசல் இடம்: கோயில் கட்டுவதற்கு ஆகமங்களின் அடிப்படையில் தகுதியற்ற,

பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு ஒரு வாய்ப்பு! - -நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான்

-<span title=நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான்" title="-நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான்" border="0" width="295" height="375">

-நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான்

பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு சொன்ன மூவரில் ஒருவரான நீதிபதி சிப்கத்துல்லாகான் எழுதியுள்ள தீர்ப்பில் இருந்து சில பகுதிகளை அப்படியே தமிழில் தருகிறோம். சொத்து வழக்கில் வரலாற்றையோ அல்லது அகழ்வாராய்ச்சி சான்றுகளையோ சான்றாக எடுக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டும் அவர், தானும் வரலாற்று ரீதியாக இந்த வழக்கை அணுகவில்லை என்று கூறுகிறார். ஆனால் பாபரி மஸ்ஜித்&கோயிலை இடித்துவிட்டு கட்டப்படவில்லை என்று சொல்லிவிட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே சிதிலமடைந்து கிடந்த ஒரு பழங்கட்டிட இடிபாடுகள் இருந்த இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் பாபரி மஸ்ஜிதின் நடுக்கும்பத்தின் கீழ் ராமர் பிறந்தார் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் அந்த வளாகத்தில் எங்கோ ஒரு இடத்தில் அவர் பிறந்தார் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென தீர்ப்பு அளித்துள்ளார். அவரது நிலைப்பாட்டிற்கு முரணாகவே தீர்ப்பை வழங்கி விட்டு இது இறுதி தீர்ப்பு அல்ல& உச்சநீதிமன்றம் வழங்கப்போவது தான் இறுதி தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு முஸ்லிம்களுக்கு சில ஆலோசனைகளை தருகிறார். மொத்தத்தில் ஏதோ ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகி அவர் தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. மூன்று நீதிபதிகளில் மிக சுருக்கமாக 285 பக்கங்களில் தனது தீர்ப்பை அவர் முடித்துக் கொண்டார்.அதிலிருந்து சில பகுதிகள் இங்கே தமிழில் தருகிறார் அருட்செல்வன் - ஆசிரியர்)



எனது தீர்ப்பு சுருக்கமானது. மிகவும் சுருக்கமானது. இந்த பரபரப்பான சிக்கலான விஷயத் தை எங்கே நிறுத்த வேண்டும் என்பதை அறிந்த ஓவியர் என்று சிலர் என்னை பாராட்டலாம். அல்லது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னையில் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சிலர் என்னைப் பற்றி எண்ணலாம். நான் வரலாறு மற்றும் தொல்லியியல் குறித்து ஆழமாக செல்லவில்லை. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. முதலாவதாக இந்த சொத்து வழக்கை தீர்ப்பதற்கு வரலாறும் தொல்லியியலும் மிக அவசியமாக தேவைப்படவில்லை. இரண்டாவதாக மிகவும் சிரமப் பட்டு அத்தகைய முயற்சியில் ஈடுபட்டாலும் அதன் இறுதியில் எனக்கு பொக்கிஷம் கிடைக்குமா அல்லது ஒரு அரக்கனை எதிர்கொள்வேனா என்பது எனக்குத் தெரியாது. (உண்மை என்ற பொக்கிஷம் அல்லது குழப்பம் என்ற அரக்கன்)மூன்றாவதாக வரலாற்றின் அடிச்சுவடு தெரியாதவன் நான். எனவே வரலாற்றாசிரியர்களின் முரண்பட்ட கருத்துகளுக்கு இடை யே நான் சிக்கிக் கொள்ள விரும்ப வில்லை. நான்காவதாக கர்நாடக மாநில வக்ப் வாரியத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொத்துடமை தொடர் பான வழக்குகளில் வரலாற்று உண்மைகளுக்கும் கோரிக்கை களுக்கும் இடமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு இறுதியான தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகு தான் மிக முக்கிய கட்டமே ஏற்படும். தகராறு செய்யும் இரு தரப்பினருக்கும் நான் பின்வரு பவற்றை சொல்ல விரும்புகிறேன்.

ராமரின் பண்பாடுகளில் மிகவும் மேலோங்கி இருந்தது அவரது விட்டுக் கொடுக்கும் குணம்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) தனது எதிரிகளுடன் ஹுதைபிய்யா உடன்படிக்கையை செய்து கொண்ட போது அது மிகப் பெரும் சரணாகதி என்று அவர்களது மிக விசுவாசமான தோழர்களே கருதினார்கள்.

ஆனால் திருக்குர்ஆன் அதனை மிகத் தெளிவான வெற்றி என்று வர்ணித்தது. அது போன்றே அதுவும் அமைந்தது. மிக குறுகிய காலத்திற்குள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) வெற்றியாளராக ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.

எனது தீர்ப்பில் இடிப்பு என்ற உப தலைப்பில் நாம் மீண்டும் எழுச்சி பெற்று எழுந்ததை நான் வியந்து பாராட்டியுள்ளேன். ஆனால் அத்தகைய நிலை உடன டியாக மீண்டும் தொடர்ந்து நடை பெறாது என்பதை நாம் உணர வேண்டும். இன்னொரு சரிவு ஏற்பட்டால் நாம் விரைவில் எழுந்து நிற்க முடியாது. இன்றைய உலகம் 1992&ஐ விட வேகமாக செயல்பட்டு வருகிறது. நாம் நசுக்கபட்டு விடுவோம்.

மற்றவர்களுடனான முஸ்லிம் களின் உறவு குறித்து இஸ்லாத்தின் போதனை என்ன என்பதை முழு உலகமும் அறிய விரும்புகின்றது என்பதை முஸ்லிம்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் பிறருடன் பகைமை கொள்வது, நட்பு கொள்வது, சகிப்பு தன்மை யுடன் நடந்துகொள்வது குறித்து இஸ்லாம் சொல்வது என்ன? இஸ்லாத்தின் போதனைகள் மூலம் பிறரைக்கவரும் வாய்ப்புகளை முஸ்லிம்கள் எப்படி பயன்படுத் திக் கொள்ள வேண்டும்? பிறரை எப்போதும் எப்படி வேண்டுமானாலும் எதிர்க்கலாமா அல்லது கூடாதா? இவை எல்லாம் நம் முன் வைக்கப்படும் கேள்விகள்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம் கள் ஒரு உன்னதமான இடத்தில் உள்ளார்கள். அவர்கள் இங்கே ஆட்சியாளர்களாக இருந்து இருக்கிறார்கள். பிறர் ஆட்சியின் கீழும் வாழ்ந்து இருக்கிறார்கள். தற்போது அதிகாரத்தில் (இளைய) பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மையாக இங்கே வாழ வில்லை. ஆனால் அவர்கள் புறந்தள்ளக்கூடிய சிறுபான்மையினர் ஆகவும் இங்கு இல்லை. (இந்தோனேசியாவிற்கு அடுத்ததாக இந்தியாவில் தான் உலகிலேயே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்). பிற நாடுகளில் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் பெரும்பான்மை யினராக இருக்கிறார்கள். எனவே நாம் எழுப்பிய கேள்விகள் குறித்து அவர்கள் கவலைப்படப் போவதில்லை. அல்லது அவர்கள் மிக அற்பமான சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். எனவே அவர் களால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்திய முஸ்லிம்களோ மிகப் பெரும் மார்க்க அறிவையும் ஞானத்தையும் பெற்று இருக்கிறார்கள். எனவே இந்த கேள்விகளுக்கான சரியான நிலைப்பாட்டை எடுத்துச் சொல் வதற்கு மிகச்சிறந்த நிலையில் அவர்கள் தான் இருக்கிறார்கள். தற்போது கையில் உள்ள பிரச்சினைக்கு நுட்பமாக தீர்வு காண்பது மூலம் இப்பணியை அவர்கள் தொடங்கட்டும்.


பாபரி பள்ளிவாசல் இடம்: கோயில் கட்டுவதற்கு ஆகமங்களின் அடிப்படையில் தகுதியற்ற,



பாபரி பள்ளிவாசல் இஸ்லாமிய நெறிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு சொன்னவர்களில் ஒருவரான தர்ம வீர் சர்மா கூறியுள்ளார். எந்த இஸ்லாமிய நெறிமுறை மீறப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் பாபரி பள்ளிவாசல் அமைந்திருந்த இடம் கோயில் கட்டுவதற்கு தகுதியற்ற இடம் என்பதே சில ஹிந்து சமய அறிஞர்களின் கருத்தாக இருந்துள்ளது.




சில்ப-சாஸ்திர என்னும் ஹிந்து கட்டடக் கலை ஆய்வுகளின் படி பாபரி மஸ்ஜித் இருந்த இடம் கோயில் கட்ட தகுதியற்றதாகும். மானஸாரா எனும் சில்ப-சாஸ்திர நூலின் 3வது அத்தியாயத்தை மேற்கோள் காட்டி, பெங்களூரைச் சேர்ந்த மாஜிஸ்ட்ரேட் ராம் ராஜ் தனது நூலான (P 16-17) - (ஹிந்துக் கட்டடக் கலை குறித்த கட்டுரை தொகுப்பில்) எந்த இடங்களையெல்லாம் கோயில் கட்ட பயன்படுத்தக்கூடாது என்று கூறுகின்றார்.

‘வட்ட வடிவில் அல்லது அரைவட்ட வடிவில் அமைந்தது, மூன்று அல்லது ஆறு கோணம் உடையது, திரிசூலம் அல்லது முறம் போன்றுள்ளது, மீனுடைய பிற்பகுதியைப் போன்றது அல்லது ஆமையைப் போன்றது அல்லது பசுவின் முகம் போன்றது - மனித மண்டை ஓடுகள், - எலும்புகள், - எண்ணை, தேன், பிணங்கள், மீன்கள் நிறைந்து காணப்படும் இடங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. என்று அந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

பாபரி பள்ளிவாசல் இருந்த இடம் கோயில் கட்டுவதற்குத் தகுதியான இடம் இல்லை என்று கமலாபதி திரிபாதி போன்ற பண்டிதர்கள் கூறியுள்ளனர் (பார்க்க: டெக்கான் ஹெரால்ட், ஜுலை 8, 1989)

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள குறைபாடுகளில் பெரும்பாலானவை பாபரி மஸ்ஜித் நிலை கொண்டிருந்த இடத்திற்குப் பொருந்தி வருகின்றன. இருப்பினும் அந்த சர்ச்சைக்குரிய, அபச்சாரமிக்க இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட விசுவ ஹிந்துபரிசத் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஹிந்து சாஸ்திரங்களை பழிப்பதாக உள்ளன. மண்டை ஓடுகள், எலும்புகள் மற்றும் பிணங்கள் காணப்படும் இடங்களில் கோயில்கள் என்ன, வீடுகளே கட்டக் கூடாது என்பது ஹிந்துக்களின் ஐதீகம். ஆனால் பாபரி மஸ்ஜிதின் கிழக்கு வாசலுக்கு முன்பு அதன் வளாகத்தில் 75 முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கஞ்சே சஹித்டன் என்று அழைக்கப்படுகின்றது என்று ராம் கோபால் பாண்டே தனது நூலில் (ராக்த் ரஞ்சித் இத்திஹாஸில்) குறிப்பிடுகிறார்.

பாபரி மஸ்ஜித் வளாகத்தில் 2003ல் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி ‘முடிவுகளை தனது தீர்ப்பிற்கு ஆதரவாக நீதிபதி சர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு சர்ச்சைக்குரியது. ஆனால் இதில் கூட முஸ்லிம்கள் பயன்படுத்தும் பீங்கான்கள் கிடைத்தது. இது தவிர எலும்புகளும் கிடைத்தன. இதன் மூலம் அது முஸ்லிம்களின் கபரஸ்தான் என தெரிகிறது.

வி.ஹெச்.பி. எழுதித் கொடுத்ததைத் தான் சர்மா தீர்ப்பாக தந்துள்ளார். எனவே தான் அவருக்கு சாதுக்கள் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக ராம் விலாஸ் வேதாந்தி என்ற சாமியார் அறிவித்துள்ளார் என்று தோன்றுகிறது.

-இ.அருட்செல்வன்

நன்றி; tmmk.in

04 அக்டோபர், 2010

அப்துல் ஜாப்பர் கண்டுபிடித்த தண்ணீர் இறைக்கும் இயந்திரம்




விலையோ குறைவு லாபமோ பெரிது!மனித சக்தியை மட்டுமே பயன்படுத்தி தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த அப்துல் ஜாபர்: பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். பள் ளிப் படிப்பிற்குப் பின் மோட்டார் மெக்கானிக் கல் தொழிற் கல்வியை படித்தேன். அந்த படிப்பு தான் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் உருவாக்க உதவியது.பல நீர் இறைக்கும் இயந்திரங்கள் இருக்கலாம், ஆனால் இது வித்தியாசமானது. எந்த விதமான எரிசக்தியையும் உபயோகிக்காமல் மனித சக்தியை மட்டுமே பயன்படுத்தி மணிக்கு 2,000 லிட்டர் தண்ணீர் இறைக்கலாம்.மூன்று நிமிடத்திற்குள் 500 லிட்டர் தண்ணீர் இறைத்துவிடலாம். அதுவும் சைக்கிள் மிதிப்பதைப் போன்றே மிகவும் எளிதான கால் பெடலிங் மூலம். இந்த இயந்திரத் திற்கு, "ஷீல்டு மார்ஷல் பெடல் பம்ப்' என்று பெயரிட்டுள்ளேன்.நம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவே இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தேன். வீட்டுத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றலாம், இறைக்கலாம். நகரக் கழிவுநீர்க் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் தேக்கத்தை சரி செய்யலாம், மழைக்காலத்தில் பாலத்தின் கீழ் தேங்கும் மழை நீரை எளிதாக வெளியேற்றலாம், பைப் மூலம் மலையின் உச்சிக்கு நீர் எடுத்துச் செல்லாம்.இந்த இயந்திரம் ஒரு சிறந்த சைக்கிளிங் உடற்பயிற்சி கருவியாக செயல்படுகிறது. ஒருவரின் உடற்கூறுகளை இதை இயக்குவதற்கு முன்னும், பின்னும் ஈ.சி.ஜி., உட்பட அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் செய்து பார்த்து விட்டேன். இதன் மருத்துவச் சான்றிதழில் இந்த இயந்திரத்தை இயக்குவதால் எந்த உடல் உபாதைகளும் ஏற்படுவதில்லை. மாறாக, இதை இயக்குபவர் மேலும் புத்துணர்ச்சியடைகிறார் என்பது தெரிய வந்தது.இயந்திர சுழற்சியின் அடிப்படை விதிகளைக் கொண்டு இது இயங்குகிறது. இந்த இயந்திரத்துக்கு இந்திய அரசின் காப்புரிமை கிடைத்துள்ளது. இரும்பினால் செய்யப்பட்டதால், இதன் எடை 70 கிலோவாக உள்ளது. விற்பனைக்கு வரும்போது பைபரில் உருவாவதால் இதன் எடை மிகவும் குறைவதுடன், விலையும் பத்தாயிரம் ரூபாய் அளவில் இருக்கும்.


நன்றி;தினமலர்


அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!


"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.

"நமது சமூகத்தில் மதவெறியர்களுக்கு(fanatics) இடமில்லை, இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு" இப்படி சொல்வது வேறுயாருமல்ல குஜராத் பாசிச மோடி என்ற மதவெறியன் தான்.

"தேசிய இணைவுக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது, உடனே ராமன் கோயிலை பெரிதாக கட்டுவோம்" இப்படி புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகின்றபடி உளறியது போல தெளிவாக உளறியிருப்பவன் திருவாளர் மார்க்கெட் போன அத்வானி.

அயோத்தித் தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம் செய்யும் மாயம் இந்த அதிசய பேச்சுக்களையெல்லாம் நாம் கேட்க வேண்டிய காலக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளும் இந்து மத வெறித் தலைவர்களின் நல்லொழுக்க பேச்சுக்களால் நிரம்பி வலிந்தன. இது அயோத்தித் தீர்ப்பு அல்ல, அயோக்கியத் தீர்ப்பு என்பதை இதுவே உரக்க ஒலித்தது.

இந்தத் தீர்ப்பில் இந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் மனசாட்சியாக நீதிமன்றத்தின் குரல் ஒலித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாபர் மசூதி மற்றும் அது இருந்த இடத்தின் மீதான முஸ்லீம்களின் உரிமை என்னென்ன காரணங்களை நிராகரித்து பறிக்கப்பட்டதோ அதே நிராகரிக்கப்பட்ட காரணங்களை/வாதங்களை ஏற்றுக் கொண்டு ஆர் எஸ் எஸ் காவி வெறியர்களுக்கு அந்த இடத்தின் மீது உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முரன்பாடு என்று கேட்டவர்கள் எல்லாம் நேற்று தேசவிரோதிகள் என்று தூற்றப்பட்டார்கள், கேலி செய்யப்பட்டார்கள்.

'அங்குதான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை எனவே அந்த இடம் அவர்களுக்கே சொந்தம்' (தீர்ப்பு நகல்1 மற்றும் 2) என்று சொல்லும் நீதிமன்றம்,

'அது பாபருக்கு சொந்தமான இடம் என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் என்பதும் போதுமான அளவு நிருபிக்கப்படவில்லை, எனவே உரிமையில்லை' (தீர்ப்பு நகல் 2, சரத்து 2) என்று கூறி முஸ்லீம்களின் உரிமையை மறுத்துள்ளது. ஆதாரமே இல்லாத ராமன் பிறந்த இடம் என்ற கட்டுக்கதை உண்மை ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் நேரடி ஆதாரமற்றது(தீர்ப்பு நகல் 1, சரத்து 2.) என்பதாலேயே 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பொய் ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.

இதைத்தான் இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: "இந்த நாட்டின் இராண்டம்தர குடிமகனாக உணர்கிறேன்". இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லீம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட நாட்டின் முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர் எஸ் எஸ்ன் இலட்சியமும் ஆகும்.இதைத்தான், 'தேசிய ஒருங்கிணைப்புக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது' என்று முழங்குகிறான் அத்வானி.

இல்லாத ராமனுக்கு அந்த இடம் சொந்தமாம், ஆனால் பாபர் கட்டவில்லையென்பதாலேயே அது மசூதிக்கு சொந்தமில்லையாம். அப்படியென்றால் இடிக்கப்பட்ட மசூதி என்ன அந்தரத்திலா தொங்கிக் கொண்டிருந்தது, அந்த இடத்தில்தானே இருந்தது? யார் கட்டினால் என்ன? மசுதி இருந்தது என்ற உண்மைதானே இங்கு முக்கியமானது? 1949ல் ராமன் சிலையை அங்கு வைத்த திருடன் யார் என்று நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்ததா? அப்போது மட்டும் இந்துக்களின் நம்பிக்கை முக்கியம், அதன் பூர்வாசிரமம் தேவையில்லை?

'1949ல்தான் மசூதியின் மைய கோபுரத்திற்குக் கீழே ராமன் சிலை வைக்கப்பட்டது (தீர்ப்பு நகல் 1,2,3). எனவே அது இந்துக்களுக்குச் சொந்தம்' என்று கூறியுள்ள நீதிமன்றம்.

'மசூதியை இஸ்லாம் சொல்லுகின்ற விதிகளின் படி கட்டவில்லை எனவே அது மசூதியில்லை(தீர்ப்பு நகல் 3), அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை" என்று கூறியுள்ளது. ராமன் சிலை மட்டும் இந்து விதிமுறைகளின் படித்தான் 1949ல் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதா என்ன? விதிமுறைகளெல்லாம் முஸ்லீமுக்கு மட்டும்தான் போலும்?

1949க்குப் பிறகு மைய கோபுரத்தின் கீழ் ராமன் சிலை வைக்கப்பட்டதால் அது இந்துவுக்குச் சொந்தம்(தீர்ப்பு நகல் 1, 2,3) எனில் 1949க்கு முன்புவரை அங்கு சிலையும் கிடையாது ஒன்றும் கிடையாது. பல நூறு வருடங்களாக அங்கு முஸ்லீம்கள்தான் தொழுதார்கள்(தீர்ப்பு நகல் 1,2). எனில், அவர்களுக்கு உரிமையில்லையா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதீர்கள். தேவைப்பட்டால் ஆயிரம் வருட பழய நம்பிக்கை(ராமன்) என்று நியாயப்படுத்தவும், தேவையில்லையெனில் லேட்டஸ்ட்(1949ல் சிலை வந்தது) என்னவென்று பாருங்கள் என்று நிராகரிக்கவும் ஆர் எஸ் எஸ்ன் மனசாட்சியாம் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.

அதாவது மைய கோபுரம் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்பது நிருபிக்கப்படவில்லை என்கிறது நீதிமன்றம். சரி இருக்கட்டும். ஆனால் இந்துக்களுக்கு மைய கோபுரம் சொந்தம் என்பதை மட்டும் எப்படி நீதிபதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்? அங்கு 1949ல் சிலை வைக்கப்பட்டதாலேயும், அதற்கு முன்பு வரை பொதுவாக அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று நம்பிக் கொண்டிருந்த இந்துக்கள், மசூதி உருவான பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இராமன் பிறந்தான் என்று மாற்றிக் கொண்ட இந்துக்கள், பிறகு 1949ல் திருட்டுத்தனமாக ராமனது சிலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழே வைக்கப்பட்டது எனவே அது இந்துக்களுக்குச் சொந்தமாம்(தீர்ப்பு நகல் 1, 2,3). நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் சொல்கிறது.

நீதிமன்ற தீர்ப்பில் எங்கேயுமே மைய கோபுரம் உள்ள பகுதி இந்துக்களுக்கு சொந்தம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதால் அதை அவர்களுக்குத் தருகிறோம் என்று சொல்லவில்லை. நிருபணம் எல்லாம் முஸ்லீம்களுக்குத்தான், இந்துக்களுக்கு நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் இதன் பொருள்.

"மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமையை சன்னி வக்பு வாரியம் நிருபிக்கவில்லை. மேலும், மசூதி இருந்த இடம் பாபருக்கு சொந்தமானது என்பதும் நிருபனமாகவில்லை" என்று கூறியுள்ளது நீதிமன்றம் (தீர்ப்பு நகல் 1, 2, 3).

ராமன் பிறந்த இடம் என்பதும்தான் நிருபிக்கப்படவில்லை, அங்கு ராமன் கோயில்தான் இருந்தது என்பதோ அல்லது கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதோ கூடத்தான் நிருபிக்கப்படவில்லை(தீர்ப்பு 1, 2). அந்த இடம் இந்துக்களுக்கானது என்பதும் கூடத்தான் நிருபிக்கப்படவில்லை. ஆனாலும் இந்துக்களின் நம்பிக்கை என்பதால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்குத் தரப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் படி நிருபிக்கப்பட்டவையெல்லாம் இவைதான், 1) ஏற்கனவே, இடிந்த கோயில் ஒன்று இருந்துள்ளது, அங்குதான் மசூதி கட்டப்பட்டது. 2) கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. 3) மசூதி கட்டப்பட்ட பிறகுதான் மசூதி இருக்கும் அந்தக் குறிப்பான பகுதியில் ராமன் வழிபாடு நடக்கத் தொடங்கியது. 4)அதுவும் வெளிப் பிரகாரத்தில்தான். 5)1853 வரை மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லை, இரு மதத்தவரும் அக்கம் பக்கமாக வழிபட்டு வந்துள்ளனர்.

இதிலும் கோயில்தான் இருந்ததா என்பதை ஆணித்தரமாக அகழ்வாராய்ச்சியால்` சொல்ல இயலவில்லை. பூசி மெழுகவே செய்கிறார்கள்.

இவைதான் நிருபிக்கப்பட்டவையெனில், இதே நிலையை மீண்டும் கொண்டு வருவதுதானே நியாயம்? மசூதியின் பிரகாரத்தில் இந்துவின் வழிபாட்டையும், மசூதி இருந்த இடத்தில் மசூதியையும் கொண்டு வருவதுதானே நியாயம்?

தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், வெளிப் பிரகாரத்தில் சீதா மற்றும் ராமன் வழிபாடு நிகழ்ந்ததால் அது நிர்மோகி அகாராவுக்குச் சொந்தம், உள்ளே மைய ஸ்தூபியில் 1949ல் ராமன் சிலையை வைக்கப்பட்டதாலும் அதையே இந்துக்கள் அன்றிலிருந்து நம்பத் தொடங்கியதாலும் அந்த இடம் இனிமேல் மசூதிக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ சொந்தம் கிடையாது இந்து மகா சபைக்கே சொந்தம், 1992ல் மசூதி இடிக்கப்படும் வரை அங்கு மசூதி இருந்தது என்பது மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுவிட்டது எனவே போனால் போகிறது மூனாவது பங்கு முஸ்லீம்களுக்கு என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.

அதாவது 400 வருடம் மசூதி இருந்தது ரெவின்யு டிப்பார்மெண்டிலோ அல்லது நிலப் பட்டா மூலமோ ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை (பாபருக்கு இந்த சட்டப் பிரச்சினையெல்லாம் தெரியாமல் போனதற்கு பாவம் நீதிபதிகள் என்ன செய்வார்கள்) எனவே அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை போலும். 400 வருட மசூதிக்கு உரிமையில்லை ஆனால் 61 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ராமனது திருட்டு சிலைக்கு உரிமையுண்டு. ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை(புதிய நம்பிக்கையா, பழைய நம்பிக்கையா என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு தேவையில்லாத விசயம்).

இப்போது இந்தப் பிரச்சினையின் காலனி ஆட்சிக்கால பரிணாமத்தை புரிந்து கொள்வது தேவையாக உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்து முஸ்லீம் பிரித்தாளும் சூழ்ச்சியும், காலனியாதிக்க பிரிட்டிஷ்க்காரர்களின் ஏவல் படையாகச் செயல்பட்ட இந்துத்துவவாதிகளின் முஸ்லீம் எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு அரசியலும் இந்த பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.

நிர்மோகி என்ற குழு அங்கு கோயில் இருந்ததை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று களத்தில் இறங்கிய பிறகுதான் 1853ல் அங்கு முதல் மத மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் நடந்த கலவரங்களின் விளைவால், நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த அங்கு கூட்டாக இந்துக்களும், முஸ்லீம்களும் உள்பிரகாரத்தில் வழிபடுவது தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மசூதி இருந்தபடியால், இந்துக்களின் வழிபாடிற்கு என்று வெளிப் பிரகாரத்தில் ஒரு இடம் கட்டப்பட்டது.

இதுதான் பிரச்சினையின் மையமான பகுதி. 1850களில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தலைமையில் தென்னிந்தியாவில் ஒரு கூட்டிணைவு உருவாகி அது பிரிட்டிஸால் சிதைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் தலைமையில் தந்திரப் போரில் ஈடுபட்ட அரசர்கள் மூட்டிய கனல் 1805ல் வேலூர் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. பிற்பாடு, 1857ல் இந்திய சுதந்திரப் போராக இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பியது. இவையிரண்டும் பிரிட்டிஷ்க்காரர்களால் ஒடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கி இருந்தது.

மத பிரிவினைகள் இன்றி மக்கள் ஒன்று பட்டு நின்றது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அபாயமானது எனவே, பிரித்தாளும் தந்திரம் விரிவாக அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், புரட்சிகரமான இந்த காலகட்டத்தில்தான் துரோகமமும் உத்வேகத்துடன் முன்னுக்கு வந்தது. அந்தத் துரோகத்தின் வரலாற்றுக் குரலாக பதிவு செயப்பட்டதுதான், பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' என்ற புதினம், அதில் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவதே முக்கியம், பிரிட்டிஷ்க்காரர்களின் ஆட்சி நமக்குத் தேவையானது என்ற அரசியலும் பேசப்பட்டது. முஸ்லீம்களை விரட்ட செல்லும் கூட்டத்தினரின் 'தேசபக்த'ப் பாடலாக வந்தேமாதரம் பாடலும் புதினத்தில் இயற்றப்பட்டது.

இந்துத்துவாதிகளின் மதவெறி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரமும், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாளமும், லயமுமாக இணைந்து செயல்பட்டு இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை பிழைப்புவாத லாவணிக் கச்சேரியாகவும், மதவாத பிரிவினையாகவும் சிதைத்தன. இவைதான் பாபர் மசூதிப் பிரச்சினையில் தெரிந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மோதலைத் தூபம் போடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன.

ஒரு நீதிமன்றத் தீர்ப்பு முற்றுமுதலாக பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்க இயலுமா? அத்தகைய நம்பிக்கை பெரும்பான்மையினருடையது என்பது கூட ஜனநாயக முறையில் நிருபிக்கப்படாத பொழுது தீர்ப்பின் தன்மையை நியாயமானதாக எப்படி புரிந்து கொள்ள இயலும்? மசூதியை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியதை மீறி அது இடிக்கப்பட்டுள்ளதற்கு நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன? இவையெல்லாம் உண்மையில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதையல்ல மாறாக இன்னும் சில பல வருடங்களுக்கு அடித்துக் கொண்டு அப்பாவி மக்களை பலி கொடுக்கப்படுவதையே உறுதி செய்யும். அதைத்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் விரும்புகிறார்கள்.

இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.

thanks to- vinavu.com