#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

06 அக்டோபர், 2010

பாபரி பள்ளிவாசல் இடம்: கோயில் கட்டுவதற்கு ஆகமங்களின் அடிப்படையில் தகுதியற்ற,

பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு ஒரு வாய்ப்பு! - -நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான்

-<span title=நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான்" title="-நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான்" border="0" width="295" height="375">

-நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான்

பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு சொன்ன மூவரில் ஒருவரான நீதிபதி சிப்கத்துல்லாகான் எழுதியுள்ள தீர்ப்பில் இருந்து சில பகுதிகளை அப்படியே தமிழில் தருகிறோம். சொத்து வழக்கில் வரலாற்றையோ அல்லது அகழ்வாராய்ச்சி சான்றுகளையோ சான்றாக எடுக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டும் அவர், தானும் வரலாற்று ரீதியாக இந்த வழக்கை அணுகவில்லை என்று கூறுகிறார். ஆனால் பாபரி மஸ்ஜித்&கோயிலை இடித்துவிட்டு கட்டப்படவில்லை என்று சொல்லிவிட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே சிதிலமடைந்து கிடந்த ஒரு பழங்கட்டிட இடிபாடுகள் இருந்த இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் பாபரி மஸ்ஜிதின் நடுக்கும்பத்தின் கீழ் ராமர் பிறந்தார் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் அந்த வளாகத்தில் எங்கோ ஒரு இடத்தில் அவர் பிறந்தார் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென தீர்ப்பு அளித்துள்ளார். அவரது நிலைப்பாட்டிற்கு முரணாகவே தீர்ப்பை வழங்கி விட்டு இது இறுதி தீர்ப்பு அல்ல& உச்சநீதிமன்றம் வழங்கப்போவது தான் இறுதி தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு முஸ்லிம்களுக்கு சில ஆலோசனைகளை தருகிறார். மொத்தத்தில் ஏதோ ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகி அவர் தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. மூன்று நீதிபதிகளில் மிக சுருக்கமாக 285 பக்கங்களில் தனது தீர்ப்பை அவர் முடித்துக் கொண்டார்.அதிலிருந்து சில பகுதிகள் இங்கே தமிழில் தருகிறார் அருட்செல்வன் - ஆசிரியர்)



எனது தீர்ப்பு சுருக்கமானது. மிகவும் சுருக்கமானது. இந்த பரபரப்பான சிக்கலான விஷயத் தை எங்கே நிறுத்த வேண்டும் என்பதை அறிந்த ஓவியர் என்று சிலர் என்னை பாராட்டலாம். அல்லது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னையில் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சிலர் என்னைப் பற்றி எண்ணலாம். நான் வரலாறு மற்றும் தொல்லியியல் குறித்து ஆழமாக செல்லவில்லை. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. முதலாவதாக இந்த சொத்து வழக்கை தீர்ப்பதற்கு வரலாறும் தொல்லியியலும் மிக அவசியமாக தேவைப்படவில்லை. இரண்டாவதாக மிகவும் சிரமப் பட்டு அத்தகைய முயற்சியில் ஈடுபட்டாலும் அதன் இறுதியில் எனக்கு பொக்கிஷம் கிடைக்குமா அல்லது ஒரு அரக்கனை எதிர்கொள்வேனா என்பது எனக்குத் தெரியாது. (உண்மை என்ற பொக்கிஷம் அல்லது குழப்பம் என்ற அரக்கன்)மூன்றாவதாக வரலாற்றின் அடிச்சுவடு தெரியாதவன் நான். எனவே வரலாற்றாசிரியர்களின் முரண்பட்ட கருத்துகளுக்கு இடை யே நான் சிக்கிக் கொள்ள விரும்ப வில்லை. நான்காவதாக கர்நாடக மாநில வக்ப் வாரியத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொத்துடமை தொடர் பான வழக்குகளில் வரலாற்று உண்மைகளுக்கும் கோரிக்கை களுக்கும் இடமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு இறுதியான தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகு தான் மிக முக்கிய கட்டமே ஏற்படும். தகராறு செய்யும் இரு தரப்பினருக்கும் நான் பின்வரு பவற்றை சொல்ல விரும்புகிறேன்.

ராமரின் பண்பாடுகளில் மிகவும் மேலோங்கி இருந்தது அவரது விட்டுக் கொடுக்கும் குணம்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) தனது எதிரிகளுடன் ஹுதைபிய்யா உடன்படிக்கையை செய்து கொண்ட போது அது மிகப் பெரும் சரணாகதி என்று அவர்களது மிக விசுவாசமான தோழர்களே கருதினார்கள்.

ஆனால் திருக்குர்ஆன் அதனை மிகத் தெளிவான வெற்றி என்று வர்ணித்தது. அது போன்றே அதுவும் அமைந்தது. மிக குறுகிய காலத்திற்குள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) வெற்றியாளராக ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.

எனது தீர்ப்பில் இடிப்பு என்ற உப தலைப்பில் நாம் மீண்டும் எழுச்சி பெற்று எழுந்ததை நான் வியந்து பாராட்டியுள்ளேன். ஆனால் அத்தகைய நிலை உடன டியாக மீண்டும் தொடர்ந்து நடை பெறாது என்பதை நாம் உணர வேண்டும். இன்னொரு சரிவு ஏற்பட்டால் நாம் விரைவில் எழுந்து நிற்க முடியாது. இன்றைய உலகம் 1992&ஐ விட வேகமாக செயல்பட்டு வருகிறது. நாம் நசுக்கபட்டு விடுவோம்.

மற்றவர்களுடனான முஸ்லிம் களின் உறவு குறித்து இஸ்லாத்தின் போதனை என்ன என்பதை முழு உலகமும் அறிய விரும்புகின்றது என்பதை முஸ்லிம்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் பிறருடன் பகைமை கொள்வது, நட்பு கொள்வது, சகிப்பு தன்மை யுடன் நடந்துகொள்வது குறித்து இஸ்லாம் சொல்வது என்ன? இஸ்லாத்தின் போதனைகள் மூலம் பிறரைக்கவரும் வாய்ப்புகளை முஸ்லிம்கள் எப்படி பயன்படுத் திக் கொள்ள வேண்டும்? பிறரை எப்போதும் எப்படி வேண்டுமானாலும் எதிர்க்கலாமா அல்லது கூடாதா? இவை எல்லாம் நம் முன் வைக்கப்படும் கேள்விகள்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம் கள் ஒரு உன்னதமான இடத்தில் உள்ளார்கள். அவர்கள் இங்கே ஆட்சியாளர்களாக இருந்து இருக்கிறார்கள். பிறர் ஆட்சியின் கீழும் வாழ்ந்து இருக்கிறார்கள். தற்போது அதிகாரத்தில் (இளைய) பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மையாக இங்கே வாழ வில்லை. ஆனால் அவர்கள் புறந்தள்ளக்கூடிய சிறுபான்மையினர் ஆகவும் இங்கு இல்லை. (இந்தோனேசியாவிற்கு அடுத்ததாக இந்தியாவில் தான் உலகிலேயே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்). பிற நாடுகளில் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் பெரும்பான்மை யினராக இருக்கிறார்கள். எனவே நாம் எழுப்பிய கேள்விகள் குறித்து அவர்கள் கவலைப்படப் போவதில்லை. அல்லது அவர்கள் மிக அற்பமான சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். எனவே அவர் களால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்திய முஸ்லிம்களோ மிகப் பெரும் மார்க்க அறிவையும் ஞானத்தையும் பெற்று இருக்கிறார்கள். எனவே இந்த கேள்விகளுக்கான சரியான நிலைப்பாட்டை எடுத்துச் சொல் வதற்கு மிகச்சிறந்த நிலையில் அவர்கள் தான் இருக்கிறார்கள். தற்போது கையில் உள்ள பிரச்சினைக்கு நுட்பமாக தீர்வு காண்பது மூலம் இப்பணியை அவர்கள் தொடங்கட்டும்.


பாபரி பள்ளிவாசல் இடம்: கோயில் கட்டுவதற்கு ஆகமங்களின் அடிப்படையில் தகுதியற்ற,



பாபரி பள்ளிவாசல் இஸ்லாமிய நெறிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு சொன்னவர்களில் ஒருவரான தர்ம வீர் சர்மா கூறியுள்ளார். எந்த இஸ்லாமிய நெறிமுறை மீறப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் பாபரி பள்ளிவாசல் அமைந்திருந்த இடம் கோயில் கட்டுவதற்கு தகுதியற்ற இடம் என்பதே சில ஹிந்து சமய அறிஞர்களின் கருத்தாக இருந்துள்ளது.




சில்ப-சாஸ்திர என்னும் ஹிந்து கட்டடக் கலை ஆய்வுகளின் படி பாபரி மஸ்ஜித் இருந்த இடம் கோயில் கட்ட தகுதியற்றதாகும். மானஸாரா எனும் சில்ப-சாஸ்திர நூலின் 3வது அத்தியாயத்தை மேற்கோள் காட்டி, பெங்களூரைச் சேர்ந்த மாஜிஸ்ட்ரேட் ராம் ராஜ் தனது நூலான (P 16-17) - (ஹிந்துக் கட்டடக் கலை குறித்த கட்டுரை தொகுப்பில்) எந்த இடங்களையெல்லாம் கோயில் கட்ட பயன்படுத்தக்கூடாது என்று கூறுகின்றார்.

‘வட்ட வடிவில் அல்லது அரைவட்ட வடிவில் அமைந்தது, மூன்று அல்லது ஆறு கோணம் உடையது, திரிசூலம் அல்லது முறம் போன்றுள்ளது, மீனுடைய பிற்பகுதியைப் போன்றது அல்லது ஆமையைப் போன்றது அல்லது பசுவின் முகம் போன்றது - மனித மண்டை ஓடுகள், - எலும்புகள், - எண்ணை, தேன், பிணங்கள், மீன்கள் நிறைந்து காணப்படும் இடங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. என்று அந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

பாபரி பள்ளிவாசல் இருந்த இடம் கோயில் கட்டுவதற்குத் தகுதியான இடம் இல்லை என்று கமலாபதி திரிபாதி போன்ற பண்டிதர்கள் கூறியுள்ளனர் (பார்க்க: டெக்கான் ஹெரால்ட், ஜுலை 8, 1989)

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள குறைபாடுகளில் பெரும்பாலானவை பாபரி மஸ்ஜித் நிலை கொண்டிருந்த இடத்திற்குப் பொருந்தி வருகின்றன. இருப்பினும் அந்த சர்ச்சைக்குரிய, அபச்சாரமிக்க இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட விசுவ ஹிந்துபரிசத் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஹிந்து சாஸ்திரங்களை பழிப்பதாக உள்ளன. மண்டை ஓடுகள், எலும்புகள் மற்றும் பிணங்கள் காணப்படும் இடங்களில் கோயில்கள் என்ன, வீடுகளே கட்டக் கூடாது என்பது ஹிந்துக்களின் ஐதீகம். ஆனால் பாபரி மஸ்ஜிதின் கிழக்கு வாசலுக்கு முன்பு அதன் வளாகத்தில் 75 முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கஞ்சே சஹித்டன் என்று அழைக்கப்படுகின்றது என்று ராம் கோபால் பாண்டே தனது நூலில் (ராக்த் ரஞ்சித் இத்திஹாஸில்) குறிப்பிடுகிறார்.

பாபரி மஸ்ஜித் வளாகத்தில் 2003ல் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி ‘முடிவுகளை தனது தீர்ப்பிற்கு ஆதரவாக நீதிபதி சர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு சர்ச்சைக்குரியது. ஆனால் இதில் கூட முஸ்லிம்கள் பயன்படுத்தும் பீங்கான்கள் கிடைத்தது. இது தவிர எலும்புகளும் கிடைத்தன. இதன் மூலம் அது முஸ்லிம்களின் கபரஸ்தான் என தெரிகிறது.

வி.ஹெச்.பி. எழுதித் கொடுத்ததைத் தான் சர்மா தீர்ப்பாக தந்துள்ளார். எனவே தான் அவருக்கு சாதுக்கள் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக ராம் விலாஸ் வேதாந்தி என்ற சாமியார் அறிவித்துள்ளார் என்று தோன்றுகிறது.

-இ.அருட்செல்வன்

நன்றி; tmmk.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக