
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
13 அக்டோபர், 2010
தமிழகத்திலிருந்து 4,241 பேர் புனித ஹஜ் பயணம்

ஆலந்தூர், அக். 13: தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு ,241 பேர் செல்வதாக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை இரவு புனித ஹஜ் பயணத்திற்கு முதல் குழுவினர் சென்றனர். இவர்களை விமான நிலையத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு சார்பில் ஹஜ் பயணத்திற்கு செல்லும் பயணிகளை வழியனுப்பி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திலிருந்து இதுவரை ஹஜ் புனித பயணத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஆண்டுக்கு 2,700 பேர் தான் சென்றுள்ளனர். ஆனால், முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சியால் இந்த ஆண்டு 4,241 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின். முதல் குழுவில் மொத்தம் 460 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். வழியனுப்பும் நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் மைதீன்கான், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக