#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

28 அக்டோபர், 2010

தாம்பரம் ராஜா...தடதடக்கும் த.மு.மு.க.! (ஜீனியவர் விகடனில் வெளியான கட்டுரை)



''முஸ்லிம் சமுதாயத்தினரோடு திராவிட இயக்கமும் நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல... 70 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம் லீக் மாநாட்டில் பச்சைப் பிறைக் கொடி பிடித்தவன் நான்'' - முதல்வர் கருணாநிதி அடிக்கடி சொல்வது இது. ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ-வான எஸ்.ஆர்.ராஜாவோ, இதற்கு நேர் எதிராக இருக்கிறார். சமீபத்தில் பொதுக் கூட்ட மேடை ஒன்றில், 'த.மு.மு.க-வைத் தடை செய்ய வேண்டும்' என்று எஸ்.ஆர்.ராஜா தடாலடியாகப் பேச... கொதிப்பில் இருக்கின்றன இஸ்லாமிய அமைப்புகள்! இதற்கிடையே, 'அவதூறு கிளப்பும் வகையில் போஸ்டர் ஒட்டினர்' என்று சொல்லி த.மு.மு.க-வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப் உட்பட ஐந்து பேர் மீது தாம்பரம் போலீஸார் வழக்கு பதிவு செய்ய... பதற்றம் பல மடங்கு கூடி இருக்கிறது.

எஸ்.ஆர்.ராஜாவுக்கும் முஸ்லிம் சமூகத்தவருக்கும் இடையே என்னதான் பிரச்னை? மனிதநேய மக்கள் கட்சியின் காஞ்சி புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் ஹைதர் அலியிடம் பேசினோம். ''கடந்த சட்டசபைத் தேர்தலில் இதே ராஜாவுக்காக வீதிவீதியாக நடந்து போய் நாங்கள் ஓட்டு கேட்டோம். அப்போ, எளிமையான மனுஷனா இருந்த ராஜா, ஜெயிச்சதும், தாம்பரத்துக்கே ராஜாவா மாறிய மாதிரி அடாவடியா செயல்படுறார்.

தாம்பரம் பஜாரில் 30 வருஷத்துக்கு மேல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடார், முஸ்லிம் சமூகத்தினர் சுமார் 500 பிளாட்பாரக் கடைகளை வெச்சிருந்தாங்க. ஆனா, ராஜாவோ தன்னோட ஆட்களுக்கு அந்தப் பிளாட்பாரக் கடைகளை ஒதுக்கித் தரத் திட்டமிட்டு, அடியாட்கள் மூலமாக எங்கள் கடைகளைக் காலி செய்ய முயற்சி செய்தார்.


உடனே, இந்தப் பிரச்னையை ஸ்டாலின் மற்றும் ஆற்காடு வீராசாமி கவனத்துக்குக் கொண்டுபோனோம். இந்த விவகாரத்தில் வியாபாரிகளோட நலனுக்காக, த.மு.மு.க. சார்பில் குரல் கொடுத்தோம். இதில் கடுப்பான ராஜா, எங்களைப் பழிதீர்க்க நேரம் பார்த்துட்டு இருந்தார். எங்கள் சமூகத்து ஆட்கள் வைத்திருந்த பிளாட்பாரக் கடைகளை அடாவடியாக அப்புறப்படுத்திவிட்டார்!'' என்றார் கோபம் குறையாத வராக.

த.மு.மு.க-வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப், ''சமீபத்தில் ஒரு துணிக் கடை வியாபாரிக்கும், கடை உரிமையாளருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் பஞ்சாயத்து செய்த ராஜா, கடைக்குப் பூட்டு போட்டார். இந்த விவகாரத்தில் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், ராஜாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். உடனே, ராஜாவின் அடியாட்கள் வெள்ளையனை தாக்குவதற்காகத் துரத்த... கடைசியில் மசூதியில் இருந்த எங்கள் ஆட்கள்தான் அவரைக் காப் பாற்றினார்கள்

இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு சண்முகம் சாலையில் நிகழ்ந்த ஒரு சாதாரண விபத்தை மதப் பிரச்னையாகத் திரித்தவர், இந்து முன்னணி, பி.ஜே.பி. கட்சியினரை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார். இது மட்டும் அல்ல... த.மு.மு.க-வைத் தடை செய்யச் சொல்லி துணை முதல்வருக்கே கடிதம் எழுதினார். இது எல்லாம் போதாது என்று, கடந்த 7-ம் தேதி தாம்பரத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில், 'சமூக விரோத அமைப்பான த.மு.மு.க-வைத் தடை செய்ய வேண்டும்' என்று ராஜா பேசினார். இத்தனைக்கும் மேடையில், சட்டத் துறை அமைச்சர் துரை முருகன், தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு ஆகிய தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் இருந்தார்கள். ஆனால், யாருமே ராஜாவின் பேச்சைக் கண்டிக்கவில்லை. ஆனால், 'அநாகரிகமாகப் பேசிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நாங்கள் போஸ்டர் ஒட்டியதற்காக எங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். வரும் தேர்தலில் எஸ்.ஆர்.ராஜா போட்டியிட்டால், தொகுதி முழுக்கப் பிரசாரம் செய்துஅவரை டெபாசிட் இழக்கச் செய்வதே எங்கள் லட்சியம்!'' என்றார் ஆவேசமாக.

இது குறித்து எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் பேசினோம். ''தாம்பரம் பஜார் பகுதியில் த.மு.மு.க. நிர்வாகிகளின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதனால், அந்தப் பகுதியில் மட்டும் த.மு.மு.க-வின் செயல்பாடுகளைத் தடை செய்ய வேண்டும் என்று பேசினேன். மற்றபடி, 'தமிழ்நாடு முழுவதும் த.மு.மு.க-வைத் தடை செய்ய வேண்டும்' என்று நான் பேசியதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, என்னை இஸ்லாமியர்களின் விரோதிபோல சித்திரிக் கிறார்கள். மேலும், எனக்குத் துளியும் சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்னையில் என்னைத் தொடர்புபடுத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில், 'சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று நான் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நான் தாம்பரம் வியாபாரிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறேன். வெள்ளையன் சம்பந்தப்பட்ட பிரச்னையில், நீதிமன்றத்தில் என் பக்கம் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி, 10 வருடங்களுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நடைமுறைப்படுத்தினால், என் மீது குற்றம் சொல்கிறார்கள். உண்மை இல்லாத இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை!'' என்கிறார் எஸ்.ஆர்.ராஜா!.

- த.கதிரவன்

நன்றி ஜுனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக