சிங்கம் என்றாலே கால் பிடறியில் பட ஓடுபவர்கள் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாம் கூட அப்படித்தானே?
சர்க்கஸ் என்றால் சிங்கங்களைப் பயிற்றுவித்து அவற்றுடன் சாகசங்கள் புரிவார்கள். அதன்போதும் சில வேளைகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதுண்டு.
அதுவல்லாமல், சிங்கத்தை நாம் நேரில் காண்போமானால் அச்ச உணர்வில் உறைந்து போய் விடுவோமல்லவா?
ஆனால் ஒருவர் சிங்கங்களுடன் குதூகலமாக விளையாடுகின்றார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?
அவர் தான் கெவின் ரிச்சார்ட்சன். இவர் சர்வசாதாரணமாக சிங்கங்களுடன் விளையாடுகிறார்.
தென்னாபிரிக்காவின் ஜொஹார்ன்னஸ்பேர்கிலுள்ள வெள்ளைச் சிங்கங்களுக்கான சரணாலயத்திலேயே இவர் இவ்வாறு அவற்றுடன் விளையாடி வருகிறார்.

34 வயதான கெவின், தன்னை சிங்கங்களுக்கான தூதுவர் எனத் தெரிவிக்கின்றார்.
மேலும் இவர் ஜொஹார்ன்னஸ்பேர்கில் சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் கழுதைகளுக்கான வன விலங்கு பூங்காவொன்றையும் நடத்தி வருகின்றார்.
"சிங்கங்களுடன் ஓர் இரவு முழுவதும் தங்கக்கூட முடியும்" என தெரிவிக்கின்றார் கெவின் ரிச்சார்ட்சன்.
அன்புக்கு மானிடர் மட்டுமல்ல, வன விலங்குகளும் அடிமைதான் என்கின்றாரோ இவர்?

உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா மாநிலங்களிலேயே சந்தைக்கு உகந்த, வணிகச் சூழல் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் 'ஜெலாண்டன் போஸ்டன்' என்ற நாளிதழ் கடந்த 2005 ஆம் ஆண்டு முகமது நபியை கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர். டென்மார்கின் மதவெறிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 6பல நாடுகளில் டென்மார்க் பொருட்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து டென்மார்க்கின் பொருளாதரம் படுவீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக வளைகுடா மற்றும் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் டென்மார்க் பொருட்கள் விலைபோகாமல் தேங்கியதைத் தொடர்ந்து முஸ்லிம் நாடுகளுடனான வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
மக்கா: முஸ்லிம்களுக்கான ஹஜ் புனிதக்கடமையின் போது யாத்ரீகர் போக்குவரத்துக்கு உதவும் வகையில் மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய புனித இடங்களுடன் மக்காவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முழுமை பெற்றுள்ளது. 30 தினங்களுக்கு இந்த ரயில்களின் வெள்ளோட்டம் விரைவில் விடப்படவுள்ளன. ஹஜ் யாத்ரிகர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வேலூரில் இரு தனியார் பேருந்துகளில் பயணிகளைக் கண்காணிக்க தமிழகத்திலேயே முதல்முறையாக ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை பிடிஎன் என்ற தனியார் பேருந்து நிறுவனம் பொருத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயம்-காட்பாடி இடையிலான பேருந்துகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.