
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
16 நவம்பர், 2011
60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக்கிங்

பெங்களூர்:குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை வைத்துள்ளனர்.
Mr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா?
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் விலைவாசி இருக்கிறது. எப்போதும் நம் பிரதமரிடம் இதைப் பற்றி கேட்டால் பல வளர்ந்த நாடுகளை விட நம் நாட்டில்தான் விலைவாசி குறைவு என்பார். இல்லையென்றால் விலைவாசி உயர்கிறது என்றால் நாம் வளர்கிறோம் என்பார். ஒருமுறை இது தற்காலிகம் தான் பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்துவிடும் என்பார்.
14 நவம்பர், 2011
அத்வானியின் ரதயாத்திரையில் அழுகிய முட்டை வீச்சு

புதுடெல்லி:பஞ்சாபில் எல்.கே.அத்வானியின் ஜனசேதனா ரத யாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் அழுகிய முட்டையை வீசினர். கறுப்புக் கொடியும் காட்டப்பட்டது. பஞ்சாபில் சங்கேரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சிரோமணி அகாலிதள்(அமிர்தரஸ்) மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அத்வானியின் ரதயாத்திரை வாகனங்கள் செல்வது சிறிது நேரம் தடைப்பட்டது. அழுகிய முட்டை வீசப்பட்டதால் அசுத்தமான அத்வானி பயணித்த வாகனத்தை சுத்தப்படுத்திய பிறகு யாத்திரை தொடர்ந்தது.
பதிந்தா, ஸாங்க்ரூர் ஆகிய மாவட்டங்களிலும் அத்வானியின் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடந்தது.
நன்றி.தூது ஆன்லைன்
குழந்தைகள் தினம்: ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பயணத்தை வழங்கியது ஜெட் ஏர்வைஸ்
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினம் ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஜெட் ஏர்வைஸ் விமான நிறுவனம் மும்பையிலிருந்து குஜராத்தின் பவநகர் வரை 80 க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்றது. |
“மின்தூண்டுதல் மூளைத்திறனை அதிகரிக்கும்”

மின்காந்தப்புலத்தில் மனித மூளை
மின்சாரத்தின் உதவியுடன் மனித மூளையை தூண்டச்செய்து அதன் மூலம் ஒருவரின் கற்கும் திறனை அதிகப்படுத்தலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகள் செய்திருக்கும் ஆய்வில், மனித மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில், குறைந்த அளவு மின்காந்தப்புல தூண்டுதலை குறிப்பிட்ட கால கட்டத்திற்கு செலுத்துவதன் மூலம் மூளையின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும், அதன் மூலம் ஒருவரது கற்கும் திறனை-- குறிப்பாக ஒருவரின் கற்கும் வேகத்தை அதிகப்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
"அதிகமான வைட்டமின்கள் ஆயுளை குறைக்கும்"

அளவுக்கதிகமான வைட்டமின்களால் ஆபத்து
மனித ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. ஆனால் அதே வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஒருவரின் ஆயுளையே குறைக்கக்கூடிய ஆபத்தான நஞ்சாக அவை மாறுகின்றன என்று அமெரிக்க ஆய்வின் முடிவு குறிப்புணர்த்துகிறது.
ஐம்பது வயது முதல் அறுபது வயதுக்கு
13 நவம்பர், 2011
கீழக்கரை வரலாற்றில் முதன் முதலாக ஒரு எம்.எல்.ஏ குறை தீர்க்கும் நாள் என ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து இருந்தார்.

கீழக்கரையில் குறை கேட்கும் நாளை இராமாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஏற்பாடு செய்து இருந்தார்.
அந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சியில் நடைபெற்றது. இதில் ஊரின் பல அமைப்புகள், ஜமாஅத்துக்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏவிடம் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட ஜவாஹிருல்லாஹ் அவர்கள், உரிய அதிகாரிகளிடம் அதற்கான தீர்வை பெற்று வழங்கினார். கீழக்கரையின் சுகாதாரம், மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை போக்குவரத்து சம்பந்தமான பிரச்னைகளை கோரிக்கை மனுவாக கொடுத்தனர். கூட்டத்திலும் கேட்டனர். அதற்கு முறையான பதிலை உரிய அதிகாரிகளிடம் கேட்டு பெற்று தந்தார்.
12 நவம்பர், 2011
பாம்பு கடித்தும் தனது உயிரை துச்சமாக மதித்து பிறரை காப்பாற்றிய இப்ராஹிம்!
திருப்பூர்: பொங்கி வரும் வெள்ளநீரை பொருட்படுத்தாது சீறிவந்து தீண்டிய கண்ணாடி விரியன் பாம்பை கண்டும் பயப்படாது உயிரை துச்சமென மதித்து ஒரு குடும்பத்தையே காப்பாற்றிவிட்டு பாம்புக்கடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் அனைவராலும் ஹீரோவாக போற்றப்படுகிறார்திருப்பூர்,மங்கலம் ரோடு, கோம்பைத்தோட்டத்தை சேர்ந்த யாக்கூப் என்பவரது மகன் முஹமது இப்ராஹிம் (33);
சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்; சிந்திப்பீர் பெற்றோர்களே!
ஆக்கம் : டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)
இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்து பிரதமராக ஆகுவதிற்கு முன்பாக வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஸ் டூரிஸ்ட்டாக சென்னை வந்திருந்திருந்து அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக(கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஸ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்கு சப்தம் போட்டு பேசினாராம்.
08 நவம்பர், 2011
கண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ
அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி” யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ” யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


