இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினம் ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக ஜெட் ஏர்வைஸ் விமான நிறுவனம் மும்பையிலிருந்து குஜராத்தின் பவநகர் வரை 80 க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்றது.
விமானத்தில் பறக்கும் அனுபவத்தை சமூகத்தின் கீழ் நிலையில் உள்ள குழந்தைகளும் பெறுவதற்காக இந்த ஏற்பாட்டை அந்த நிறுவனம் செய்திருந்தது. முன்னதாக அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இதுகுறித்து குழந்தைகள் கூறியதாவது, 38 ஆயிரம் அடி உயரத்தில் மேகக்கூட்டங்களுக்கு இடையே பறந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் தெரிவித்தனர். விமானத்தில் பறக்க வேண்டும் என்ற தங்களின் வாழ்நாள் கனவு நனவாகி விட்டதாகவும் அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நன்றி.நியு இந்திய நியூஸ் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக