
நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இதேபோல நகரசபை தலைவர் அர்ச்சுனன் அளித்த மனுவில், தெற்கு கரையூர், சேராங்கோட்டை, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், ஏரகாடு, பொன்னநகர், ராமநாத சாமிநகர் ஆகிய பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டவும், எம்.ஆர்.டி நகரில் கலையரங்கம் கட்டவும், கோவில் 4 ரதவீதிகளில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கவும், அரசு மருத்துவமனை பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கவும், சின்னவம்பிள்ளை தெரு முதல், ராமதீர்த்தம் தெற்கு வரை சிமெண்டு சாலை அமைக்கவும் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.1Ð கோடி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
நன்றி.இந்நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக