மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 165 பிரதிநிதிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் பயிற்சி மற்றும் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி இன்று (02.11.2011) காலை சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நடைப்பெற்றது.
இதில் மாநகராட்சி உறுப்பினர் 1, நகராட்சி உறுப்பினர்கள்15, பேருராட்சி உறுப்பினர்கள்44, ஊராட்சி மன்ற தலைவர்கள்7, பேருராட்சி துணைத் தலைவர்கள் 2, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள்12, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 84 உள்ளிட்ட 165 மமக .உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் .உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிப்பது குறித்தும் நிதியை முறையாக செலவழிப்பது குறித்தும் வகுப்புகள் எடுக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அபுல் ஹசன், எம்.எல். தாஸ், மற்றும் சாத்தனி சிராஜ் ஆகியோர் வகுப்பெடுத்தனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஐயங்களுக்கு தகுந்த விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றிபெற்றவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் சான்றிதழ்களை வழங்கினர்.
சமீபகாலத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிகழ்ச்சியில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தமுமுக பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லா, மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மமக பொருளாளர் எஸ்.எஸ். ஹாருண் ரஷீது, தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, மமக துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா, மாநில செயலாளர்கள் கோவை உமர், மௌலா நாசர், எஸ்.எம். ஜெய்னுலாபுதீன்,, பேரா.ஜெ.ஹாஜாகனி, நாசர் உமரி, முஹம்மது கௌஸ், ஜிப்ரி காஸிம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக