#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

29 நவம்பர், 2011

விலை உயர்வா? தண்டனையா?




by Thamimun Ansari 
தமிழக மக்கள் மிகவும் கொதித்துப்போய் உள்ளனர். திமுகவின் கடந்தகால மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக வீசிய எதிர்ப்பலையில் கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.

இம்முறை எடுத்தேன் & கவிழ்த்தேன் என்று செயல்படாமல் நிதானமாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இனி எதிர்க்கட்சிகள் வலிமையைப் பெற அவர் காரணமாக இருக்க மாட்டார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் அனைத்தையும் வழக்கம்போல் பொய்ப்பித்திருக் கிறார் ஜெயலலிதா.
புதிய சட்டமன்றத்தைப் பயன்படுத்த மறுத்தது, பழைய செம்மொழி தமிழ் ஆய்வகத்தைக் கிடப்பில் போட்டது, செம்மொழிப் பூங்காவை மூடி அதை தனியாருக்கு தாரைவார்த்தது, முத்தமிழ்ப் பேரவைக்கு ஒதுக்கிய நிலத்தை அரசு கையகப்படுத்த முயன்றது, 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது, அண்ணா நூலத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றுவதாக அறிவிப்பு என முதல்வரின் அறிவிப்புகள் அவரை சிறந்த நிர்வாகி என்ற தரத்திலிருந்து இறக்கி ‘அரசியல் பழிவாங்கி’ என்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

இப்போது பால் மற்றும் பேருந்து கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார் ஜெயலலிதா. கட்டண உயர்வை அறிவித்த அடுத்த நாள் தமிழகத்தினுடைய அனைத்து வீடுகளிலும் வீதிகளிலும் பொதுமக்கள் இந்த ஆட்சி மீதான கோபத்தை வெளிப்படுத்தும் பேச்சுகளைக் கேட்க முடிந்தது. பேருந்துகளில் கடந்த வாரம் முழுக்க அனைத்துப் பயணிகளின் கருத்துகளும் ஒரே மாதிரியாகவே இருந்தன.
ஒருவேளை உள்ளாட்சிமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்திருந்தால் அதிமுக படுதோல்வி யைத்தான் சந்தித்திருக்கக்கூடும். அந்த அளவிற்கு மக்களின் கோபம் அதிகரித்திருக்கிறது.
பேருந்து கட்டணம் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 17.75 ரூபாயாக இருந்த ஆவின் பால் விலை 24 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வினால் ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு 500 முதல் 700 ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சாரக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன.

இந்த விலை உயர்வை நியாயப்படுத்துவதற்காக, மத்திய அரசு தாங்கள் கேட்ட நிதியைத் தரவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

பாரதிய ஜனதா கட்சியோடு ஏறத்தாழ கூட்டணியை முடிவு செய்துவிட்ட நிலையில் உள்ள ஜெயலலிதா, தொடர்ந்து மத்திய அரசைக் கடுமையாக எதிர்க்கின்ற காரணத்தினால் ஏற்பட்ட அரசியல் மோதலால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவது பரிதாபகரமானது.

மேலும் கடந்த திமுக ஆட்சியின் மோசமான நிர்வாகச் சீரழிவுகளால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யவே இந்த விலை ஏற்றத்தை அதிகரித்ததாகவும் சப்பைக்கட்டு கட்டியுள்ளார். அது உண்மைதான் என்றபோதினும் இந்த சீரழிவுகள் 2006லிருந்து மட்டுமல்ல, 2001லிருந்தே தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இரண்டு திராவிடக் கட்சிகளுமே காரணமாக உள்ளன.

ஜெயலலிதா அரசு அறிவித்துள்ள இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகத்தான் இந்த விலை உயர்வு எனவும் கூறப்படுகிறது.
எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம், விலைவாசியையும் விலை உயர்வையும் கட்டுப்படுத்துங்கள் என்ற முழக்கம் மக்களிடம் உருவாகியிருக்கிறது. இலவசங்களில் மயங்கிய தமிழக மக்கள் இப்போதாவது எதார்த்தத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கிறது.

பால் விலை மற்றும் பேருந்து கட்டண விலை உயர்வை திரும்பப்பெற முடியாது என ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அடிமேல் அடியாக, சத்தமில்லாமல், சாதாரண கட்டணத்தில் இயங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்து கள் இப்போது சொகுசு பேருந்து கட்டணத்திற்கு மாற்றப்பட்டுள் ளது. இது ஒரே வாரத்தில் மறைமுகமாக ஏற்றப்பட்டிருக்கும் இன்னொரு சுமையாகும்.

தமிழக முதல்வர், நிர்வாகத்தை சீர்செய்தாலே அரசுக்கான வருவாயைப் பெருக்க முடியும். கூடுதலாக பால் பண்ணை களைத் திறப்பதன் மூலமும், கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதன் மூலமும் பால் விலையைக் கட்டுப்படுத்த முடியும். அரசுப் பேருந்துகளை முறையாகப் பராமரிப்பதன் மூலமும் வீண் செலவுகளைக் குறைக்க முடியும். இலாபம் தரும் வழித்தடங்களை வேண்டுமென்றே தனியாருக்கு விற்பதை நிறுத்தி, அந்த வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை இயக்கினால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தமிழக அரசு முற்றிலும் இந்த விலை உயர்வை வாபஸ்பெற முடியாவிட்டாலும், 50 சதவீதம் அளவிற்காவது குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும்.
 
எங்கள் இறைவா அனைத்துப் புகழும் உனக்கு மட்டுமே.
உண்ணையே வனங்குகின்றோம்
உண்னிடமே பாதுகாவல் தேடுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக