அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
29 நவம்பர், 2011
குவைத்தில், எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்.
பிரதமர் Sheikh Nasser al-Mohammad al-Sabah மீது ஊழல் புகார் தெரிவித்த
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை நடத்த
விடாமல் முடக்கினர். மேலும் குவைத் முழுவதும் போராட்டங்களும்
நடைபெற்றதால், பதவி விலகும் முடிவை எடுத்ததாக பிரதமர்
தெரிவித்துள்ளார். குவைத் மக்கள்
போராட்டத்தில் ஈடுபடுவது, நாட்டின்
நிலைத் தன்மையை பாதிக்கும் என
கூறியுள்ள பிரதமர் Sheikh Nasser,
எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களின் சதி காரணமாகவே,
பதவி
விலக நேரிட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே, பிரதமர் மற்றும்
அமைச்சரவை ராஜினாமாவை, குவைத் அரசர் ஏற்றுக்
கொண்டிருக்கிறார். இதையடுத்து, புதிய அரசை அமைக்க 3 மாதங்கள்
ஆகும் என, குவைத் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக