
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
22 நவம்பர், 2011
ஆயங்குடியில் தமுமுக&மமகவின் மாவட்ட பொதுகுழு
தமுமுக&மமகவின் கடலூர் மாவட்ட பொதுகுழு ஆயங்குடியில் மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ் பொதுக்குழுவை மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் தலைமைத்தாங்க பொதுகுழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக மமகவின் மாநில பொருளாளர் ஹாருன் ரஷித் வருகை புரிந்தார்.நடைப்பெற்ற ஊராட்சிமன்ற தேர்தல் கலந்தாய்வு நடைப்பெற்றது.பிறகு முஸ்லிம் சமுதாயத்திற்கு கருப்பு தினமான வருகின்ற டிசம்பர் 6 ரில் பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றமே விரைந்துதீர்ப்பை வழங்க கோரி மாவட்ட தழுவிய போராட்டம் நடத்தவேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுகுழுவில் மா.வ .செயலாளர் அமானுல்லாஹ்,பொருளாளர் அய்யூப்,யாசிர் அரபாத் ,சமது ,மற்றும் மாவட்ட அனைத்து கிளைகழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

19 நவம்பர், 2011
இஸ்லாத்தை அவமதிக்கும் பேஸ்புக் படம்.
தற்போது பேஸ்புக்கில் I love Islam என்ற பெயரில் இயங்குகின்ற பேஸ்புக் பேஜ் ஒன்று தற்போது முஸ்லிம்களை அவமானப்படுத்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது.
போலியான பெயரில் I love Islam என்ற பெயரை வைத்துக்கொண்டு ஒரு நாசகாரக் கிருமி முஸ்லிம்களிடையே பிரச்சினை உருவாக்கி கலகத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக முஸ்லிம்களின் புனித தலமான கஃபத்துல்லாஃஹ் மீது ஒரு அந்நியப் பெண்ணை அதில் இருப்பது புகைப்படத்தை எடிட்டிங் செய்திருக்கிறான்.
அதிலுள்ள அந்த அந்நியப் பெண் அறைகுறை ஆடையுடன் கையில் மைக்கை வைத்துக்கொண்டு பாடுவது போன்று இருக்கின்றது. ஒரு photoshop மென்பொருளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களிடையே கலவரத்தை உருவாக்குவதற்கு எத்தனிக்கும் இந்த நாசகரனுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
I love Islam என்று இஸ்லாத்துக்கு சாதகமான பெயரை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்படுகிறான். எனவே, இதிலுள்ள பேஸ்புக் பயனர்கள் அனைவரும் இந்த பேஸ்புக் பேஜிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது ஏராளமான கருத்துரைகள் (Comments) வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்.
source-yarlmuslim
'வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!'

சென்னை: திடீரென பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டதால், கையில் பணமின்றி மனைவி குழந்தைகளுடன் நடந்தே வீட்டுக்குப் போனார் ஒரு தொழிலாளி.
அந்தத் தொழிலாளியின் பெயர் செந்தில். திருவண்ணாமலை காரப்பட்டு கிராமத்திலிருந்து சென்னை வந்து கட்டட வேலை செய்பவர். மனைவி மற்றும் இரு குழந்தைகள் இவருக்கு உள்ளனர்.
அந்தத் தொழிலாளியின் பெயர் செந்தில். திருவண்ணாமலை காரப்பட்டு கிராமத்திலிருந்து சென்னை வந்து கட்டட வேலை செய்பவர். மனைவி மற்றும் இரு குழந்தைகள் இவருக்கு உள்ளனர்.
18 நவம்பர், 2011
தடையை மீறி ரத யாத்திரை நடத்துவோம் - முஸ்லிம் அமைப்பு!
"காவல்துறை தடையை மீறி பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை நடைபெறும்" என இந்திய தவ்ஹீத் ஜமாத் எனும் முஸ்லிம் அமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
ரத யாத்திரை புகழ் பாஜக அத்வானிக்குப் பிறகு முதன் முதலாக தமிழகத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் எனும் முஸ்லிம் அமைப்பு, "பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை" எனும் பெயரில் ரத யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கிடையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ரத யாத்திரைக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
17 நவம்பர், 2011
பேரூந்து மற்றும் பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழக அரசு பேரூந்து கட்டணத்தை 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலும், ஆவின் பாலை 6.25 ரூபாய் வரையிலும் விலையை உயர்த்தியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கக் கூடியதாகும்.
ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்த விலை உயர்வு மேலும் சுமையாக அமைந்துள்ளது.
எனவே தமிழக முதல்வர் அவர்கள், ஏழை எளிய, நடுத்தர மக்களின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்த விலை உயர்வு மேலும் சுமையாக அமைந்துள்ளது.
எனவே தமிழக முதல்வர் அவர்கள், ஏழை எளிய, நடுத்தர மக்களின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
16 நவம்பர், 2011
ரயில்வேயில் பயிற்சியுடன் வேலை, +2 படித்த தகுதி உள்ளவர்களுக்கு!
இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டீஸ் – Special Class Apprentice, 2012 தேர்வுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அப்துல் கலாமும் அவமரியாதையும்
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை அமெரிக்க விமான நிலையத்திலும் பின்னர் விமானத்தில் ஏறிய நிலையிலும் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு படைபிரிவினர் சோதனை செய்ததை இந்திய அரசு தேசிய அவமானம் என வன்மையாக கண்டித்தது. அமெரிக்கா இது தொடர்பில் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளது. (செய்தி)
இதை விடப் பெரிய அவமானத்தையைா அமெரிக்கா அப்துல் கலாமிற்கு இழைத்து விட்டது?
நன்றி.கைபர் தளம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














