அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
31 மே, 2011
கடல்அட்டை தடையை நீக்க நடவடிக்கை : ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவை
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவையையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அவசர உதவிக்காக இலவச ஆட்டோ சேவை துவங்கப்பட்டது. வயதானவர்கள், பிரசவத்திற்கும் செல்பவர்கள் மற்றும் அவசர உதவிக்காக இரண்டு ஆட்டோக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமையில் இலவச ஆட்டோ சேவையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நன்றி. தினமலர்
நன்றி. தினமலர்
நடுரோட்டில் பஸ் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, தனியார் பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து, நேற்று மதியம், காட்டுமன்னார்கோவிலுக்கு, தனியார் பஸ், 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. குமராட்சி அருகே செல்லும்போது, பஸ்சின் முன் சக்கரத்தில் இருந்து, சத்தம் வந்ததால், டிரைவர் பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், பேரிங் உடைந்தது தெரிந்தது. காட்டுமன்னார்கோவில் வரை சென்று விடலாம் என, டிரைவர் மீண்டும் பஸ்சை இயக்கினார். லால்பேட்டை நெருங்கிய போது,
மண்ணறை வேதனை''
இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது...... இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.
இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்: பேரா.ஜவாஹிருல்லாஹ் M L A
பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார். காயல்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்துள்ளதால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த 24ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் இஸ்லாமிய திருமண கட்டாய பதிவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
முஸ்லிம் பெண்ணின் உடலுக்கு இந்து முறைப்படி ஈமக்கிரியை!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீவிபத்தில் ஆயிசா (30) என்ற முஸ்லிம் பெண்ணின் உடலும், சுந்தரி சைன் (30) என்ற சமவயதுள்ள இன்னொரு பெண்ணின் உடலும் ஒரே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.
சவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.
சவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.
30 மே, 2011
ஏழை நோயாளிக்கு தமுமுக ரூ. 1 லட்சம் நிதியுதவி
சிறுதொழில் தொடங்குதல் மற்றும் மருத்துவ உதவிக்காக ஏழை முஸ்லிம்களுக்கு, தமுமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த கமருதீன் என்பவருக்கு, விபத்தில் கால் முறிந்த நிலையில், அவரது சிகிச்சைக்காக ரூ. 20 ஆயிரம், ராமநாதபுரம் நகர் சின்னக்கடையைச் சேர்ந்த முகம்மதுகனிக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக ரூ. 25 ஆயிரம், மண்டபம்,தேவிபட்டினம்,வெளிப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு சிறுதொழில் தொடங்க மற்றும் கல்வி உதவித் தொகையாக மொத்தம் ரூ. 55 ஆயிரம் உள்பட ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
விநாடிகள் 6 : பலி 1 - இன்று புகையிலை எதிர்ப்பு தினம்
புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால், மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது. ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











