#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 செப்டம்பர், 2010

அறுபது ஆண்டுகாலமாக கோமாவில் கிடந்த நீதி இன்று ஒரேயடியாய் செத்து விட்டது...




இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


நல்லடக்கமா அல்லது தகனமா... அது... (அதாங்க... மேல்முறையீடு செய்தபின்னர் வரணுமே ...சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு... அதுதான்...) அது எப்போது என்று தெரியவில்லை.

அநேகமாய், இன்று முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மீதம் உள்ள மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் அன்று முழுசாய் பிடுங்கிக்கொண்டு அம்போவென( முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள், சுப்ரீம் கோர்ட்டில்..


என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் மயான நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.

இனி மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.

காங்கிரசும்,பிஜேபியும் ஒரே கொள்கையில் உள்ள இந்து மதவாத கட்சிதான்.இவர்களின் ஆட்சியில் முஸ்லிம் சமுகத்துக்கு நீதி கிடைக்கும் என்று கனவிலும் கூட நினைத்து பார்ப்பது தவறு என்று நம் சமுகம் தெரிந்து கொள்ளட்டும் .

மேலும் நம் சமுகத்திற்கு அகில இந்திய அளவில் குரல் கொடுப்பதற்கு ஒரு வலுவான அரசியல் கட்சி இல்லாததும் ஒரு காரணம்? இதன் மூலம் இனியாவது நம் சமுகம் விழித்து கொள்ளட்டும். இஸ்லாமிய அமைப்பு தலைவர்களே வேற்றுமையில் ஒற்றுமை காணுங்கள் ஒன்று இணைந்து நம் சமுகத்தை அழிவில் இருந்து காப்பாத்த ஒன்று இணையுங்கள். தலைவர்களே சிந்தியுங்கள். சிந்தித்து செயல்பட நம் அனைவரையும் ஒன்று இணைவதற்கு வல்ல இறைவன் அருள் புரிவானாக"ஆமின் .


அரசன் அன்றே கொள்ளுவான் ' தெய்வம் நின்று கொள்ளும் "

வாழ்க ... இந்துயா...

நன்றி ... அநீதி மன்றம்...

29 செப்டம்பர், 2010

பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ள நீதிபதிகள்



பாபரி மஸ்ஜித் வழக்கில் நாளை (செப்டம்பர்30) மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு அறிவித்துள்ளது.


60 ஆண்டுக் காலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் நீதிபதி சிபகத்துல்லா கான் தலைமையில் நீதிபதிகள் சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு வழங்கவுள்ளது.


தீர்ப்பு வழங்கவுள்ள நீதிபதிகள் பற்றிய விபரம்:


நீதிபதி சிப்கத்துல்லா கான்

நீதிபதி சிபகத்துல்லாஹ் கான்: 1952ல் பிறந்த நீதிபதி கான் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் இளம் அறிவியல்; பட்டப்படிப்பு முடித்து விட்டு அதே பல்கலைகழகத்தில் 1975ல் எல்.எல்.பி. சட்டப்படிப்பு பட்டம் பெற்றார். அலஹாபாத் பார் கவுன்சிலில் 1975ல் வழக்குறைஞராக பதிவுச் செய்துக் கொண்டார். சிவில், வருவாய் மற்றும் பணியாளர் நலன் துறை தொடர்பான வழக்குகளில் இவர் ஆஜரானார். அலிகர் சிவில் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளும் பிறகு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளும் வழக்குறைஞராக பணியாற்றினார். 2001 டிசம்பரில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி சுதீர் குமார் அகர்வால்

நீதிபதி சுதீர் குமார் அகர்வால்: 1958ல் பிறந்த நீதிபதி அகர்வால் ஆக்ரா பல்கலைகழகத்தில் அறிவியல் பட்டம் பயின்று பிறகு மீரட் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று 1980ல் பட்டம் பெற்றார். 1980 முதல் வழக்குறைஞராக பணியாற்றி வருகிறார். முதலில் வரிகள் தொடர்பான பிரிவில் வழக்குறைஞராக பணியாற்றிய இவர் பிறகு பணியாளர்கள் நலன் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி அதில் நிபுணத்துவம் பெற்றார். 2003ல் உ.பி. அரசின் கூடுதல் தலைமை வழக்குறைஞராக நியமிக்கப்பட்டார். அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2005லிலும் நிரந்தர நீதிபதியாக 2007லிலும் உயர்வு பெற்றார்.

நீதபதி தர்ம வீர சர்மா

நீதிபதி தர்ம வீர் சர்மா: 1948ல் பிறந்த நீதபதி சர்மா 1967ல் இளங்கலைப் பட்டமும் 1970ல் எல்எல்பி பட்டமும் பெற்றார். உ.பி. மாநில நிதி நிறுவனத்தில் சட்ட அதிகாரியாக 1989 முதல் 1991 வரையிலும் அதன் பின் அரசு சட்டத்துறையில் முதலில் இணைச் செயலாளராகவும் பிறகு முதன்மை செயலாளராகவும் 2005 வரை பணியாற்றினார். 2002ல் மாவட்ட செசன்சு நீதிபதியாகவும் 2005ல் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் 2007ல் நிரந்தர நீதிபதியாகவும் உயர்வுப் பெற்றார்.

பாபரி பள்ளி இடம் நம் சாமுதாயத்துக்கு கிடைத்திட வல்ல இறைவனிடம் பிராத்தனை செயிவமாக ''

நன்றி; தமுமுக .காம்

28 செப்டம்பர், 2010

பாபரி வழக்கில் 30ம் தேதி மாலை 3.30க்கு தீர்ப்பு


பாபரி மஸ்ஜித் வழக்கில் வரும் செப்டம்பர் 30ம் தேதி மாலை 3.30 மணிக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்கும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாபரி மஸ்ஜித் வழக்கில் கடந்த செப்டம்பர் 24 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு முதலில் அறிவித்திருந்தது. தீர்ப்ப வழங்குவதை ஒத்தி வைத்து சமாதானத்திற்கான வழியை காண வேண்டுமென ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் தொடுக்க வழக்கையும் அது நிராகரித்தது. ஆனால் திரபாதி உச்சநீதிமனற்த்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையில் நீதிபதிகள் கே.எஸ். ராதகிருஷ்ணன் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இருத்தரப்பினர் இடையே சமரசமாக பேசி இப்பிரச்னையை முடிவுக் கொண்டு வரவேண்டும் என்று மனு செய்துள்ள திரிபாதி என்பவரின் சார்பாக வழக்குறைஞர் முக்குல் ரஸ்தோகி தனது வாதத்தை எடுத்து வைத்தார். இதற்கு பிறகு சுன்னத்தி வக்ப் வாரியம் சார்பாக மூத்த வழக்குறைஞர் ஏ. சௌத்திரி மற்றும் ஹிந்து தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களை நீதிபதிகள் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் இந்த பிரச்னைக்கு நீதிமன்றத் தீர்ப்பு தான் வழி என்றும் தீர்ப்பை ஒத்தி வைக்க கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தீர்ப்பை ஒத்திவைத்தால் நாட்டில் நீதிமன்றங்கள் ஒரு பிணை கோரும் வழக்கிலும் தீர்ர்பு வழங்க இயாலது போய்விடும் என்று கூறினார்கள். பிறகு மத்திய அரசு சார்பாக தலைமை வழக்குறைஞர் குலாம் வாஹனவதி இருத்தரப்பும் சமசத்திற்கு தயார் என்றால் மத்திய அரசு அதற்கு உதவிடும் என்றும் இதற்கு இருத்தரப்பினரும் உடன்படிவில்லையெனில் தீர்ப்பு வழங்குவது தான் சரி என்றும் தனது வாதத்தை எடுத்துரைத்தார். இதன் பிறகு நீதிபதிகள்் உணவு இடைவேளைக்கு பிறகு பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்க விதித்திருந்த தடையை நீக்குவதாக ஒரு வரியில் தீர்ப்பு வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து பாபரி வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்க இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வரும் வியாழன் மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று இப்போது தெரிய வருகின்றது. இந்த தீர்ப்பின் நகல் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளத்திலும் அன்று வெளியிடப்படும் என்று தெரிகின்றது. அன்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வளாகத்தில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பாரகள்.

நன்றி;தமுமுக .காம்

புஹாரி 6088 - தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்

மாமனிதர்


நூல்கள்: புஹாரி 6088, முஸ்லிம் 2296.

அனஸ் (ரலி) கூறுகிறார்கள்:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கரைப்பகுதி கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள். அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார். இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள். அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது. பிறகு கிராமவாசி, 'முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!' என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.

விளக்கம்:

மதத் தலைவராகவும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளரான அனஸ் எனும் சிறுவருடன் தனியாக வீதியில் நடந்து சென்றதாக இந்த வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது.

சாதாரண மனிதர்கள் சர்வ சாதாரணமாக நடந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு மதத்தின் மாபெரும் தலைவராக இருப்பவர் முன்னறிவிப்பின்றி - பக்தகோடிகள் புடை சூழாமல் - பந்தாக்கள் செய்யாமல் - சர்வசாதாரணமாக நடந்து செல்வதை உலக வரலாற்றில் நீங்கள் கண்டதுண்டா? அவரையும் அவரது மார்க்கத்தையும் அழித்தொழிக்க எதிரிகள் சமயம் பார்த்துக் கொண்டிருந்த அச்சம் சூழ்ந்த நேரத்தில் இப்படி நடந்து செல்வதைக் கற்பனையாவது செய்ய முடியுமா?

சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் நடத்தும் பந்தாக்களைப் பார்த்துவரும் மக்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்து சென்றபோது அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபர் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.

இப்படி இருவிதமான தலைமையையும் பெற்றிருந்த நேரத்தில் சிறுவயது பணியாளர் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாக நடந்து சென்ற வரலாற்றை அறியும் போது அந்த மாமனிதரின் அடக்கம் துணிச்சல் நம் கண்களைக் கலங்கச் செய்து விடுகின்றன.

இந்த மாமனிதர் அணிந்திருந்த ஆடை என்ன? அரசுக் கருவூலத்தில் ஆபரணங்களும் ஆடைகளும் குவிந்து கிடக்கும் போது - மக்களெல்லாம் அவர்களிடம் வந்து அதைப் பெற்றுச் செல்லுமளவுக்கு அரசுக் கருவூலம் நிரம்பியிருந்த போது - ஒரு மேல் துண்டை மட்டுமே போர்த்திக் கொண்டு வீதியில் நடந்து செல்கிறார்கள். அலங்காரம் இல்லை! உயர்ரக ஆடைகள் அணியவில்லை! தைக்கப்பட்ட சட்டை போன்ற ஆடைகூட அணியவில்லை! அணிந்திருந்த மேல் துண்டு கூட மேனியை உறுத்தாத வகையில் உயர்தரமாக, மென்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை! முரட்டுத்துணியை - மேனியை உறுத்தக் கூடிய துணியைச் சுற்றிக் கொண்டு வாழ்ந்த அதிசய வாழ்க்கை அந்த மாமனிதருடையது. நம்மைப் போல சாதாரணமானவர்கள் கூட அணிந்து வெளியே செல்ல வெட்கப்படும் ஆடையை அணிந்து வெளியே செல்வதற்கு அசாத்தியமான மனவுறுதி வேண்டும். நேர்மையாக வாழ்வதில் எவரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாத - மற்றவர்களிடம் தமது இமேஜ் - மதிப்பு - பாதிக்குமே என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் வாழ்ந்த அந்த மாமனிதரிடம் இந்த உலகம் படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன.

முன்பின் தெரியாதவர் - நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர் - ஆட்சித் தலைவரை நேரடியாக நெருங்க முடிகின்றது, சட்டையைப் பிடித்து, கீழே விழும் அளவுக்குப் படுவேகமாக இழுக்க முடிகின்றது. அந்த நிலையிலும் அவர்களால் சிரிக்க முடிகின்றது! என்னே அற்புத வாழ்க்கை!

எம்.ஜீ.ஆர் அணிந்திருந்த தொப்பியைத் தவறுதலாகத் தட்டிவிட்ட தொண்டரை எம்.ஜீ.ஆர் மக்கள் மத்தியில் அறைந்ததையும், அதற்காக போலீஸ் தொண்டரை சித்திரவதை செய்ததையும் இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள். ஒரு மாநில முதல்வரின் நிலை இதுதான். மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தின் சட்டையைப் பிடித்து முன்பின் அறிமுகமில்லாதவர் இழுத்ததும் அந்த நேரத்தில் கடுகளவு அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்ததும் அவர் மாமனிதர் என்பதற்கு மகத்தான சான்று.

அந்தக் கிராமவாசி, சட்டையைப் பிடித்து இழுத்து ஏதேனும் நியாயம் கேட்க வந்தாரா? நபிகள் நாயகம் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக இப்படி இழுத்தாரா? இல்லை. நபிகள் நாயகத்திடம் உதவி கேட்டுத்தான் இழுத்திருக்கிறார்.

உதவி கேட்டு வருபவரிடம் அடக்கம் இருக்க வேண்டும், பணிந்து, குழைந்து கோரிக்கையை முன் வைக்க வேண்டும். பொதுப்பணத்தைக் கேட்பதென்றாலும் கொடுப்பவரைப் புகழ்ந்து தள்ள வேண்டும், இல்லை என்றால் பெற முடியாது என்பது பொதுவான உலகியல் நடப்பு.

இந்தக் கிராமவாசியின் அணுகுமுறையைப் பாருங்கள்! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடம் அவர் இப்படி நடந்து கொண்டால் கூட ஒங்கி அறைந்து விடுவோம்.

சட்டையைப் பிடித்துத் தோள்பட்டை கன்றிப் போகும் அளவுக்கு இழுத்ததும் முஹம்மதே! என்று பெயர் சொல்லி அழைத்ததும் அல்லாஹ் உம்மிடம் தந்தவற்றிலிருந்து எனக்குத் தருவீராக! என்று அதிகாரத் தோரணையில் கேட்டதும் அதன் பிறகும் நபி (ஸல்) அவர்கள் சிரித்தது மட்டுமின்றி அவருக்குக் கொடுத்து அனுப்பியதும்; உலக வரலாற்றில் வேறு எவரிடமும் காண முடியாத அற்புத நிகழ்ச்சியாகும்.

கிராமவாசியின் துணிச்சல் என்று இதைக் கருதக் கூடாது. இவரிடம் சகஜமாக நடந்து கொண்டாலும் நம் இயல்புக்கு ஏற்ப நடந்து கொண்டாலும் இந்த மாமனிதர் ஆத்திரப்பட மாட்டார் என்பது கிராமவாசிக்குத் தெரியும். மக்களுக்கே தெரியும் அளவுக்கு அவர்களின் எளிமை பிரசித்தமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே அவரால் இப்படி நடந்து கொள்ள முடிந்திருக்கிறது.

இந்த மாமனிதரைத் தலைவராகக் கொண்ட சமுதாயம் தரங்கெட்ட அரசியல்வாதிகளைத் தலைவர்களாக ஏற்று அவர்களின் பின்னே சென்று கொண்டிருக்கும் அவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.


நன்றி;இஸ்லாமியதாவா .காம்

26 செப்டம்பர், 2010

அல்லாஹ்வின் அழகிய பண்புகளை விவரிக்கும் அல்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள்

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா

அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்

هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأَخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلۡبَاطِنُ‌ۖ وَهُوَ بِكُلِّ شَىۡءٍ عَلِيمٌ

அவனே முதலாமவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (ஸூரா அல்ஹதீது 57:3)

يَعۡلَمُ مَا يَلِجُ فِى ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡہَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيہَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ

பூமிக்குள் பதிகின்ற (வித்து முதலிய)வைகளையும், அதிலிருந்து வெளிப்படும் (மரம், செடி முதலிய) இவைகளையும் வானத்திலிருந்து இறங்குபவைகளையும் அதன் பக்கம் ஏறுகின்றவைகளையும் அவன் நன்கறிவான். (ஸூரா ஸபா 34:2)

وَعِندَهُ ۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَ‌ۚ وَيَعۡلَمُ مَا فِى ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ‌ۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٍ۬ فِى ظُلُمَـٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٍ۬ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَـٰبٍ۬ مُّبِينٍ۬

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (ஸூரா அல்அன்ஆம் 6:59)

وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۚۦ

...அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை... (ஸூரா ஃபாதிர் 35:11)

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ سَبۡعَ سَمَـٰوَٲتٍ۬ وَمِنَ ٱلۡأَرۡضِ مِثۡلَهُنَّ يَتَنَزَّلُ ٱلۡأَمۡرُ بَيۡنَہُنَّ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىۡءٍ۬ قَدِيرٌ۬ وَأَنَّ ٱللَّهَ قَدۡ أَحَاطَ بِكُلِّ شَىۡءٍ عِلۡمَۢا

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (ஸூரா அத்தலாக் 65:12)

وَرَبُّكَ يَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ

மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். (ஸூரா அல்கஸஸ் 28:69)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யா அல்லாஹ்! ஏழு வானங்கள், பூமியின் ரப்பே! மகத்தான அர்ஷின் ரப்பே! எங்களது ரப்பே! ஒவ்வொரு வஸ்துவின் ரப்பே! வித்துக்களையும், தானியங்களையும் உடைப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆனை இறக்கியவனே! உன்னிடம், எனது நஃப்ஸின் தீங்கிலிருந்தும், நீ உச்சி முடியை பிடித்துள்ள ஒவ்வொரு ஊர்ந்து செல்லும் பிராணியின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். நீயே முதலாமவன். உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே முடிவானவன். உனக்கு பின்பு எதுவுமில்லை. நீ வெளிப்படையானவன். உனக்கு மேல் எதுவுமில்லை. நீயே மறைந்தவன். உன்னை விட்டும் (மறைந்தது) எதுவுமில்லை. என் சார்பாக கடன் அனைத்தையும் நிறைவேற்றிவிடு. ஏழ்மையிலிருந்து (இரட்சித்து) என்னை பிறரின் தேவையற்றவனாக ஆக்கிவிடு! (ஸஹீஹ் முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட சான்றுகள் மூலம் தெரிந்துகொள்வதாவது:
1) அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
2) இப்பிரபஞ்சத்திலுள்ள எந்த ஒன்றும் அவனது அறிவிலிருந்து தப்ப முடியாது.
3) வானங்களில் உள்ளதையும் வானங்களுக்குக் கீழ் உள்ளதையும், பூமிக்கு மேல் உள்ளதையும் பூமிக்கு கீழ் உள்ளதையும், வானம் பூமிக்கு இடையில் உள்ளதையும் அவன் பூரணமாக அறிந்தே இருக்கின்றான்.

العقيدة الواسطية
شيخ الإسلام ابن تيمية
தருள் ஹுதா

நன்றி;மைதீன்



அயோத்தி முஸ்லிம்களின் பிரார்த்தனை...

அயோத்தி,செப்.26:அயோத்தியில் ஜன்மஸ்தான் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பு எப்போது வரும், எப்படி இருக்கும் என்ற கவலையைவிட ஹிந்துக்களுடனான தங்களுடைய உறவு இப்போதிருப்பதைப் போலவே சுமுகமாக இருக்க வேண்டும், எங்கும் அமைதி நிலவ வேண்டும், மதக் கலவரங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே அயோத்தி வாழ் முஸ்லிம்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.ராம ஜென்ம பூமி பற்றித்தான் வழக்கு என்றாலும் அங்குள்ள ராமர் சிலைக்கு அன்றாடம் வழிபாடுகளும் உரிய காலங்களில் உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு அழகழகான மாலைகளைக் கட்டித்தரும் பணியை அயோத்தி மாநகர முஸ்லிம்கள்தான் காலம்காலமாகச் செய்து வருகின்றனர். அத்துடன் முகலாயர் கால கட்டடக் கலையையும் கைவேலைகளையும் கற்றுத் தேர்ந்த முஸ்லிம் கைவினைக் கலைஞர்கள்தான் வட இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு தங்களுடைய கைத்திறமையால் பல்வேறு வாகனங்களையும் படங்களையும் இதர பொருள்களையும் உருவாக்கித் தருகின்றனர். ஐந்து வேளைத் தொழுகை, அல்லாவிடத்தினில் அகலாத பக்தி ஆகியவற்றுடன் தங்களுடைய ஹிந்துச் சகோதரர்கள் வழிபடும் ஸ்ரீ ராமரிடத்திலும் அன்பு என்று அயோத்தி மாநகர முஸ்லிம்கள் உறவாடி வருகின்றனர்.முஸ்லிம்களின் பண்டிகைகளிலும் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளிலும் ஹிந்துக்களும் கலந்து கொண்டு வாழ்த்துவதுடன் விருந்துண்டு மகிழ்கின்றனர். ஒரே ஊரில் பிறந்து, ஒன்றாகப் படித்து, ஒன்றாக வளர்ந்து தொழில், வியாபாரம் செய்யும் இரு தரப்பினரிடையேயும் அன்பும் தோழமையும்தான் நிலவுகின்றன. மும்பை, தில்லி, மீரட், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மதக் கலவரங்கள் மூளுகின்ற சமயங்களில்கூட அயோத்தி அமைதிப் பூங்காவாகவே காட்சி தருகிறது.ஹிந்துக் கோயில்களின் திருவிழாக் காலம் முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வழக்கமான ஊதியத்தைப் போல இரண்டு மடங்கு அவர்களுக்குக் கிடைக்கிறது. முஸ்லிம்கள் தயாரிக்கும் வளையல்கள், சம்கி வேலைப்பாடு மிகுந்த துணிகள், காலணிகள் என்று அனைத்தையும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர் ஹிந்துக்கள். எனவே இந்த உறவு அறுபடாமல், ஊறு நேராமல், நீதிமன்றத் தீர்ப்பு சுமுகமாக இருக்க வேண்டும் என்றே அயோத்தி மாநகர முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.அவர்கள் மட்டுமா, நாடு முழுவதுமே உள்ள அனைத்து இந்தியர்களின் மதம் கடந்த பிரார்த்தனை இதுவே. இந்த நாட்டில் மதங்களின் பெயரால் கலவரம் நடந்து ரத்த ஆறு ஓடியது போதும், இனியாவது மதமும் வழிபடும் விதமும் வேறானாலும் நாம் அனைவரும் ஒரே உதிரத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் என்ற உணர்வு வலுப்பெறட்டும், நிலைபெறட்டும்.

நன்றி;தினமணி

25 செப்டம்பர், 2010

பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அல்லாஹ்வைத் தொழுவதினால் இம்மை, மறுமை இருவாழ்விலும் குவியும் ஏராளமான நன்மைளை கணக்கிட்டால் நம்மால் பட்டியலிட முடியாத அளவுக்கு அவைகள் நீண்டு கொண்டே செல்லும்.

இன்று நம்மில் பலர் தொழுகை விஷயத்தில் அலச்சியப்போக்கை கையாளுவதற்கு எது காரணமென்றுத் தெரியவில்லை ? ஒன்று அதனுடைய நன்மைகளைத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்துகொண்டு அதில் நம்பிக்கை இழந்து இருக்கவேண்டும், இல்லை என்றால் பட்டியலிட முடியாத அளவுக்கு நன்மைகளை குவிக்கக்கூடிய தொழுகை விஷயத்தில் அலச்சியமாக இருக்க முடியாது.

நம்மால் இயன்றவரை ஒரு நிணைவூட்டும் விதமாக தொழுவதினால் ஏற்படும் இம்மை,மறுமைப் பலன்களை எழுதுவோம்.

தொழுகையினுடைய அமல் என்பது பாங்கு ஒலிக்கத் தொடங்கியது முதல் தொடங்கி விடுகிறது.

பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்.

தொழுகையாளிகளாகிய நாம் தொழுகைக்கான அழைப்பைக் கேட்கும்பொழுது அதற்காக பதில் கூறுகிறோம் அதற்கு நன்மை எழுதப்படுகிறது அத்துடன் அது நின்றுவிடாமல் இன்னும் தொடருகிறது.

பாங்கிற்கு பதில்கூறி முடித்தப்பின் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுகிறோம் அவ்வாறு ஓதப்படும்பொழுது ஒருமுறை ஓதினால் ஓதுபவர் மீது அல்லாஹ் பத்துமுறை அருள்புரிகிறான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

ஒருமுறை ஓதுவதற்காக அல்லாஹ்வின் அருள்மழை பத்து அமுறை நம்மீது பொழிகிறதென்றால் அது சாதாரண விஷயமா ? இதைக் குறைத்து மதிப்பிட முடியுமா ? அல்லது இதற்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்திக் கொண்டு இந்தளவுக்கு நன்மை தான் இது என்று வறையருத்துக் கூறமுடியுமா ? அல்லாஹ்வின் அருள்மழை நம்மீது பொழிகிறதென்றால் அதற்கு அளவேக் கிடையாது எல்லையைத் தாண்டிய நன்மை அல்லவா இது. சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

நாளை என்ன நடக்குமோ ? அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ ? என்ற பீதியிலும், அச்சத்திலும் இன்று உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் உறைந்துப் போய் இருப்பதற்கு காரணம் அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் இலகுவான வழிகளை அடைத்துக் கொண்டது ஒருக் காரணமாகும்.

பாங்கிற்கு பதில் கூறிவிட்டு ஸலவாத் ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அல்லாஹ்வின் அருள் நம்மீது இடைவிடாமல் இறங்கும் பொழுது அச்சமற்ற வாழ்வும், மனஅமைதியும் கிடைக்கும் இது உலக நன்மை. இது உலகில் வாழும்பொழுது ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவைப்படும் நன்மைகள்.

மறுமை நன்மை.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதி முடிந்ததும் அவர்களுக்காக சுவனத்தில் சங்கை மிகுந்த வசீலா எனும் உயர் பதவிக்காக பிரார்த்தனை செய்கிறோம், கண்மனி நாயகம்(ஸல்) அவர்கள் உலகில் வாழும்பொழுது அவர்களுக்காக என்று நம்மிடத்தில் எதையும் கேட்டதில்லை மாறாக நம்முடைய நேர்வழிக்காக அவர்களின் வசதியான வாழ்க்கையைத் துறந்து ஏழ்மையை தேர்வுசெய்து கொண்டார்கள் அப்படிப்பட்ட அருமை நாயகம்(ஸல்) அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது நம்மிடம் இந்த ஒன்றை மட்டுமேக் கேட்டார்கள் அதுவும் உலக வாழ்விற்காக அல்ல, மறுமையின் நிம்மதியான வாழ்வுக்காக பிரார்த்திக்கக் கூறினார்கள்.

அருமை நாயகம்(ஸல்) அவர்களுக்காக மறுமையில் வசீலா எனும் உயர் பதவிக்காக நாம் பிரார்த்திப்பதன் மூலமாக மறுமையில் நமக்கு மிகப்பெரியப் பரிசுக் காத்திருக்கிறது அந்தப் பரிசு மறுமையை உறுதியாக நம்பக் கூடியவர்களுக்கு மிகப்பெரியப் பாக்கியமிக்கதாக இருக்கும்.

அருமை நாயகம்(ஸல்) அவர்களின் வசீஸாவுக்காக அவர்களின் வேண்டுகோளை ஏற்று யார் உலகில் பாங்கின் அழைப்பொலிக்குப் பிறகு தொடர்ந்து பிரார்த்தித்து வந்தாரோ அவருக்காக எந்தப் பரிந்துறையும் பயன் தரமுடியாத இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ்விடம் அருமை நாயகம்(ஸல்) அவர்கள் பரிந்துறை செய்வதாக வாக்களித்துள்ளார்கள்.

இது எத்தனை நன்மைகள் என்று வரையறுத்துக் கூறமுடியாத எல்லையற்ற நன்மையாகும் காரணம் தகிக்கும் வெயிலில் ஒவ்வொருவரும் தன் வியர்வையிலேயே தான் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது வாய்கள் மூடப்பட்டு கால்களும், கைகளும் தனக்கெதிராக சாட்சியமாகிக்கொண்டிருக்கும் கடுமையான நேரத்தில் உதவிக்கான எந்த வழியுமில்லாத அந்த நேரத்தில் அருமை நாயகம்(ஸல்) அவர்கள் நமக்காக வல்ல இறைவனிடம் பரிந்துறை செய்வார்கள் என்றால் இது வiரையறுத்துக் கூறக்கூடிய நன்மையில் உள்ளதா ? இல்லவே இல்லை இது கணக்கிட முடியாத பொக்கிஷக் குவியல்களாகும்.

'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 628

பாங்கொலிக்கு பதில் கொடுப்பதில் மட்டும் இத்தனை நன்மைகள் குவிந்து கிடக்கிறதென்றால் அண்ணல் அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தொழுது முடித்து பள்ளியை விட்டு வெளியேறும் போது நம்முடைய நன்மையின் எடை என்னவாக இருக்கும் ? என்பதை சிந்தித்தால் எந்த ஒரு பாங்கிற்கும் பதிலளித்து, ஸலவாத் ஓதி, வசீலாவுக்காகப் பிரார்த்திப்பதை தவற விட மாட்டோம்.

மேற்காணும் நன்மையின் பொக்கிஷங்களை மொத்தமாக அடைந்து கொள்வதற்கு தொழுகையாளிகளால் மட்டுமே முடியும். காரணம் தொழுகையாளிகளைத் தவிற தொழாதவருக்கு பாங்கொலியே கடுமையானதாக இருக்கும் பாங்கு சொல்லும் வரை பள்ளிவாசலுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர் பாங்கொலியைக் கேட்டதும் தொழுகை முடியும் வரை பிற தொழுகையாளிகளின் கண்களில் படாதவாறு ஒளிவதற்கு இடத்தைத் தேடி ஓடிவிடுவார். வஸீலாவுக்கு பிரார்த்தித்தவர் கண்டிப்பாக தொழுகைக்கு வந்து விடுவார், வசீலாவுக்குப் பிரார்த்தித்து விட்டு தொழாமல் ஒளிய மாட்டார்.

இன்று தொழுகையாளிகளிலும் கூட சிலர் பாங்கு சொல்வதை ஒருப்பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சை நிருத்தாமல் தொடர்ந்து பேசிக் கோண்டே இருப்பதும், கடைகளில் நின்று பொருள்களை வாங்கிக் கொண்டிருப்பதுமாக இருக்கின்றனர். இது மறுமையில் அடையவிருக்கும் நன்மையை நாமேத் தடுத்துக் கொள்ளக்கூடாது.

பாங்கிற்கு பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு ஸலவாத் ஓதிவிட்டு, அதன்பிறகு கீழ்காணுமாறு வசீலாவுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்

பொருள்: 'முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரீ 614

பாங்கிலிருந்து தொடங்கி தொழுவது முதல் தஸ்பீஹ், துஆ, சுன்னத் தொழுகை என்றுப் பள்ளியை விட்டு வெளியில் வரும்வரை தொழுகைக்கான அமல்கள் நீடிக்கின்றன. அவற்றை முழுமையாக நிறைவு செயது அதற்கான நற்கூலிகளை குறைவின்றி அறுவடை செய்துகொள்ளும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக !

நன்றி; அதிரை ஏ.எம்.பாரூக்

ஓர் மரணம் அறிவிப்பு

நமதூர் மேலத்தொருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் பாசித் மகன் முஹம்மத் இக்பால் அவர்கள் 23.09.2010. அன்று மதியம் மரணம் அடைந்து விட்டார்கள் .(இன்னா லில்லாகி இன்னா இளைகி ராஜுவுன்) மிகவும் வர்த்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.அன்னாரின் குடும்பத்தார்கள் & மகனார்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மனஅமைதியை தந்து அருள்வானாக ''மேலும் அன்னாரின் மாப்ரத்துக்காக் அனைவரும் துவா செய்வுமாறு கேட்டுகொள்கிறோம் .

20 செப்டம்பர், 2010

எச்சரிக்கை ! எச்சரிக்கை !! எச்சரிக்கை !!!

அன்பு சகோதரர்களே....

அஸ்ஸலாமு அளைக்கும்!

வருகின்ற 24 .09 .2010 வெள்ளி கிழமையன்று பாபர் மசூதி வழக்கின் முக்கிய தீர்ப்பு வருகிறது இதில் யாருக்கு சாதக பாதகமாக இருந்தாலும் பாதிப்பு என்பது இஸ்லாமியராக இருக்கும் நமக்குத்தான் என்பதை கடந்த கால சம்பவங்களில் நாம் கண் கூடாக கண்ட மறுக்க/மறைக்க முடியாத உண்மையாகும் .

ஆனால் இந்த தீர்ப்பு நமக்குசாதகமா பாதகமா என்பது இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம் (இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டியது முக்கியம்) ஆனாலும் இந்த தீர்ப்புக்கு பின் ஒருக்கால் பிரச்சனை என்று வருமேயானால் வரக்ககுடிய விளைவுகளை எதிர் கொள்ள நாம் தயாராக இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் .

இந்த தருணத்தில் நமக்கு நாமே பிரச்சனைகளை வளர்த்தும் இயக்கம் பார்த்துக்கொண்டும் அவன்தானே இவன் தானே என்று பாராமல் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாம் இது போன்ற சமுக பிரச்சனைகளில் வெற்றிகாண இயலும் .

மேலும் இந்த தீர்ப்பானது வெள்ளிக்கிழமையன்று வழங்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தருணத்தில் நமக்கு எச்சரிக்கை தேவை . இந்த தினத்தன்று நமது பெண்களை குறைந்தது சில நாட்களுக்கு வெளியிடங்களுக்கு செல்லாமலும் பள்ளி செல்லும் பெண்பிள்ளைகளை இஸ்லாமியர் அல்லாத தனது தோழியர் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி நம்மை நாமே தற்காத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் கவத்தில் கொண்டு நாம் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து இறைவனிடம் பிரார்த்தனை செயுங்கள் நிச்சயம் இறைவைனின் உதவி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை !

ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்காரனின் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்"

-நபி மொழ


Babri Mosque Babri Mosque

ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும் அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்'

இச்செய்தியை மின்னஞ்சல் மூலம் தங்களின் குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் "

நன்றி; அனஸ்


பித்ரா விநியோகம்





தமுமுக &அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் சார்பில் இந்த ஆண்டும் பித்ரா என்னும் தர்ம்மம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. 111 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பொருள்கள்;அரிசி,சினி து.பருப்பு ,ரீபைண்டு ஆயில் ,கோதுமை ,உளுந்து ,பால் ,சேமியா ,டால்டா ,கடலை ,டிதுள் ,முந்திரி திராட்சை ,மேரி பிஸ்கட் ,கறிமசாலா ,கடலைமாவு , மேற்கண்ட உணவு பொருள்கள் அனைத்து குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது .ரமலானில் அறிந்தும் அறியாமலும் செய்த நம்முடைய 'பாவங்களை வல்ல இறைவன் மன்னித்து அருள் புரிவானாக"ஆமின் "

19 செப்டம்பர், 2010

அண்ணல் நபிகளின் அமுத வாக்குகள்! நல்ல கணவனின் பண்புகள்!!

கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இதோ, அல்லாஹ்வின் நபி(ஸல்) அவர்கள் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:

"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, 'விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்' என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (ஜாமிவுத் திர்மிதி)

நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி(ஸல்)

வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி(ஸல்) அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082

- நன்றி ; இனியவன்

16 செப்டம்பர், 2010

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்



அருள் மறை திருக் குரானில், மனிதனை ஒரு சிறந்த அழகிய படைப்பாக படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாக, மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல் குரான் 95:4).

முதல் மனிதனை இறைவன் களிமண்ணினால் வடிவமைத்து பின் அவ்வடிவத்திற்கு உயிரை அவன் தன் ஆவியிலிருந்து ஊதினான். இதனை அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

(நபியே நினைவு கூறுவீராக!) "நிச்சயமாக நாம் களி மண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில் ;(71) நான் அவரை செவ்வைப்படுத்தி எனது ஆவிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து சுஜூது செய்யுங்கள்" (72) (அல்-குரான் 38: 71,72).

இன்று இந்த நவீன அறிவியல் வளர்ச்சியின் மூலம் மனித உடல் கூறுகளை ஆராய்ச்சி செய்தபோது, இப்பூமியில் (நிலப்பரப்பில்) காணப்படும் பல்வேறு மூலக்கூறுகள் (சத்துக்கள்) மனித உடலிலும் காணப்படுவதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சராசரியாக ஒரு உயிரினம் 95% கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகிய மூலக்கூறுகளை பெற்றுள்ளன. மேலும் 26 வகையான வெவ்வேறு மூலக்கூறுகளையும் பெற்றிருக்கின்றன. நாம் மேலே கூறியது போன்று இன்னொரு இறை வசனம் கூறுகின்றது:

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். (அல்-குரான் 23:12).

அரபிக் வார்த்தையான 'சுளால' (sulala) என்பதன் பொருள் 'தாதுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட (Extract) ' என்பதாகும். அதாவது 'திரவசாறு' (Essence) என்பதனைக் குறிக்கும். இதற்கு அல்லாஹ் 'களி மண்ணிலிருந்துள்ள சத்தினால்' என்று தனது வசனத்தில் குறிப்பிடுகின்றான். இதனை நாம் சற்று சிந்திப்போமானால், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமான குரானில் கூறப்பட்டுள்ள இத்தகைய உண்மைகளை இன்றைய நவீன அறிவியல் (வளர்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட) 'மனித உடலில் மண்ணின் தாதுக்கள்' இருப்பதை உறுதிசெய்கிறது.

சுமார் 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் கீழ்க்கண்ட மூலக்கூறுகள் அமையப்பெற்றுள்ளன:

மூலக்கூறுகள் அடையாள எழுத்து % எடை(கிராம்)
(பெருங்கனிமங்கள்)






ஆக்சிஜன் O 65.0 43,000
கார்பன் C 18.5 12,000
ஹைட்ரஜன் H 9.5 6,000
நைட்ரஜன் N 3.3 2,000
கால்சியம் Ca 1.5 1,100
பாஸ்பரஸ் P 1.0 750
பொட்டாசியம் K 0.35 225
சல்பர் S 0.25 150
குளோரின் Cl 0.15 100
சோடியம் Na 0.15 90
மக்னீசியம் Mg 0.05 35
சிலிகான் Si 0.05 30




பெருங்கனிமங்கள்

எடை (மி.கி)
இரும்பு Fe 0.01 4,200
துத்தநாகம் Zn 0.01 2,400
தாமிரம் Cu 0.01 90
போரான் B 0.01 68
கோபால்ட் Co 0.01 20
வனடியம் V 0.01 20
அயோடின் I 0.01 15
செலேனியம் Se 0.01 15
மாங்கனீஸ் Mn 0.01 13
மோலிப்டெனும் Mo 0.01 8
குரோமியம் Cr 0.01 6

நாம் மேலே கண்ட காரணிகளை உற்று நோக்கும் போது, மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது என்பதை அறிகின்றோம். அல்லாஹ் தான் திருமறை குரானிலே கூறுகின்றான்:

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குரான் 21:45)

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்-குரான் 21:30)

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். (அல்-குரான் 25:54)

மனிதனும் மற்ற உயிரினங்களும் படைக்கப் பட்ட விதத்தினை விவரிக்கும் இவ்வசனங்களைக் காணும்போது ஒரு தலை சிறந்த இன்னும் பல அற்புதத்திற்கான சான்றுகள் குர்ஆனில் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவற்றில் ஒரு அற்புதம்தான் மனிதனும் மற்ற உயிரினங்களும் நீரிலிருந்தும் படைக்கப் பட்டதாக கூறும் இறை வசனங்கள். மனிதர்களால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதுவும் மைக்ரோஸ்கோப்பின் கண்டுபிடிப்பிற்கு பின்னால் அதன் உதவிகொண்டு இவ்வசனங்கள் கூறும் உண்மையான தகவல்களை இன்று நாம் அறிகின்றோம்.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் இன்றியமையாததாய் இருக்கின்றது. பாலைவன மற்றும் வரட்சியான பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் நீரின் பற்றாக்குறையை தாங்கும் வகையில் தங்களது உடலில் ஜீவத்துவ பரிணாம வளர்ச்சியைப் (metabolism) பெற்றிருக்கின்றன. மேலும் தண்ணீர் கிடைக்கும் போது அப்பிராணிகள் அவற்றிலிருந்து தமக்கு தேவையான பலன்களையும் பெறுகின்றன. ஒரு சராசரி மனிதனுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். சில காரணங்களினால் உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது, அககுறைவினை சரியான தருணத்தில் ஈடு செய்யவில்லையெனில் நாம் உயிருடன் வாழ முடியாது என்பதை அறிவோம். 17-ம் நூற்றாண்டு வாழ்ந்த அறிவியலறிஞர் ஜான் பப்டிச்டா வான் ஹெல்மொன்ட் (Jan Baptista van Helmont) என்பவர் 1640-ம் ஆண்டுதான் தாவர வளர்ச்சிக்கு மண்ணிலிருக்கும் தண்ணீர் சத்து மிகவும் அவசியம் என்பதனை கண்டறிந்தார்.

நன்றி;ஜபார் சாதிக்


15 செப்டம்பர், 2010

பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?



அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்? திருக் குர்ஆன் 2:114
அன்புச் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு,
நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனை பல தெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர்
6ந் தேதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்!
உங்களின் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் இதோ சில ஆலோசனைகள்:

1. துஆ
பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கான தேவைகளை நிறைவேற்ற முஸ்லிம் உம்மத்திற்கு உதவி அருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் துஆ (பிரார்த்தனை) செய்யுங்கள். இதற்கு எதுவும் செலவாகாது, இதற்காக பொது அறிக்கைகள் எதுவும் தேவையில்லை. தினந்தோறும் உங்கள் துஆக்களில் பாபரி மஸ்ஜிதை நினைவுபடுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2. உண்மைத் தகவல்களை படியுங்கள்; அதனைப் பற்றி எழுதுங்கள்.
பாபரி மஸ்ஜித் சோக நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு தெரியாமலிருந்தால், அதைப் பற்றி வாசித்தறியுங்கள். ஷரீஅத்தில் மஸ்ஜித்களின் அந்தஸ்து பற்றியும், பாபரி மஸ்ஜிதின் நிர்மாணம் முதல் நிர்மூலம் வரையிலான வரலாறு பற்றியும் அறியலாம்; இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (இந்திய முஸ்லிம்களின் சம்மேளனம்) என்ன நிலை எடுத்துள்ளது என்பது பற்றி தெளிவடையலாம். இந்துத்துவ சக்திகள் முதலில் அதனை அடையாளப்படுத்தி, அதன் பின்னர் முழு உலகிற்கும் முன்னிலையிலும் அதனை சுக்கு நூறாக தரைமட்டப்படுத்தியது ஏன் என்பது பற்றி அறிய முயலுங்கள். இது அதனை அதே இடத்தில் மீண்டும் நிர்மாணம் செய்வதே மிக முக்கியமாகும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை உங்களுக்கு தரும்.
இந்திய அரசின் பாதுகாப்பின் கீழ், பாபரி மஸ்ஜிதின் மையப் பகுதியில் ராமர் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும், பாபரி மஸ்ஜித் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு சட்டரீதியாகவும், சரித்திரரீதியாகவும் எந்த ஓர் ஆதாரமுமில்லை. மஸ்ஜிதை இடித்த கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் தத்தம் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பதும் முக்கிய குற்றவாளிகள் இன்று அரசியல் அதிகாரம் பெற்று வலம் வருகிறார்கள் என்பதும், அதே நேரத்தில் இந்த மனிதாபிமானமில்லாத அக்கிரமத்திற்கெதிராக அமைதி வழியில், சட்டத்திற்குட்பட்டு வீதிகளில் குழுமி கண்டனம் தெரிவித்த முஸ்லிம்கள் ஏறத்தாழ 2000 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றதும் அப்பட்டமான உண்மைகளாகும்.

3. நீங்கள் வாழும் பகுதிகளிலுள்ள மஸ்ஜித்களில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
முஸ்லிம்களில் பலதரப்பட்டவர்கள் ஒரே சமயத்தில் மஸ்ஜிதில் ஒன்று கூடுவது வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குத்தான் என்பதால், குத்பா பிரசங்கத்தைப் பயன்படுத்தி, பாபரி மஸ்ஜித் பற்றி விளக்கி கூறலாம்; இயன்ற வழிகளில் பாபரி மஸ்ஜித்துகாக அவர்கள் ஆதரவைக் கோரலாம்.

4. ஊடகங்கள் மூலம் உண்மைச் செய்தியை உலகறியச் செய்யுங்கள்:
பாமர மக்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் பக்கச் சார்புள்ள இஸ்லாத்திற்கு எதிரான செய்தி ஊடகங்கள் மூலமாக வரும் உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட செய்திகள்தான். இந்த நிலையில், பாபரி மஸ்ஜிதின் உண்மை நிலையை மக்கள் முன் எடுத்து வைக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு எலக்டிரானிக்/அச்சு ஊடகங்களில் பணியாற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதாருக்கும் பாபரி மஸ்ஜித் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைக் கோரலாம்.

5. உங்கள் ஊர்களில்/ நகரங்களில் "பாபரி மஸ்ஜித் புனர் நிர்மாணக் குழுக்களை" நிறுவுங்கள்:
பாபரி மஸ்ஜிதைப்பற்றி மக்களுக்கு அறியத்தருவதற்கும், ஹிந்துத்துவ சக்திகளின் அக்கிரமங்களால் பாதிக்கப்பட்ட உங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தார்மீக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இக்குழுக்கள் பயன்படும். கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான கூட்டு நிகழ்ச்சிகள், செய்தி மடல்கள் வாயிலாக சமுதாயத்தினருக்கு விழிப்பூட்டுங்கள்.

6. பொது மக்கள் அபிப்ராயத்தை உருவாக்குங்கள்:
மனித உரிமை குழுக்கள், அரசியல் கட்சிகள், திறந்த மனதுள்ள முஸ்லிமல்லாத குழுக்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு பாபரி மஸ்ஜித் விவகாரத்தைப்பற்றிய கருத்தோட்டத்தை அவர்கள் மத்தியில் உண்டாக்குவது முஸ்லிம்களின் பொறுப்பாகும். கருத்தொற்றுமை கொண்டவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் நீதி வேண்டி போராடும் முஸ்லிம்களுக்கு வலுவைக் கொடுக்கும்.

7. ஹிந்துத்வ சக்திகள் மத்தியில் அழைப்புப்பணி:
"தேசிய அளவில் மிகப்பெரும் சோக நிகழ்ச்சியான பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு நீங்கள் தான் பொறுப்பாகும். உங்களின் சதித்திட்டத்தின் காரணமாக நீதிக்குப் புறம்பான செயலை நீங்கள் செய்ததாக இந்திய முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள். மரணத்திற்கு பின் வரும் மறுமை நாளில் இறைவனின்," எந்த உரிமையையும், அனுமதியையும் கொண்டு இஸ்லாத்தின் அடையாளமாகிய மஸ்ஜிதை இடித்தீர்கள் ? எனது அடியார்களைக் கொன்று குவித்தீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு எச்சரிக்க வேண்டும். குருட்டு குறிக்கோள்களுக்கு பாடுபடுவதை விடுத்து, எங்களையும்,உங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் பக்கம் திரும்புங்கள் என்ற செய்தியை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களின் நேர்வழிக்காக தினமும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

8. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
முஸ்லிம்கள் உறுதியாக நின்று அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மென்மையான குறிக்கோளற்ற அணுகுமுறையைக் கையாண்டால்,அது இந்தியாவில் அமைதியை நிலவச் செய்யும் எனப் பலர் நம்புகின்றனர். அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் - என்னவென்றால் அல்லாஹ்வின் அருளால் ஜிஹாத் உணர்வுதான் அவர்கள் ராமர் கோவில் கட்டுவதையும்,ஏனைய மஸ்ஜித்களை தாக்கி அழிப்பதையும்,முஸ்லிம்களை தாக்குவதையும் விட்டு யோசிக்க வைத்திருக்கிறது. இத்தருணத்தில் இவ்விவகாரத்தில் நாம் தளர்வு காட்டினோமென்றால், ஹிந்துத்துவ சக்திகள் தங்கள் அநீதிகளையும், அக்கிரமங்களையும் மறுபடியும் கட்டவிழ்த்து விடுவதற்கு உற்சாகமளிப்பதாய் அமைந்து விடும். எனவே எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
அல்லாஹ்வின் மீது மட்டும் முழு நம்பிக்கைவைத்து, அல்குர்ஆன், அல்ஸூன்னாவின் வழி காட்டுதலின் அடிப்படையில் நாம் உறுதிப்பாட்டுடனும் உத்வேகத்துடனும் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு நமது கருத்தை நிறுவதற்காக மனப்பூர்வமாகவும், மன உறுதி தளராமலும் உழைப்பது மட்டுமே பாபரி மஸ்ஜிதை மீண்டும் புனர் நிர்மாணம் செய்யலாம்!இம்மை மறுமை வெற்றியை அடையலாம்!
முஸ்லிம்களே நாம் விடாமல் நீதிக்காகப் போராடுவோம்.!
அல்லாஹ்வின் ஆணையை ஏற்றுச் செயல்படுவோம்.!
இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடையாளங்களையும் பாதுகாக்கவிடப்படும் அழைப்பிற்குத் தயாராக இருப்போம்.
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன.எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள் “அல்குர்ஆன் 72:௧
பாபரி மஸ்ஜித் இடம் நம் முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைக்க தூவா செய்வுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பரப்புங்கள் .

13 செப்டம்பர், 2010

தாய்மை அடைய ஏற்ற வயது ......



வநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக போற்றி அனுபவிக்க வேண்டிய இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். “பருவத்தே பயிர் செய்” என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல. மகளிருக்கும் இது பொருந்தும்.

இளவயது பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே 24-26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும் பிள்ளை பேறை தள்ளிப் போட நினைக்கிறார்கள். நாம் நல்ல நிலைக்கு வந்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்து கின்றனர்.

சில பெண்கள், திருமணத்திற்கு பிறகு உடனடியாக குழந்தை பெற விரும்பாமல், கருத்தடை சாதனங்களை உபயோகித்து, பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற விரும்பும் காலத்தில் அவற்றை நீக்கிக் கொண்டால் உடனடியாக கருத்தரிக்கலாம் என திட்டம் தீட்டுகின்றனர். அது அவ்வளவு சுலபம் அல்ல. இவர்கள் இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் தேவைகள் பூர்த்தியாகி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அவ்வளவு சுலபமாக கருத்தரிக்க இயலாது.

நீங்கள் ஏன் என்று கேள்வி கேட்கலாம்.

உடலில் மற்ற உறுப்புகளை விட பெண் இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. பெண்ணின் நடுத்தர வயதிலேயே மாதவிலக்கு முற்றுப் பெறுதல் வந்து கருத் தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது.

பொதுவாக பெண்களுக்கு முப்பது வயதிலிருந்தே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. நாற்பது வயதுக்கு மேல், மேலும் அதிக சதவிகிதத்தில் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.

பெண்ணின் வயதைப் பொறுத்து அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன. உடல் ரீதியாகக் கருப்பை முதிர்ந்துவிடும் நிலை கருத்தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களின் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதில் முட்டை உருவாவது முக்கிய இடத்தை வகிக்கிறது. முட்டை வெளிப்படுவது, வயது முதிர்ந்த நிலையில் தன் கணவர் வெளிப் படுத்தும் குறைபாடுள்ள விந்தணுவோடு அது சேர முடியாமல் சிதைவது என பல பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிறது.

30 முதல் 35 வயதுக்கிடையில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதற்கு முன்னதாக கருத்தரிப்பதில் இருக்கும் வாய்ப்பை விட இருமடங்கு தள்ளிப்போகிறது. 30 வயதை தாண்டினாலே பெண்களுக்கு குழந்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஹார்மோன் சார்ந்த காரணிகள், மற்றும் பிற நோய்களும் ஏற்படு கின்றன.

வயது ஆக ஆக உடலின் ஆற்றல் குறைய ஆரம்பிக்கிறது. மேலும் உடலில் ஹார்மோன்களால் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. உயர் ரத்த அழுத்தம், கருப்பையில் கழலைகள், சினைப்பையின் செயல்திறன் குறைதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பங்கு வகிப்பது மாதவிலக்கு குறைபாடுகளாகும். ஹார்மோன் குறைவின் காரணமாக ஒழுங்கற்ற உதிரப்போக்கு அதாவது விட்டு விட்டு வருதல், சினைப்பையால் கருமுட்டைகளை உருவாக்க இயலாத நிலை போன்றவை ஏற்படுகின்றன.

கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுபவராக இருந்தால் அவற்றை நிறுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த மூன்று மாத இடை வெளியில் உடலில் உள்ள ஹார்மோன்களின் நிலை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் முப்பது வயதுக்கு மேல் கருத் தரிக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு அதிகளவில் ஏற்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் காரணிகள், பயணம், மன நிலைகள் போன்றவை இளம் வயதினரைவிட வயது முதிர்ச்சியடையும் நிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் கருச்சிதைவுகள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றன .

இளம் வயதில் கருவைச் சுமக்கும் தாயைப் போல் அல்லாமல் முதிய வயதில் கருவைச் சுமக்கும்போது சோர்வு, படபடப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாகத் தோன்றுகின்றன.

முதிர் வயதுப் பெண்கள் பிரசவிக்கும்போது இடுப்புக்கூட்டுப் பகுதியிலுள்ள எலும்புகளின் விரிந்து கொடுக்கும் தன்மை வெகுவாக குறைந்துவிடுவதால் சுகப் பிரசவம் நடப்பது அரிதாகிறது. இதனால் சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தகுதியான வயதில் தாய்மை அடையாததால் பெண்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்பதாலேயே மருத்துவர்கள் தகுதியான வயதில் குழந்தைப்பேறு அடைய வேண்டும் என்ற கொள்கையை ஆதரிக்கின்றனர்.

ஆகவே தாய்மையை விரும்பும் பெண்கள் அதற்காகத் திட்டமிட சரியான வயது, தாய்மையை முழுமையாக அனுபவிக்கச் சிறந்த வயது இருபது முதல் முப்பது வயது வரைதான். அதற்கு அப்பால் வரும் ஒவ்வொரு வயதிலும் கருத்தரிப்பது என்பது சிக்கல் மிகுந்தாக உள்ளது.

இதனால்தான் நம் முன்னோர்கள் “பருவத்தே பயிர் செய்” என்றார்கள். இதை கருத்தில் கொண்டு ஏற்ற வயதில் குழந்தைப் பேறை பெற்றால்தால் தானும் ஆரோக்கியமாக இருக்க முடியும். குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.

விமானத்தில் குழந்தை பெற்று கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற பெண்

Filipino Doctors with Abandoned Infant
மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு வந்த கல்ப் ஏர் வி்மானத்தில் பயணித்த ஒரு பெண், விமான கழிப்பறையில் வைத்து குழந்தை பெற்று, அதை காகிதத்தில் சுற்றி கழிவறை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தை சுத்தம் செய்ய வந்த பணியாளர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஈவு இரக்கமற்ற அந்தப் பெண்ணைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அந்த விமானம் சவூதி அரேபியாவிலிருந்து மணிலாவுக்கு வந்தது. விமானம் வந்து சேர்ந்து அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் விமான துப்புறவாளர்கள் உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அந்த விமானம் பஹ்ரைன் செல்லத் தயாரானது. அப்போதுதான் விமானக் கழிப்பறையில் குழந்தை காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை மீட்டனர்.

பின்னர் விமான நிலைய டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தையை சோதித்துப் பார்த்தனர். அது நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்தனர். இதையடுத்து கல்ப் ஏர் நிறுவனத்தினர் கூடி அக்குழந்தைக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் என பெயரிட்டனர். பின்னர் நினோய் அகினோ மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அக்குழந்தையின் தாயார் யார், எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை. அவரைப் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்தப் பெண் எப்படி கழிப்பறைக்குப் போய் குழந்தை பெற்றார், எந்தவித சுவடும் இல்லாமல் எப்படி வந்து இருக்கையில் அமர்ந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் குழந்தை பெற்றபோது எந்தவித சப்தத்தையும் சக பயணிகள் கேட்கவில்லையாம்.

இக்குழந்தை குறித்து டாக்டர் மரியா தெரசா அகோரஸ் கூறுகையில், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், சரியான எடையுடன் உள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களே சேர்ந்து பெயரும் சூட்டியுள்ளனர் என்றார் புன்னகையுடன். அக்குழந்தைக்கு விமான நிலைய ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு புத்தாடைகளையும் வாங்கிக் குவித்து விட்டனர். மேலும் கிலுகிலுப்பை உள்ளிட்ட பொம்மைகளும் வாங்கி குழந்தையை கண்டு களித்து வருகின்றனராம்.

கடந்த ஜூலை மாதம் இதேபோல இந்தியப் பெண் ஒருவர் விமானத்தில் குழந்தை பெற்று அதை விமான டாய்லெட்டில் போட்டு கொல்ல முயற்சித்துப் பிடிபட்டார் என்பது நினைவிர்க்காலம்.
நன்றி ;தட்ஸ் தமிழ்

இசை

JAQH

நபி (ஸல்) கூறினார்கள்: என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தையும், பட்டாடைகளையும், மதுபானத்தையும், இசைக்கருவிகளையும் ஹலாலாகக் கருதுவார்கள். நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த (விலக்கப்பட்ட) விஷயங்கள் இன்று சமுதாயத்தில் தாராளமாகப் புழங்கி வருகின்றன.

1. விபச்சாரம் செய்வது

2. பட்டாடை அணிவது

3. மது அருந்துவது

4. இசைக் கருவிகளைக் கொண்டு இசைப்பது.

மேற்கூறப்பட்ட நான்கு வகை விலக்கப் பட்டவைகளில்

1. விபச்சாரம் செய்வது

2. பட்டாடை அணிவது

மது அருந்துவது,

போன்றவைகள் பள்ளி வாசலுக்கு வெளியில் நடப்பவைகளாகும்.

இசைக்கருவிகளை கொண்டு இசைப்பது மட்டும் (செல்போன் மூலம்) பள்ளிவாசல்களுக்குள்ளேயே அதுவும் நம்மவர்களால் நடந்து கொண்டிருக்கின்றது. நாமாக விரும்பி அவைகளை இசைப்பதில்லையே நமது பாக்கெட்டிற்குள் போட்டு விடுகிறோம் அவைகள் தாமாக இசைக்கத் தொடங்கி விடுகின்றன. என நினைக்கலாம். பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு நமக்கு சில தவிர்க்க முடியாத கடமைகள் உள்ளன

உளூச் செய்து கொள்கிறோம். பள்ளியில் அமர்வதற்கு முன்பாக தஹிய்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமர்கிறோம்.

மேற் கூறப்பட்டக்கடமைகள மறக்காமல் செய்து விடுகிறோம் அதேபோன்று பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பாக நமது செல்போனை சைலன்ட் செய்து கொள்வதையும் கடமையாக ஆக்கிக் கொள்ளலாமே. பெரும்பாலான நம்மவர்கள் அதைச்செய்வதில்லை. ஒவ்வொரு பள்ளிவாசல்களின் வாயில்களில் அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்ட செல்போனை அமர்த்தி விடும் படியான கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் பள்ளிவாயில்களின் வாசல் கதவுகளை நிறைத்துக் கானப்படுகின்றன. ஆனாலும் பலருக்கு அவைகள் ஒரு அறிவிப்பாகவே காணப்படுவதில்லை. அவைகளை ஒருப் பொருட்டாகவும் கருதுவதில்லை.

பள்ளிக்குள் உள்ளங்களை உருக வைக்கும் அல்லாஹ்வின் திருமறை வசனங்கள் தொழுகையில் இமாமால் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவைகள் தொழுகையாளிகளால் ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருக்கும்போது பாக்கெட்டிற்குள் போட்டு வைத்திருந்த செல்போன்கள் இசைக்கத் தொடங்கி விடுகின்றன. இசைக்காமல் சாதாரண மணி ஓசையாக இருந்தால் கூட ஓரளவு சகித்துக் கொள்ளலாம். அதுவும் புதிதாக ரிலீசாகிய ஹிட் படத்தின் ஹிட் பாடலை இசைக்கத் தொடங்கி விடும். அல்லாஹ்வின் திருமறை வசனத்தை ஆழ்ந்து செவி மடுப்பதா? ஹிட் படத்தின் ஹிட் பாடலின் இசையை செவி மடுப்பதா? புதுப்புது ராகங்களில்; அழைப்பொலிகளை செல்போனில் பதிந்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். இது அவர்களுக்கு ( நம்மவர் அல்லாதவர்களுக்கு ) அனுமதிக்கப் பட்டிருக்கின்ன. கூர்மையாக சிந்திக்கக் கூடிய புத்தியை முனை மழுங்கச் செய்யும் இசையை தெய்வீக ராகம் என்பார்கள்.

இசை நமக்கு அனுமதிக்கப் பட்டிருக்கின்றதா? கண்டிப்பாக இல்லை இசைக்கருவிகளை உடைத்தெறியப் படுவதற்காக நான் அனுப்பப் பட்டுள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் சிந்தித்துப் பார்க்கப் கடமைப் பட்டுள்ளோம்.

இன்று அவர்களின் தொழில் உற்பத்தி நிருவனங்களில் தயாரிக்கப்படும் மார்க்கம் விலக்கப்பட்ட அனைத்து தயாரிப்புகளையும் விற்றுக் காசாக்கவும் அதன் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ளவும் நமது இஸ்லாமிய நாட்டுச் சந்தைகளைத் தான் அதிகமதிகம் தேர்வு செய்கிறார்கள் . இன்று இஸ்லாமிய பெயர் கூறப் படாத பல நாடுகளில் இதை நாம் கண்கூடாக கண்டு வரவும் செய்கின்றோம். (ஏன் பெயர் கூறப்பட வில்லை என்றால் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் பரவலாக இவைகள் அனுமதிக்கப்பட்டு அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப் படுவதால் நாம் குறிப்பிட்டு எந்த ஒரு நாட்டையும் கூற விரும்ப வில்லை )

இதனாலேயே அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கூறப்பட்ட ஹராமானவைகளை என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தையும், பட்டாடைகளையும், மதுபானத்தையும், இசைக்கருவிகளையும் ஹலாலாகக் கருதுவார்கள். நூல் புகாரி என முன்னறிவிப்புச் செய்தார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரவர்களும் அழுத்தம் திருத்தமாகப் பல நிலைகளில் எடுத்துக் கூறித் தடைசெய்த அனைத்தும் இஸ்லாமிய நாட்டுச் சந்தைகளில் மலிவு விலைகளில் கிடைக்கப் படுவதைக் கண்டு மனம் வெதும்பி வருகிறோம். இதில் கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம் யாதெனில் இஸ்லாமிய நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப்படும் விலக்கக்ப்ட்டவைகளை நமது அப்பாவி முஸ்லிம்கள் பலர் அவைகள் யாவும் மார்க்கம் அங்கீகாரம் அளித்திருப்பது போன்று நினைக்கத் தொடங்கி விடுகின்றனர். அவைகளை தாங்கள் உபயோகிக்கவும் செய்யத் தொடங்கி விடுகின்றனர்

அல்லாஹ்வின் அடியார்களே! எந்தச் சமுதாயத்திற்கும் வழங்காத பல உயர்ந்த அந்தஸ்த்துகளை நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அல்லாஹ் தனது இறுதி நபியன் மூலம் வழங்கி முஸ்லீம் சமுதாயத்தை பல நிலைகளில் கவுரவித்திருக்கின்றான் அதில் ஒன்று தான் தனது நபியிடம் வஹியின் மூலம்

நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையும், தேர்ந்(தெடுத்)து ( உங்களுக்கு அருட் செய்து அங்கீகரித்துக் ) கொண்டேன். அல்குர்ஆன் 5:3
மக்கள் பெருந்திரளாக திரண்டிருந்த இறுதி ஹஜ்ஜின் பேருரையின் போது அல்லாஹ் இந்த வஹியை இறக்கி அருளி அங்குக் குழுமி இருந்த அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முழுமைப்பெற்ற மார்க்கம் தான் இஸ்லாம் என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்கக் கடமைப்டுள்ளோம். முழுமைப் பெற்ற மார்க்கத்தில் நம்மை முழுமையாக நுழைத்துக் கொண்டோமா ? என்கிற விஷயத்தை நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே சுயப்பரிசோதனை செய்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம்.

நாம் நமது மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளாமல் இருந்து வருகிறோம் என்பதை நம்மை விட அவர்கள் அதிகம் தெரிந்து கொண்டதால் அவர்களின் தொழிற்சாலைகளில் உருவாக்கும் தடுக்கப்பட்ட தயாரிப்புகளை நமது இஸ்லாமிய நாடுகளின் சந்தையை மிக அழகாக தேர்வு செய்து கொண்டார்கள்.

அன்புள்ள சகோதரர்களே ! செல்போனை சைலன்ட் செய்து கொள்வதற்காக எழுதப்பட்டக் கடிதம் நீண்டு விட்டது. ஆனாலும் மேற்கூறப்பட்ட ஹதீஸின் தலைப்போடு விளக்கங்கள் ஒத்து வருவதால் கட்டுரையை செல்போன் விஷயத்திற்காக மட்டுமல்லாமல் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தடைசெய்த விபச்சாரம் செய்வது 2.பட்டாடை அணிவது 3.மது அருந்துவது 4.இசைக் கருவிகளைக் கொண்டு இசைப்பது . போன்ற அனைத்திற்குமாகப் பயன் படுத்திக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஆகவே பயான்களின் அமர்வுகளில் இருக்கும்போதும், பள்ளிவாசல்களில் வணக்கங்களில் இருக்கும்போதும் உங்கள் செல்போனை சைலன்ட் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் வணக்கத்திற்கும் பிறருடைய வணக்கத்திற்கும் இடையூறு அளிக்காமல் இருக்கும். மேலும் உங்கள் செல்போன் அழைப்பில் இசையை தவிர்த்துக் கொள்ளுங்கள், சாதாரண டெலிபோன் (பெல்) சத்தத்தை சேவ் செய்து கொள்ளுங்கள், வெறுக்கத்தக்க பல இசைகள் இன்று செல்போன்களில் பதியப்பட்டு வருவதால் இவைகள் மனதில் கடுமையான சஞ்சலத்தை உண்டு பன்னி வடுகிறது. நிசப்தமான நிலையில் பள்ளியில் தொழுது கொண்டிருக்கும் போது இதன் ஓசை தொழுகையாளிகளுக்கு மன சஞ்சலத்தையும், மன உலைச்சலையும் உண்டு பன்னி விடுகின்றது பள்ளிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே அதை ஒரு கடமையாகவே நினைத்துக் கொண்டு சைலன்ட் செய்து விடுங்கள். உங்களால் இயன்றவரை ஷைத்தானின் நுழைவு வாயில்களை தடுத்துக் கொள்ளுங்கள்.

நன்றி; ஜாக்