பாபரி மஸ்ஜித் வழக்கில் நாளை (செப்டம்பர்30) மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு அறிவித்துள்ளது.
60 ஆண்டுக் காலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் நீதிபதி சிபகத்துல்லா கான் தலைமையில் நீதிபதிகள் சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு வழங்கவுள்ளது.
தீர்ப்பு வழங்கவுள்ள நீதிபதிகள் பற்றிய விபரம்:
நீதிபதி சிபகத்துல்லாஹ் கான்: 1952ல் பிறந்த நீதிபதி கான் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் இளம் அறிவியல்; பட்டப்படிப்பு முடித்து விட்டு அதே பல்கலைகழகத்தில் 1975ல் எல்.எல்.பி. சட்டப்படிப்பு பட்டம் பெற்றார். அலஹாபாத் பார் கவுன்சிலில் 1975ல் வழக்குறைஞராக பதிவுச் செய்துக் கொண்டார். சிவில், வருவாய் மற்றும் பணியாளர் நலன் துறை தொடர்பான வழக்குகளில் இவர் ஆஜரானார். அலிகர் சிவில் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளும் பிறகு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளும் வழக்குறைஞராக பணியாற்றினார். 2001 டிசம்பரில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி சுதீர் குமார் அகர்வால்: 1958ல் பிறந்த நீதிபதி அகர்வால் ஆக்ரா பல்கலைகழகத்தில் அறிவியல் பட்டம் பயின்று பிறகு மீரட் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று 1980ல் பட்டம் பெற்றார். 1980 முதல் வழக்குறைஞராக பணியாற்றி வருகிறார். முதலில் வரிகள் தொடர்பான பிரிவில் வழக்குறைஞராக பணியாற்றிய இவர் பிறகு பணியாளர்கள் நலன் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி அதில் நிபுணத்துவம் பெற்றார். 2003ல் உ.பி. அரசின் கூடுதல் தலைமை வழக்குறைஞராக நியமிக்கப்பட்டார். அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2005லிலும் நிரந்தர நீதிபதியாக 2007லிலும் உயர்வு பெற்றார்.
நீதிபதி தர்ம வீர் சர்மா: 1948ல் பிறந்த நீதபதி சர்மா 1967ல் இளங்கலைப் பட்டமும் 1970ல் எல்எல்பி பட்டமும் பெற்றார். உ.பி. மாநில நிதி நிறுவனத்தில் சட்ட அதிகாரியாக 1989 முதல் 1991 வரையிலும் அதன் பின் அரசு சட்டத்துறையில் முதலில் இணைச் செயலாளராகவும் பிறகு முதன்மை செயலாளராகவும் 2005 வரை பணியாற்றினார். 2002ல் மாவட்ட செசன்சு நீதிபதியாகவும் 2005ல் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் 2007ல் நிரந்தர நீதிபதியாகவும் உயர்வுப் பெற்றார்.
பாபரி பள்ளி இடம் நம் சாமுதாயத்துக்கு கிடைத்திட வல்ல இறைவனிடம் பிராத்தனை செயிவமாக ''
நன்றி; தமுமுக .காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக