நபி (ஸல்) கூறினார்கள்: என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தையும், பட்டாடைகளையும், மதுபானத்தையும், இசைக்கருவிகளையும் ஹலாலாகக் கருதுவார்கள். நூல் : புகாரி
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த (விலக்கப்பட்ட) விஷயங்கள் இன்று சமுதாயத்தில் தாராளமாகப் புழங்கி வருகின்றன.
1. விபச்சாரம் செய்வது
2. பட்டாடை அணிவது
3. மது அருந்துவது
4. இசைக் கருவிகளைக் கொண்டு இசைப்பது.
மேற்கூறப்பட்ட நான்கு வகை விலக்கப் பட்டவைகளில்
1. விபச்சாரம் செய்வது
2. பட்டாடை அணிவது
மது அருந்துவது,
போன்றவைகள் பள்ளி வாசலுக்கு வெளியில் நடப்பவைகளாகும்.
இசைக்கருவிகளை கொண்டு இசைப்பது மட்டும் (செல்போன் மூலம்) பள்ளிவாசல்களுக்குள்ளேயே அதுவும் நம்மவர்களால் நடந்து கொண்டிருக்கின்றது. நாமாக விரும்பி அவைகளை இசைப்பதில்லையே நமது பாக்கெட்டிற்குள் போட்டு விடுகிறோம் அவைகள் தாமாக இசைக்கத் தொடங்கி விடுகின்றன. என நினைக்கலாம். பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு நமக்கு சில தவிர்க்க முடியாத கடமைகள் உள்ளன
உளூச் செய்து கொள்கிறோம். பள்ளியில் அமர்வதற்கு முன்பாக தஹிய்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமர்கிறோம்.
மேற் கூறப்பட்டக்கடமைகள மறக்காமல் செய்து விடுகிறோம் அதேபோன்று பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பாக நமது செல்போனை சைலன்ட் செய்து கொள்வதையும் கடமையாக ஆக்கிக் கொள்ளலாமே. பெரும்பாலான நம்மவர்கள் அதைச்செய்வதில்லை. ஒவ்வொரு பள்ளிவாசல்களின் வாயில்களில் அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்ட செல்போனை அமர்த்தி விடும் படியான கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் பள்ளிவாயில்களின் வாசல் கதவுகளை நிறைத்துக் கானப்படுகின்றன. ஆனாலும் பலருக்கு அவைகள் ஒரு அறிவிப்பாகவே காணப்படுவதில்லை. அவைகளை ஒருப் பொருட்டாகவும் கருதுவதில்லை.
பள்ளிக்குள் உள்ளங்களை உருக வைக்கும் அல்லாஹ்வின் திருமறை வசனங்கள் தொழுகையில் இமாமால் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவைகள் தொழுகையாளிகளால் ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருக்கும்போது பாக்கெட்டிற்குள் போட்டு வைத்திருந்த செல்போன்கள் இசைக்கத் தொடங்கி விடுகின்றன. இசைக்காமல் சாதாரண மணி ஓசையாக இருந்தால் கூட ஓரளவு சகித்துக் கொள்ளலாம். அதுவும் புதிதாக ரிலீசாகிய ஹிட் படத்தின் ஹிட் பாடலை இசைக்கத் தொடங்கி விடும். அல்லாஹ்வின் திருமறை வசனத்தை ஆழ்ந்து செவி மடுப்பதா? ஹிட் படத்தின் ஹிட் பாடலின் இசையை செவி மடுப்பதா? புதுப்புது ராகங்களில்; அழைப்பொலிகளை செல்போனில் பதிந்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். இது அவர்களுக்கு ( நம்மவர் அல்லாதவர்களுக்கு ) அனுமதிக்கப் பட்டிருக்கின்ன. கூர்மையாக சிந்திக்கக் கூடிய புத்தியை முனை மழுங்கச் செய்யும் இசையை தெய்வீக ராகம் என்பார்கள்.
இசை நமக்கு அனுமதிக்கப் பட்டிருக்கின்றதா? கண்டிப்பாக இல்லை இசைக்கருவிகளை உடைத்தெறியப் படுவதற்காக நான் அனுப்பப் பட்டுள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் சிந்தித்துப் பார்க்கப் கடமைப் பட்டுள்ளோம்.
இன்று அவர்களின் தொழில் உற்பத்தி நிருவனங்களில் தயாரிக்கப்படும் மார்க்கம் விலக்கப்பட்ட அனைத்து தயாரிப்புகளையும் விற்றுக் காசாக்கவும் அதன் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ளவும் நமது இஸ்லாமிய நாட்டுச் சந்தைகளைத் தான் அதிகமதிகம் தேர்வு செய்கிறார்கள் . இன்று இஸ்லாமிய பெயர் கூறப் படாத பல நாடுகளில் இதை நாம் கண்கூடாக கண்டு வரவும் செய்கின்றோம். (ஏன் பெயர் கூறப்பட வில்லை என்றால் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் பரவலாக இவைகள் அனுமதிக்கப்பட்டு அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப் படுவதால் நாம் குறிப்பிட்டு எந்த ஒரு நாட்டையும் கூற விரும்ப வில்லை )
இதனாலேயே அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கூறப்பட்ட ஹராமானவைகளை என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தையும், பட்டாடைகளையும், மதுபானத்தையும், இசைக்கருவிகளையும் ஹலாலாகக் கருதுவார்கள். நூல் புகாரி என முன்னறிவிப்புச் செய்தார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரவர்களும் அழுத்தம் திருத்தமாகப் பல நிலைகளில் எடுத்துக் கூறித் தடைசெய்த அனைத்தும் இஸ்லாமிய நாட்டுச் சந்தைகளில் மலிவு விலைகளில் கிடைக்கப் படுவதைக் கண்டு மனம் வெதும்பி வருகிறோம். இதில் கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம் யாதெனில் இஸ்லாமிய நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப்படும் விலக்கக்ப்ட்டவைகளை நமது அப்பாவி முஸ்லிம்கள் பலர் அவைகள் யாவும் மார்க்கம் அங்கீகாரம் அளித்திருப்பது போன்று நினைக்கத் தொடங்கி விடுகின்றனர். அவைகளை தாங்கள் உபயோகிக்கவும் செய்யத் தொடங்கி விடுகின்றனர்
அல்லாஹ்வின் அடியார்களே! எந்தச் சமுதாயத்திற்கும் வழங்காத பல உயர்ந்த அந்தஸ்த்துகளை நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அல்லாஹ் தனது இறுதி நபியன் மூலம் வழங்கி முஸ்லீம் சமுதாயத்தை பல நிலைகளில் கவுரவித்திருக்கின்றான் அதில் ஒன்று தான் தனது நபியிடம் வஹியின் மூலம்
நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையும், தேர்ந்(தெடுத்)து ( உங்களுக்கு அருட் செய்து அங்கீகரித்துக் ) கொண்டேன். அல்குர்ஆன் 5:3
மக்கள் பெருந்திரளாக திரண்டிருந்த இறுதி ஹஜ்ஜின் பேருரையின் போது அல்லாஹ் இந்த வஹியை இறக்கி அருளி அங்குக் குழுமி இருந்த அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முழுமைப்பெற்ற மார்க்கம் தான் இஸ்லாம் என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்கக் கடமைப்டுள்ளோம். முழுமைப் பெற்ற மார்க்கத்தில் நம்மை முழுமையாக நுழைத்துக் கொண்டோமா ? என்கிற விஷயத்தை நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே சுயப்பரிசோதனை செய்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம்.
நாம் நமது மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளாமல் இருந்து வருகிறோம் என்பதை நம்மை விட அவர்கள் அதிகம் தெரிந்து கொண்டதால் அவர்களின் தொழிற்சாலைகளில் உருவாக்கும் தடுக்கப்பட்ட தயாரிப்புகளை நமது இஸ்லாமிய நாடுகளின் சந்தையை மிக அழகாக தேர்வு செய்து கொண்டார்கள்.
அன்புள்ள சகோதரர்களே ! செல்போனை சைலன்ட் செய்து கொள்வதற்காக எழுதப்பட்டக் கடிதம் நீண்டு விட்டது. ஆனாலும் மேற்கூறப்பட்ட ஹதீஸின் தலைப்போடு விளக்கங்கள் ஒத்து வருவதால் கட்டுரையை செல்போன் விஷயத்திற்காக மட்டுமல்லாமல் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தடைசெய்த விபச்சாரம் செய்வது 2.பட்டாடை அணிவது 3.மது அருந்துவது 4.இசைக் கருவிகளைக் கொண்டு இசைப்பது . போன்ற அனைத்திற்குமாகப் பயன் படுத்திக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஆகவே பயான்களின் அமர்வுகளில் இருக்கும்போதும், பள்ளிவாசல்களில் வணக்கங்களில் இருக்கும்போதும் உங்கள் செல்போனை சைலன்ட் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் வணக்கத்திற்கும் பிறருடைய வணக்கத்திற்கும் இடையூறு அளிக்காமல் இருக்கும். மேலும் உங்கள் செல்போன் அழைப்பில் இசையை தவிர்த்துக் கொள்ளுங்கள், சாதாரண டெலிபோன் (பெல்) சத்தத்தை சேவ் செய்து கொள்ளுங்கள், வெறுக்கத்தக்க பல இசைகள் இன்று செல்போன்களில் பதியப்பட்டு வருவதால் இவைகள் மனதில் கடுமையான சஞ்சலத்தை உண்டு பன்னி வடுகிறது. நிசப்தமான நிலையில் பள்ளியில் தொழுது கொண்டிருக்கும் போது இதன் ஓசை தொழுகையாளிகளுக்கு மன சஞ்சலத்தையும், மன உலைச்சலையும் உண்டு பன்னி விடுகின்றது பள்ளிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே அதை ஒரு கடமையாகவே நினைத்துக் கொண்டு சைலன்ட் செய்து விடுங்கள். உங்களால் இயன்றவரை ஷைத்தானின் நுழைவு வாயில்களை தடுத்துக் கொள்ளுங்கள்.
நன்றி; ஜாக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக