அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
15 செப்டம்பர், 2010
பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்? திருக் குர்ஆன் 2:114
அன்புச் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு,
நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனை பல தெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர்
6ந் தேதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்!
உங்களின் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் இதோ சில ஆலோசனைகள்:
1. துஆ
பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கான தேவைகளை நிறைவேற்ற முஸ்லிம் உம்மத்திற்கு உதவி அருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் துஆ (பிரார்த்தனை) செய்யுங்கள். இதற்கு எதுவும் செலவாகாது, இதற்காக பொது அறிக்கைகள் எதுவும் தேவையில்லை. தினந்தோறும் உங்கள் துஆக்களில் பாபரி மஸ்ஜிதை நினைவுபடுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. உண்மைத் தகவல்களை படியுங்கள்; அதனைப் பற்றி எழுதுங்கள்.
பாபரி மஸ்ஜித் சோக நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு தெரியாமலிருந்தால், அதைப் பற்றி வாசித்தறியுங்கள். ஷரீஅத்தில் மஸ்ஜித்களின் அந்தஸ்து பற்றியும், பாபரி மஸ்ஜிதின் நிர்மாணம் முதல் நிர்மூலம் வரையிலான வரலாறு பற்றியும் அறியலாம்; இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (இந்திய முஸ்லிம்களின் சம்மேளனம்) என்ன நிலை எடுத்துள்ளது என்பது பற்றி தெளிவடையலாம். இந்துத்துவ சக்திகள் முதலில் அதனை அடையாளப்படுத்தி, அதன் பின்னர் முழு உலகிற்கும் முன்னிலையிலும் அதனை சுக்கு நூறாக தரைமட்டப்படுத்தியது ஏன் என்பது பற்றி அறிய முயலுங்கள். இது அதனை அதே இடத்தில் மீண்டும் நிர்மாணம் செய்வதே மிக முக்கியமாகும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை உங்களுக்கு தரும்.
இந்திய அரசின் பாதுகாப்பின் கீழ், பாபரி மஸ்ஜிதின் மையப் பகுதியில் ராமர் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும், பாபரி மஸ்ஜித் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு சட்டரீதியாகவும், சரித்திரரீதியாகவும் எந்த ஓர் ஆதாரமுமில்லை. மஸ்ஜிதை இடித்த கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் தத்தம் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பதும் முக்கிய குற்றவாளிகள் இன்று அரசியல் அதிகாரம் பெற்று வலம் வருகிறார்கள் என்பதும், அதே நேரத்தில் இந்த மனிதாபிமானமில்லாத அக்கிரமத்திற்கெதிராக அமைதி வழியில், சட்டத்திற்குட்பட்டு வீதிகளில் குழுமி கண்டனம் தெரிவித்த முஸ்லிம்கள் ஏறத்தாழ 2000 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றதும் அப்பட்டமான உண்மைகளாகும்.
3. நீங்கள் வாழும் பகுதிகளிலுள்ள மஸ்ஜித்களில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
முஸ்லிம்களில் பலதரப்பட்டவர்கள் ஒரே சமயத்தில் மஸ்ஜிதில் ஒன்று கூடுவது வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குத்தான் என்பதால், குத்பா பிரசங்கத்தைப் பயன்படுத்தி, பாபரி மஸ்ஜித் பற்றி விளக்கி கூறலாம்; இயன்ற வழிகளில் பாபரி மஸ்ஜித்துகாக அவர்கள் ஆதரவைக் கோரலாம்.
4. ஊடகங்கள் மூலம் உண்மைச் செய்தியை உலகறியச் செய்யுங்கள்:
பாமர மக்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் பக்கச் சார்புள்ள இஸ்லாத்திற்கு எதிரான செய்தி ஊடகங்கள் மூலமாக வரும் உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட செய்திகள்தான். இந்த நிலையில், பாபரி மஸ்ஜிதின் உண்மை நிலையை மக்கள் முன் எடுத்து வைக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு எலக்டிரானிக்/அச்சு ஊடகங்களில் பணியாற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதாருக்கும் பாபரி மஸ்ஜித் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைக் கோரலாம்.
5. உங்கள் ஊர்களில்/ நகரங்களில் "பாபரி மஸ்ஜித் புனர் நிர்மாணக் குழுக்களை" நிறுவுங்கள்:
பாபரி மஸ்ஜிதைப்பற்றி மக்களுக்கு அறியத்தருவதற்கும், ஹிந்துத்துவ சக்திகளின் அக்கிரமங்களால் பாதிக்கப்பட்ட உங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தார்மீக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இக்குழுக்கள் பயன்படும். கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான கூட்டு நிகழ்ச்சிகள், செய்தி மடல்கள் வாயிலாக சமுதாயத்தினருக்கு விழிப்பூட்டுங்கள்.
6. பொது மக்கள் அபிப்ராயத்தை உருவாக்குங்கள்:
மனித உரிமை குழுக்கள், அரசியல் கட்சிகள், திறந்த மனதுள்ள முஸ்லிமல்லாத குழுக்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு பாபரி மஸ்ஜித் விவகாரத்தைப்பற்றிய கருத்தோட்டத்தை அவர்கள் மத்தியில் உண்டாக்குவது முஸ்லிம்களின் பொறுப்பாகும். கருத்தொற்றுமை கொண்டவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் நீதி வேண்டி போராடும் முஸ்லிம்களுக்கு வலுவைக் கொடுக்கும்.
7. ஹிந்துத்வ சக்திகள் மத்தியில் அழைப்புப்பணி:
"தேசிய அளவில் மிகப்பெரும் சோக நிகழ்ச்சியான பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு நீங்கள் தான் பொறுப்பாகும். உங்களின் சதித்திட்டத்தின் காரணமாக நீதிக்குப் புறம்பான செயலை நீங்கள் செய்ததாக இந்திய முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள். மரணத்திற்கு பின் வரும் மறுமை நாளில் இறைவனின்," எந்த உரிமையையும், அனுமதியையும் கொண்டு இஸ்லாத்தின் அடையாளமாகிய மஸ்ஜிதை இடித்தீர்கள் ? எனது அடியார்களைக் கொன்று குவித்தீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு எச்சரிக்க வேண்டும். குருட்டு குறிக்கோள்களுக்கு பாடுபடுவதை விடுத்து, எங்களையும்,உங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் பக்கம் திரும்புங்கள் என்ற செய்தியை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களின் நேர்வழிக்காக தினமும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
8. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
முஸ்லிம்கள் உறுதியாக நின்று அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மென்மையான குறிக்கோளற்ற அணுகுமுறையைக் கையாண்டால்,அது இந்தியாவில் அமைதியை நிலவச் செய்யும் எனப் பலர் நம்புகின்றனர். அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் - என்னவென்றால் அல்லாஹ்வின் அருளால் ஜிஹாத் உணர்வுதான் அவர்கள் ராமர் கோவில் கட்டுவதையும்,ஏனைய மஸ்ஜித்களை தாக்கி அழிப்பதையும்,முஸ்லிம்களை தாக்குவதையும் விட்டு யோசிக்க வைத்திருக்கிறது. இத்தருணத்தில் இவ்விவகாரத்தில் நாம் தளர்வு காட்டினோமென்றால், ஹிந்துத்துவ சக்திகள் தங்கள் அநீதிகளையும், அக்கிரமங்களையும் மறுபடியும் கட்டவிழ்த்து விடுவதற்கு உற்சாகமளிப்பதாய் அமைந்து விடும். எனவே எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
அல்லாஹ்வின் மீது மட்டும் முழு நம்பிக்கைவைத்து, அல்குர்ஆன், அல்ஸூன்னாவின் வழி காட்டுதலின் அடிப்படையில் நாம் உறுதிப்பாட்டுடனும் உத்வேகத்துடனும் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு நமது கருத்தை நிறுவதற்காக மனப்பூர்வமாகவும், மன உறுதி தளராமலும் உழைப்பது மட்டுமே பாபரி மஸ்ஜிதை மீண்டும் புனர் நிர்மாணம் செய்யலாம்!இம்மை மறுமை வெற்றியை அடையலாம்!
முஸ்லிம்களே நாம் விடாமல் நீதிக்காகப் போராடுவோம்.!
அல்லாஹ்வின் ஆணையை ஏற்றுச் செயல்படுவோம்.!
இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடையாளங்களையும் பாதுகாக்கவிடப்படும் அழைப்பிற்குத் தயாராக இருப்போம்.
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன.எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள் “அல்குர்ஆன் 72:௧
பாபரி மஸ்ஜித் இடம் நம் முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைக்க தூவா செய்வுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பரப்புங்கள் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக