#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 மார்ச், 2012

ஓர் வபாத் செய்தி



  நமதூர் தெற்குத்தெருவை சேர்ந்த  சுஹைத்(ஆட்டோ ) மற்றும் ரிஜ்வான் இவர்களின் தகப்பனாருமான ஜெக்கிரியா அவர்கள் இன்றுகாலை சுமார் 7 .30 am  மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
                                   
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

26 மார்ச், 2012

எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது பட்ஜெட் ,மனிதநேய மக்கள் கட்சி






மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2012&2013ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருடந்தோறும் சமர்ப்பிக்கப்படும் மற்றொரு பட்ஜெட் என்ற அளவிலேயே உள்ளது.
பாராட்டப்பட சில அம்சங்களும், வருத்தமளிக்கும் சில அம்சங்களும் சமஅளவில் கலந்திருக்கின்றன.

25 மார்ச், 2012

பிரதீபா பாட்டீல்.. 12 வெளிநாட்டு டூர், 22 நாடுகளில் பயணம், செலவு ரூ. 205 கோடி!


 
Prathiba Patil
 
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றது முதல் இதுவரை 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசு செலவிட்ட தொகை ரூ. 205 கோடியாகும் என்று ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

மொத்தம் 12 முறை அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளாராம். கடும் முயற்சிகளுக்குப் பின்னர் கிடைத்த ஆர்.டி.ஐ. தகவல்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

24 மார்ச், 2012

தலைவலியால் உசுரே போகுதா? வயிறுமுட்ட சாப்பிடாதீங்க !



Home remedies for Headacheதலைவலி உயிர் போகுதே என்று துடிக்கிறீர்களா? வீட்டிலேயே இருக்கிறது இதற்கு வைத்தியம். அதற்கு முன் தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது. இருப்பினும் குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!!


 
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

23 மார்ச், 2012

உத்தரப்பிரதேசம்: சாதனைப் படைத்தது பீஸ் பார்ட்டி


முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கென ஒரு கட்சி தேவை என்பதற்காக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் பீஸ் பார்ட்டி. இந்தக் கட்சியின் தலைவராக டாக்டர் முஹம்மது அய்யூப் உள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தக் கட்சியில் அனைத்து சமுதாய மக்களும் உறுப்பினராகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர்.
முதன்முறையாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பீஸ் பார்ட்டி போட்டியிட்டது. பீஸ் பார்ட்டியின் வேட்பாளராக முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து சாதிய சமுதாய சகோதர, சகோதரிகளும் களம் கண்டனர்.உத்தரப்பிரதேசத்தில்

மறைவாக உள்ள பொருட்களையும் படம் எடுக்கக்கூ​டிய அதிநவீன கமெரா கண்டுபிடிப்​பு



தற்போது உள்ள கமெராக்கள் மூலம் நேரடியாக காணப்படும் உருவங்கள் அல்லது பொருட்களை மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும்.
மறைவாக உள்ள பொருட்களை எடுக்க முடியாது. காரணம் அப்பொருட்களில் இருந்து பட்டுத்தெறிக்கும் ஔிக்கதிர்கள் கமெராவை வந்து அடைவதில்லை. இதனால் பொருள் கமெராவிற்கு புலப்படாது.

20 மார்ச், 2012

தடம் மாறும் இளைய தலைமுறை!


 
Teacher Kumuthu
 
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 320 மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது. அதை விட அபாயகரமான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ளது. இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை.

19 மார்ச், 2012

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீம்

துபை,மார்ச் 19: ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீமைத் தயாரித்து சந்தையில் வெளிவிட அல் அய்ன் டெய்ரி எனும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


 ஒட்டகப் பால், அரேபியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரும்பும் முக்கிய உணவுப் பொருளாகும். பசும்பாலை விட ஒட்டகப் பாலில் சிறிது உப்புச்சுவை அதிகமாக இருக்கும்.

ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி தற்பொழுது இலங்கை இந்தியாவிற்கும்!!


google-plus-smsஇணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம்.


நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா :


  
௧௨நீடூர் -நெய்வாசலில் த மு மு க வின் 98.வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது .த மு மு க வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர் .அந்த வகையில் நேற்று நீடுரின் வரிசை எண். 98.இந்த ஆம்புலன்சை அற்பனிபதர்க்காக மாபெரும் எழுச்சியுடன் விழா நடைபெற்றது .இவ்விழாவில் த மு மு க வின் மூத்த தலைவர் ஜவஹிருல்லாஹ் .M.L.A.அவர்களும் ,ம ம க வின் மாநில பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும் தமுமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சகோ .கோவை ஜாகிர் மாயவரம் அமீன் கடலூர் ஜின்னாஅவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் .மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை M.L.A.,திரு .பால அருள்செல்வன் மயிலாடுதுறை ஒன்ரியசேர்மன் அதிமுக சந்தோஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டார் . இவ்விழவிர்க்காக த மு மு க வினர் நீடுரை நோக்கி திரண்டனர் .இவ்விழாவில் ஆயிரத்திருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

17 மார்ச், 2012

ஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் !

Sperm Cell அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தையின்மைதான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

இறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்!


குர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறார்' என்பது. இதற்கு அவர்கள் வைக்கும் வாதம் இறைத் தூதர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தமான வரலாறுகள் சில மூன்று வேதங்களிலும் ஒன்றாக வருவதை ஆதாரமாக காட்டுகின்றனர். பெயர்களும் இடங்களும் சில அத்தியாயங்களில் ஒத்து வந்தாலும் வரலாறுகளில் ஏகத்துக்கும் மாற்றம் இருக்கிறது. ஏசு நாதரின் இறப்பு, அவரின் போதனைகள், அதே போல் மோசே, ஆபிரஹாம் போன்ற இறைத் தூதர்களின் வரலாறுகளும் பல மாற்றங்களை குர்ஆனில் கொண்டுள்ளதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

'அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக ஆக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், பிர்அவுன், ஹாமான், மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்'.

-குர்ஆன் 28:5,6 

15 மார்ச், 2012

டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்



வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.
மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.

மறுமை நாள் - ஒர் நினைவூட்டல்



ஈமானின் ஃபர்லுகளில் ஒன்று மறுமை நாளை நம்புவது. இன்று நாம் வாழ்கின்ற உலகம் ஓரு சோதனைக் கூடம், இது நிரந்தரம் அல்ல. இந்த உலகம் ஓரு நாள் அழிக்கப்படும். பின் மறுமை நாள் என்று ஒன்று உண்டு. அதில் நாம் இந்த உலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றார் போல் இறைவன் தீர்ப்பு வழங்குவான். நன்மை தட்டு கனத்தவர்களுக்கு சுவர்க்கமும், தீமைத்தட்டு கனத்தவர்களுக்கு நரகமும் வல்ல இறைவனால் சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வீராணம் ஏரியில் விடப்படும் 22 லட்சம் மீன்குஞ்சுகள்


 
ஏரியில் மீன்குஞ்சுகளை விடும் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் (இடமிருந்து 3-வது).
சிதம்பரம், மார்ச் 5: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் தேசிய மீன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 22 லட்சம் மீன்குஞ்சுகளை விட, தமிழக மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.

 ÷ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் ஏரியில் 5 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.



1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.
2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.
3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.

14 மார்ச், 2012

தமுமுக தலைவருக்கு உற்சாக வரவேற்பு


தமுமுக-மமக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாமீனில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்கள். அவரை புழல் சிறைக்கு வெளியே வடசென்னை, தென்சென்னை, காஞ்சி(வ), காஞ்சி(தெ), திருவள்ளூர்(மே), திருவள்ளூர்(கி), வேலூர்(மே), வேலூர்(கி) மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தார்கள். தொடர்ந்து தமுமுக-மமக தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க தலைமையகத்திற்கு வருகை தந்தார்கள்.

11 மார்ச், 2012

கொள்ளுமேடு தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


           கொள்ளுமேடு  தமுமுக சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 10 .03 .2012    அன்று மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

                                     !அல்ஹம்துலில்லாஹ்!!



10 மார்ச், 2012

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சியை வளர்த்தெடுக்கும்,தமீமுன் அன்சாரி





சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு புதிய செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு தொடக்கமாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொறுப்புகளில் பலருக்கும்

முஸ்லிம் லீக் கட்சி அங்கீகாரம், ஏணி சின்னம் விவகாரம் சர்ச்சையாகிறது:தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்த்து வழக்கு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, கேரள மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அக்கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான "மத்தாப்பூ' தகவலை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.இத்தகவலை வெளியிட்ட சில மணி நேரத்திற்குள், "தேர்தல் கமிஷன் தீர்ப்பை தவறாக பயன்படுத்தி மோசடி பிரசாரத்தில் காதர்மொய்தீன் ஈடுபட்டுள்ளார் என்றும், அகில இந்திய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட வில்லை' என்ற, "அணு குண்டை' மறைந்த முஸ்லிம் சமுதாய தலைவர் அப்துல்சமதுவின் மகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலருமான பாத்திமா முசப்பர் வீசினார். கட்சி அங்கீகாரம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு தரப்பினரும் கருத்து கேட்டோம். 

தொடர் மின்வெட்டை கண்டித்து காட்டுமன்னார்குடியில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம்...


தானே புயலால் பாதித்த காட்டுமன்னார்குடி அதன் சுற்றுப் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து
காட்டுமன்னார்குடி பஸ் நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 09.03.2012
வெள்ளிகிழமை மாலை கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறர் தவறு செய்யும்போது கன்டித்த விதம்




ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ''இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்'' என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்'' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல் : புகாரி 58

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக கொள்கைவாதிக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது. தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக சொல்லிக் காட்டுகின்றது. இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, ''யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!'' என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள். ''(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!'' என்று கூறினார்கள்.

பிறகு அவர் பள்ளியின் ஓரத்தில் ஆடையை அகற்றி சிறுநீர் கழிக்கலானார். (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர் உணர்ந்த பின் என்னருகில் வந்து நின்று கொண்டு, ''அவர்கள் கடுமையாக எச்சரிக்கவில்லை. ஏசவில்லை'' என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இது பள்ளிவாசலாகும். இதனுள் சிறுநீர் கழிக்கப் படலாகாது. இது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே கட்டப் பட்டுள்ளது'' என்று கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார்கள். அது அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா 522

ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள், ''அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப் படவில்லை'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 220

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டதால் தன்னை நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பார்கள் என்று அந்தக் கிராமவாசி எதிர்பார்க்கின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. அதே சமயம் அந்தக் கிராமவாசியை நோக்கிப் பாயும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நளினத்தைப் போதிக்கின்றார்கள்.

தவறைச் சுட்டிக் காட்டுவதாகக் கூறி, தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறையில் அழகிய படிப்பினை உள்ளது.

ஒருவர் தன் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து, வெளியில் யாரிடமும் இதைக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார். இவரோ நண்பரின் வேண்டுகோளை மீறி அடுத்தவரிடம் கொடுத்து விடுகின்றார். அவர் திருப்பித் தர வரும் போது உரிமையாளர் அங்கு இருக்கின்றார். தனது உத்தரவை நண்பர் அப்பட்டமாகவே மீறி விட்டார் என்று தெரிந்த உரிமையாளர் நண்பர் மீது ஒரு பார்வை செலுத்துகின்றார். இந்தப் பார்வையில் மின்னல் பாய்ச்சிய மின்சாரத் தாக்குதல் அந்த நண்பரைப் படாத பாடு படுத்தி விடும். அனலில் பட்ட புளுவாக அவரை நெளிய வைத்து விடும். அந்தப் பார்வை பல கோடி அர்த்தங்களை அந்த நண்பரிடம் சொல்லி முடித்து விடும். இதற்குப் பிறகு வார்த்தைகள் தீயாக, ஏன் தென்றலாகக் கூட வரத் தேவையில்லை. இதிலேயே அந்த நண்பர் உரிய பாடத்தைப் பெற்றுக் கொண்டு விடுவார்.

இது போல் 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர் ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக வருகின்றார் என்றால் முதலாளி அவரைக் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டியதில்லை. கடிகார முட்களைப் பார்த்தாலே போதும். அது அந்த ஊழியரின் இதயத்தைத் தைத்து விடும். இப்படி ஒரு அணுகுமுறையை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறுகின்றோம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரில் இருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும் 'இதை ஏன் இப்படிச் செய்தாய்?' என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும் 'இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை' என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை. (நூல் : புகாரி 2768)

இன்று இந்த அணுகுமுறைகளை முதலாளி தன் தொழிலாளியிடம் அனுசரிப்பதில்லை. நண்பர்கள் தங்களுக்குள் அலங்கரித்துக் கொள்வதில்லை. இப்படியொரு தன்மை இரு தரப்பிலும் நிலவுகின்ற போது அங்கு அமைதி தழுவும். பணி சிறக்கும். இதற்கு மாற்றமாக ஒரு நல்ல நண்பர் அல்லது ஒரு நல்ல ஊழியர் ஏற்கனவே குற்ற உணர்வில் இருக்கும் போது, அவரிடத்தில் சீறிப் பாயும் கடின வார்த்தைகள் அவரை சீர்குலைய வைக்கின்றன. 

அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்கள். இந்தப் பத்தாண்டு காலத்தில் ஏதேனும் பிசகுதல் இல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும் நபி (ஸல்) அவர்களின் மென்மையான அணுகுமுறையினால் அது சரி செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் விளங்க முடிகின்றது.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்களைப் போன்று முதலாளி மட்டும் இருந்தால் போதாது. ஊழியராக இருப்பவர் அனஸ் (ரலி) அவர்களைப் போன்று முதலாளியின் எதிர்பார்ப்புகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படும் உண்மை உணர்வுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய நற்பண்புக்கு இன்னோர் எடுத்துக்காட்டு!

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். உடனே நான், 'யர்ஹமுகுமுல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக' என்று சொன்னேன். உடன் மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர். ''(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்! உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கின்றீர்களே!'' என்று நான் கேட்டேன். அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால் அடித்துக் காட்டினர். அவர்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கின்றார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப் பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை. என்னை அடிக்கவில்லை. என்னை ஏசவுமில்லை. ''நிச்சயமாக இது தொழுகை! இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது. நிச்சயமாக தொழுகை என்பது தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுதல் என்பது மட்டும் அடங்கியதாகும்'' என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ரலி), நூல் : முஸ்லிம் 836

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஆவியா பின் ஹகம் (ரலி) தொழுகையில் தான் பேசிய பேச்சுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டப் போகின்றோம் என்று கனமான உள்ளத்தோடு காத்திருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அவர் செய்த செயல்கள் எதையும் கண்டனம் செய்யவில்லை என்பதை இங்கு காண்கிறோம். அதற்காக அந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூற முடியாது.

சம்பந்தப் பட்ட அவரே தவறு என்று உணர்ந்து குற்ற உணர்வில் கூனி குறுகிப் போயிருக்கும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் அவற்றைச் சொல்லி குத்திக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். எதையும் அளவுக்கு மீறி கூறினால் அது அமிர்தமாக இருப்பினும் நஞ்சாகி விடும் என்ற மனித உளவியல் ஓட்டத்தைப் புரிந்த புனிதத் தலைவர் அவர்கள். அதனால் உடன்பாட்டு மறையாக, பாஸிடிவாக எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லி முடிக்கின்றார்கள்.

இதுபோன்ற இதம், பதம் நம்மை என்றும் ஆட்கொள்ளும் விதத்தில் நமது பயணத்தை அமைப்போமா?

ஜசகல்லாஹ் கைர்: ஃபர்ஸான், இலங்கை

06 மார்ச், 2012

சிரியாவிற்கு உதவ ஜெனீவா செஞ்சிலுவைச் சங்கங்கள் முடிவு





சிரியாவிற்கு உதவ ஜெனீவா
செஞ்சிலுவைச் சங்கங்கள் முடிவு
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய ஜெனீவாவில் உள்ள சர்வதேசக்குழு செஞ்சிலுவைச் சங்கம் முனைந்துள்ளது.
இராணுவம் நடத்திய அட்டூழியங்களை செஞ்சிலுவைச் சங்கத்தினர் பார்வையிடக் கூடாது என்பதற்காக சிரியாவின் அரசு ஆதரவாளர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரை தடுத்து வருகின்றனர்.

05 மார்ச், 2012

மனிதஉயிர்களை வேட்டையாடிய மிருகம் நரேந்திர மோடி என்ற கோஷங்களுடன் அமேரிக்காவில் ஆர்ப்பாட்டம்




மனிதஉயிர்களை வேட்டையாடிய மிருகம் நரேந்திர மோடி என்ற கோஷங்களுடன் அமேரிக்காவில் ஆர்ப்பாட்டம்
குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்குண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியூயார்க்கில் 40 இந்திய-அமெரிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரானில் திடீர் திருப்பம் ஈரான் தேர்தலில் மதத் தலைவர் கமேனிக்கு பெரும் வெற்றி-அதிபர் அகமதிநிஜாத் சறுக்கினார்!






ஈரானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் ஆதரவாளர்கள் தான் 75 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாதுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் அதிபரும், நாடாளுமன்றமும் தான் முக்கிய பங்கு பகிக்க வேண்டும் என்று கூறி வருபவர் அகமதிநிஜாத். ஆனால், தனது உத்தரவே நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளார் கமேனி.

வரதட்சணைக்கு எதிராக செயல்பட முஸ்லிம் அமைப்பு அழைப்பு!


வரதட்சணைக்கு எதிராக செயல்பட முஸ்லிம் அமைப்பு அழைப்பு!வரதட்சணை எண்ணும் கைக்கூலி கொடுமையால் பல ஏழைகள், மற்றும் நடுத்தர மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதை ஒழித்து கட்ட முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்று திரண்டு உணர்வுடன் செயல்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நெல்லையில் நடைபெற்ற முஸ்லிம் அமைப்பின் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

02 மார்ச், 2012

அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய்!



Ladys Finger  
பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

பெண்களே தாய்மை காலத்தை தள்ளிப் போடதீங்க!



Women  
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் கார், பங்களா என செட்டிலான பின்னரே குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் திருமணமாகி 5 ஆண்டுகள் வரை கூட குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர். இது தவறான முடிவு என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். ஏனெனில் 30 வயதிற்குள் பெரும்பாலான பெண்கள் 90 சதவிகித அளவிற்கு கருமுட்டைகளை இழந்து விடுவதால் அவர்கள் தாய்மை அடைவது கேள்விக்குறியாகிறது என்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

மனிதர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் ஃபேஸ்புக்!


Facebook Users are Getting More Private and Less Social
நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சவுகரியத்தினை ஏற்படுத்தி உள்ள ஃபேஸ்புக் மனதளவில் சிறியவர்களையும், பெரியவர்களையும் பாதிப்பதாக செய்திகள் வெளியாகின. ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் இருந்து விலகி செல்வதாக இன்னொரு பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.