#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

15 மார்ச், 2012

வீராணம் ஏரியில் விடப்படும் 22 லட்சம் மீன்குஞ்சுகள்


 
ஏரியில் மீன்குஞ்சுகளை விடும் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் (இடமிருந்து 3-வது).
சிதம்பரம், மார்ச் 5: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் தேசிய மீன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 22 லட்சம் மீன்குஞ்சுகளை விட, தமிழக மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.

 ÷ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் ஏரியில் 5 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.


 ÷வீராணம் ஏரியில் முதல் கட்டமாக மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளத் துறை இணை இயக்குநர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.÷காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகமாறன் நிகழ்ச்சியில் பங்கேற்று 8 செ.மீ. அளவுள்ள 1.50 லட்சம் மீன்குஞ்சுகளை வீராணம் ஏரியில் விட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


 ÷ரோகு, கட்லா, மிர்ஜா, சாதா கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் விடப்பட்டன. சில தினங்களில் 22 லட்சம் மீன்குஞ்சுகள் முழுமையாக ஏரியில் விடப்படும்.


 ÷இந்த மீன்குஞ்சுகள் 2 மாதத்துக்குள் அரை கிலோ முதல் 2 கிலோ வரை வளர்ந்துவிடும் என இணை இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் கலியமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கமலக்கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 விவசாயிகள் வேதனை

 ÷தமிழக அரசு மீன்வளத் துறையினரால் ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் பெயரளவுக்கே மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன.


 ÷கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட காலங்களில் மீன்குஞ்சுகளை விட வேண்டும்.


 ÷ஆனால் இந்த ஆண்டு மீன்குஞ்சுகள் கோடை காலம் நெருங்கிய பிறகு காலதாமதமாக விடப்பட்டுள்ளன.
 ÷இதனால் கோடைக் காலத்தில் ஏரியில் நீர்குறைந்து, மீன்கள் வளருவதற்குள் இறந்துவிடும். கடந்த ஆண்டு விடப்பட்ட மீன்குஞ்சுகள் அனைத்தும் இறந்து மிதந்தது என அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக