அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
06 மார்ச், 2012
சிரியாவிற்கு உதவ ஜெனீவா செஞ்சிலுவைச் சங்கங்கள் முடிவு
சிரியாவிற்கு உதவ ஜெனீவா
செஞ்சிலுவைச் சங்கங்கள் முடிவு
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய ஜெனீவாவில் உள்ள சர்வதேசக்குழு செஞ்சிலுவைச் சங்கம் முனைந்துள்ளது.
இராணுவம் நடத்திய அட்டூழியங்களை செஞ்சிலுவைச் சங்கத்தினர் பார்வையிடக் கூடாது என்பதற்காக சிரியாவின் அரசு ஆதரவாளர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரை தடுத்து வருகின்றனர்.
இது குறித்து மருத்துவ சேவை செய்தித் தொடர்பாளர் சாலிகு தவாகே கூறுகையில், பாபா ஆம்ருக்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆபெல் கிராமத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தமது மருத்துவ சேவையைத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
மேலும் அவர் AFPக்கு அளித்த பேட்டியில், இந்தக் கிராமத்தில் உள்ள பலருக்கு உண்பதற்கு உணவுப்பொருட்களும், குளிருக்கு போர்வையும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்ததாக இன்ஷாத் என்ற ஊரில் இந்தப்பணி தொடர உள்ளதாகவும் அப்போது சிரியாவின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தாரும் இச்சேவையில் இணைய உள்ளதாக கூறினார்.
இதனைத் தொடந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பாதுகாப்புக்காக ஒரு பெரிய இராணுவ வாகனங்கள் பாபா ஆம்ர் பகுதிக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐ.நா.வின் பொதுச் செயலரான பான் கி மூன் கூறுகையில், ஹோம்ஸ் நகரத்து மக்களை சிரியா இராணுவம் கொன்று குவித்ததாகவும் சித்திரவதை செய்ததாகவும் தனக்கு வரும் அறிக்கைகள் மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளன என்று கூறினார். இதுவரை சிரியாவில் நடந்த மக்கள் போராட்டத்தில் 7500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக