அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
06 ஏப்ரல், 2011
மீனவர் பிரச்னைக்கு குரல் கொடுப்போம் : ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி
ராமநாதபுரம் : ""தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரத்தர தீர்வு காண குரல் கொடுப்போம் ,'' என, ராமநாதபுரம் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தின் போது பேசினார். மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை உள்ளிட்ட கிராம பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: தமிழகத்தில் மின்தடை பொது மக்களை மிகவும் பாதித்திருக்கிறது. பெரிய அளவிலான கம்பெனிகளுக்கு கமிஷன் பெற்று கொண்டு மின்சாரத்தை வழங்குவதால், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதை பற்றி அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது அவர்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மீனவர்களை காப்பாற்ற வேண்டிய, பாதுகாப்பு தரவேண்டிய மத்தியில் உள்ள காங்., அரசும் மாநிலத்தில் கருணாநிதி அரசும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையை மாற்றி நமது மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் எவ்வித துன்பமும் ஏற்படாது வகையில் மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முஸ்லிம்களுக்காக ஐந்து சதவீதம் இடஓதுக்கீடு செய்யப்படும் என்ற கருணாநிதியின் வாக்குறுதி பொய்யானது. ஆட்சியில் இருப்பவர் வாக்குறுதி தரக்கூடாது அதை செய்து முடிக்க வேண்டும். கருணாநிதி சிறுபான்மை மக்களை ஏமாற்றுகிறார். அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமையும்போது, கமிஷன் தீர்ப்பு அடிப்படையில் எத்தனை சதவீதம் சொல்கிறதோ அத்தனை சதவீதம் இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என கூட்டணி தலைவர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்திற்கு எதிராக கருணாநிதி அரசு கொண்டு வந்துள்ள கட்டாய பதிவு திருமணம் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டணி தலைவர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண டில்லியில் லோக்சபா முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் உள்ள ம.ம.க., சேவை செய்வதற்காகவே துவங்கப்பட்ட கட்சி. ஏற்கனவே செய்து வரும் சேவையை ,எம்.எல்.ஏ., என்ற பதவியுடன் இரண்டு மடங்காக பணியாற்ற மக்கள் பெரும் வாய்ப்பு தரவேண்டும், என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், துணை செயலாளர் முனியசாமி, தொகுதி செயலாளர் முருகேசன், பேரவை செயலாளர் பாலசிங்கம், மீனவரணி தர்வேஸ், மண்டபம் ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், நகர் துணை செயலாளர் ஆரிப்ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம் நடவடிக்கை கோரி பிரதமருக்கு மனிதநேய மக்கள் கட்சி அவசர தந்தி
காணாமல் போன மேற்கண்ட நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் ம.ம.க. வேட்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று காலை அவசர தந்தி அனுப்பியுள்ளார். காணாமல் போயுள்ள மேற்கண்ட நான்கு மீனவர்களையும் உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
05 ஏப்ரல், 2011
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மக்கள் ஆதரவு யாருக்கு
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அமைச்சரின் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை மக்கள் ஆதரிக்கப்போகிறார்களா அல்லது உள்ளூர் வேட்பாளர் முருகுமாறனை ஆதரிக்க போகிறார்களா என்ற நிலையில் தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் கடைகோடி தொகுதியாக காட்டுமன்னார்கோவில் உள்ளது. விவசாய தொழிலையே நம்பியுள்ள இங்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பொருளாதார அளவில் கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் காணாத தொகுதியாக உள்ளது. தனி தொகுதியான இங்கு கடந்த 62ம் ஆண்டு முதல் 11 சட்டசபை தேர்தலில் 6 முறை தி.மு.க. வும், 2 முறை காங்., கட்சியும், அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை தலா ஒருமுறை கைப்பற்றின. கடந்த 2006 தேர்தலில் காங்., வேட்பாளர் வள்ளல்பெருமானுக்கும் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாருக்கும் ஏற்பட்ட போட்டியில் ரவிக்குமார் வெற்றி பெற்றார்.
தி.மு.க., அரசு செய்த துரோகம் என்னென்ன:பட்டியலிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
திருப்பூர்:"ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், முஸ்லிம்களுக்கு பல்வேறு துரோகங்கள் செய்யப்பட்டுள்ளன,'' என, காயிதே மில்லத் பேரன் தாவூத் மியான் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு மாநில செயலர் முகமது ரபி கூறினார்.திருப்பூர் தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், மா.கம்யூ., வேட்பாளர் தங்கவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் நேற்று, பிரசாரம் செய்தனர்.
முகமது ரபி நிருபர்களிடம் கூறியதாவது:ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், தி.மு.க., அரசு, முஸ்லிம்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்து இருப்பதாக, தி.மு.க.,வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், சச்சார் கமிட்டி அறிக்கையில் உள்ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன், 3.2 சதவீத முஸ்லிம் மக்கள் அரசுப் பணியில் இருக்கின்றனர்; இந்த ஒதுக்கீடு வழங்கிய பின், 1.5 சதவீதம் மட்டுமே அரசுப் பணியில் இருக்கிறார்கள். இது, பெரிய துரோகம்.
முகமது ரபி நிருபர்களிடம் கூறியதாவது:ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், தி.மு.க., அரசு, முஸ்லிம்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்து இருப்பதாக, தி.மு.க.,வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், சச்சார் கமிட்டி அறிக்கையில் உள்ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன், 3.2 சதவீத முஸ்லிம் மக்கள் அரசுப் பணியில் இருக்கின்றனர்; இந்த ஒதுக்கீடு வழங்கிய பின், 1.5 சதவீதம் மட்டுமே அரசுப் பணியில் இருக்கிறார்கள். இது, பெரிய துரோகம்.
5 கோடி ரூபாயை துணிச்சலாக மடக்கிப் பிடித்தார் பெண் அதிகாரி: பஸ்சில் கடத்தியது யார்?
திருச்சி : ஷெட்டில் நின்றிருந்த தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5.11 கோடி ரூபாயை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, தனி ஆளாக சென்று பறிமுதல் செய்து, சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர் உள்ளிட்ட மூவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய, இந்த பணத்தை திருச்சிக்கு கடத்தி வந்த பிரமுகர் யார் என்பது இன்னமும் புதிராக உள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமான, "எம்.ஜே.டி., ஆம்னி' பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவலில்
நல்லாட்சி மலர உழைத்திடுவோம்!
நபி(ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையில் எண்ணிலடங்கா துன்பங்களைச் சுமந்த நிலையிலும் கூட அர்க்கம்(ரலி) அவர்களின் வீட்டை வணக்க வழிபாட்டிற்காகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.
புனித மதீனாவில் நுழைந்த பதினைந்து நாட்களில் நஜ்ஜார் கிளையார்களால் வழங்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதுந் நபவியை கட்டினார்கள். இணை வைத்தலின் சாயல் கூட இறைவழிபாட்டில் படிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் மண்ணரிக்காத மீத பகுதிகளை தோண்டி அப்புறப்படுத்தினார்கள்.
மஸ்ஜிதுந் நபவியை எழுப்பும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் இணைந்து கற்களையும் மண்ணையும் சுமந்தார்கள்.
புனித மதீனாவில் நுழைந்த பதினைந்து நாட்களில் நஜ்ஜார் கிளையார்களால் வழங்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதுந் நபவியை கட்டினார்கள். இணை வைத்தலின் சாயல் கூட இறைவழிபாட்டில் படிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் மண்ணரிக்காத மீத பகுதிகளை தோண்டி அப்புறப்படுத்தினார்கள்.
மஸ்ஜிதுந் நபவியை எழுப்பும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் இணைந்து கற்களையும் மண்ணையும் சுமந்தார்கள்.
மூன்று பெரும் தவறான செயல்கள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
"மூன்று வகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்று நபி (ஸல்) மும்முறை நீட்டி முழக்கிக் கூறினார்கள். "தோற்றுப் போய் விட்ட, இழப்புக்குள்ளாகி விட்ட அவர்கள் யாவர் அல்லாஹ்வின் தூதரே!" என்று நான் கேட்டேன். அதற்கு, "(அவர்கள்,) தமது ஆடையை(ப் பெருமைக்காகக் கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டுபவர், (பிறருக்கு உதவியாகச்) செய்ததைச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்தாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) .முஸ்லிம்
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) .முஸ்லிம்
"வழங்கிய கொடையைச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து சரக்கை விற்பனை செய்பவர், தமது கீழாடையை(ப் பெருமைக்காகக் கணுக்காலுக்குக் கீழே) இறக்கிக் கட்டுபவர் ஆகிய மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி). முஸ்லிம்
குறிப்பு:
இதே ஹதீஸை, "மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்ற தொடக்கத்தோடு ஸுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக பிஷ்ருப்னு காலித் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில் காணப் படுகிறது.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி). முஸ்லிம்
குறிப்பு:
இதே ஹதீஸை, "மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்ற தொடக்கத்தோடு ஸுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக பிஷ்ருப்னு காலித் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில் காணப் படுகிறது.
04 ஏப்ரல், 2011
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. ராமநாதபுரம் தொகுதியில் மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் பணி; ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா பேச்சு
அப்போது வீடுவீடாக சென்று இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். புதுமடத்தில் அவர் பேசியதாவது:-
தவ்ஹீத் ஜமாத்தினர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கான்சாகிப் தெருவில் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லாவிற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி அவதூறாக துண்டு பிரசுரங்களை வினியோகிப்பதாக பட்டணம் காத்தான் வி.ஏ.ஒ., மூர்த்தி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த காதர் மைதீன்( மேலகோட்டை)ஜியாவுல்ரகுமான்( ஏர்வாடி)முகம்மது மக்தும் மைத்யூ( கீழக்கரை ) அகம்மது தினுள் ஹக்(தேவிபட்டினம்) அசரப்அலி(பனைக்குளம் ) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மாநில பொது செயலாளர் ரகமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஆரிப்கான், மாவட்ட தலைவர் சைபுல்லாகான் ஆகியோர் மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)