#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

05 ஏப்ரல், 2011

தி.மு.க., அரசு செய்த துரோகம் என்னென்ன:பட்டியலிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

திருப்பூர்:"ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், முஸ்லிம்களுக்கு பல்வேறு துரோகங்கள் செய்யப்பட்டுள்ளன,'' என, காயிதே மில்லத் பேரன் தாவூத் மியான் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு மாநில செயலர் முகமது ரபி கூறினார்.திருப்பூர் தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், மா.கம்யூ., வேட்பாளர் தங்கவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் நேற்று, பிரசாரம் செய்தனர்.

முகமது ரபி நிருபர்களிடம் கூறியதாவது:ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், தி.மு.க., அரசு, முஸ்லிம்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்து இருப்பதாக, தி.மு.க.,வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், சச்சார் கமிட்டி அறிக்கையில் உள்ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன், 3.2 சதவீத முஸ்லிம் மக்கள் அரசுப் பணியில் இருக்கின்றனர்; இந்த ஒதுக்கீடு வழங்கிய பின், 1.5 சதவீதம் மட்டுமே அரசுப் பணியில் இருக்கிறார்கள். இது, பெரிய துரோகம்.


கட்டாய திருமண சட்டத்தால் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இழந்த முதல் மாநிலம் தமிழகம்; எந்த மாநிலத்திலும் இச்சட்டம் இல்லை. தமிழகத்தில் காங்., ஆட்சியை வீழ்த்தி, தி.மு.க., ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் காயிதே மில்லத். அவருடைய பெயரைக்கூட கருணாநிதி கூறுவதில்லை.கருணாநிதியின் மகன், மகள், பேரன் ஆகியோர் ஆட்சி அதிகாரத்துக்கு வரலாம். ஆனால், ஈ.வெ.ரா., - காயிதே மில்லத் பேரன்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வராமலிருக்க கருணாநிதி சூழ்ச்சி செய்கிறார்.
சமச்சீர் கல்வியில் அரபு, உருது மொழிகள் இல்லை. தமிழகத்தில், 40 சதவீதம் அரபு, உருது மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளனர். சமச்சீர் கல்வியில் அரபு, உருது மொழிகளை சேர்க்க வேண்டும். ஜெயலலிதா, சிறுபான்மை மொழிகளுக்கு பாதுகாப்பு, இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்கி, அதிகப்படுத்தி தருவதாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறோம்.இவ்வாறு முகமது ரபி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக