அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
22 ஏப்ரல், 2011
திபெத்தில் நடந்துள்ளது 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஆபரேஷன்
திபெத்தில் 1998-ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்தது. அந்த மண்டை ஓட்டை பிளந்து ஆபரேஷன் செய்ததற்கான அடையாளங்கள் இருந்தன. மண்டை ஓட்டை பிளந்து ஆபரேஷன் செய்வது என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது.
ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தபோது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிந்தது. அதாவது அந்த காலத்திலேயே ஆபரேஷன் நடந்து இருக்கிறது.
இப்போது திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஆபரேஷன் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. பழங்கால புத்தகம் ஒன்றை ஆய்வு செய்தபோது இந்த தகவல் கிடைத்து உள்ளது.
திபெத்தில் உள்ள லசா பல்கலைக்கழக பேராசிரியர் கர்மா டிரின்லி இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். அப்போது மூளை ஆபரேஷன் நடந்ததை இந்தியாவில் இருந்து தசோக்யெல் என்ற டாக்டர் பார்வையிட வந்திருந்ததாகவும் அதில் குறிப்புகள் உள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக