நன்றி.தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 ஏப்ரல், 2011
உலக நாடுகள் வியக்கும் அளவு தி.மு.க., ஊழல் : ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா பேச்சு
ராமநாதபுரம் : ""உலக நாடுகள் பிரமித்து போகும் அளவிற்கு ஊழல் சாதனை படைத்துவிட்டு, எவ்வித கூச்சமுமின்றி மக்கள் மத்தியில் தி.மு.க., ஓட்டு கேட்டு வருவதை பார்த்து உலகமே வியக்கிறது,'' என ,ராமநாதபுரம் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசினார். உச்சிப்புளி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்துவிட்டு ஏதும் செய்யாத காங்., எம்.எல்.ஏ., இனி தன்னை தேர்வு செய்தால் அதை செய்வேன், இதை செய்வேன் என மக்களை ஏமாற்றுவதில் இறங்கிவிட்டார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி இருந்தால்தான் இணக்கமான சூழல் என கூறிவரும் காங்., மற்ற விஷயங்களிலும் (ஸ்பெக்டரம் ஊழல்) இதேபோல் இணக்கமாகத்தான் இருக்கின்றனர் என்பதை ஒத்துகொள்வது போல் உள்ளது. தொகுதியில் வெள்ளத்தால் பாதித்தபோது மக்களை சந்திக்காதவர் இனி வெற்றி பெற்றால் ,மக்களை நிரந்தர முட்டாள்களாக கருதிவிடுவதற்கு வாய்ப்பு அளித்துவிடக்கூடாது. நான் வெற்றிபெற்றால் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன் மீனவர்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்கு தேவையான மீன்பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பேன். ஏற்கனவே ம.ம.க., மக்கள் சேவை செய்து வந்துள்ளநிலையில், எம்.எல்.ஏ.,பதவி கிடைக்கும்பட்சத்தில் தொகுதி நிதியை முழுமையாக பயன்படுத்துவதுடன் எங்களது சேவை விரிவடையவும் வாய்ப்பாக அமையும். உலக நாடுகள் பிரமித்து போகும் அளவிற்கு தமிழகத்தில் தி.மு.க., ஊழல் சாதனை படைத்துவிட்டு, எவ்வித கூச்சமுமின்றி மக்கள் மத்தியில் ஓட்டு கேட்டு வருவதை பார்த்து உலகமே வியக்கிறது, என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, தொகுதி பொறுப்பாளர் முருகேசன், இணைபொறுப்பாளர் தஞ்சி சுரேஷ்குமார், தே.மு.தி.க.,முத்தீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக