#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

21 ஏப்ரல், 2011

கேள்விக்குறியாகும் சுகாதாரம்



உலக அளவில் சுகாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இலக்கு இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது என்பதையே ஒவ்வொரு புள்ளிவிபரமும் நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நாளும் உலக அளவில் 7 ஆயிரம் சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என்று மருத்துவ ஏடு லான்செட் தனது ஆய்வறிக்கையில் தெரி வித்திருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளான இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட 10 நாடுகளில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் குழந்தை சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என புள்ளி விப ரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் குறிப்பாக இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 20 முதல் 66 குழந்தைகள் இறந்தே பிறக்கின்ற ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படி சிசுக்கள் இறந்தே பிறப்பதற்கு மருத்துவ ரீதியான பிரச்சனைகளும், உடல் ரீதியான பிரச்சனைகளும் காரணமாக இருக்கின்றன. அதில் பெரும்பாலும் கருத்தரிப்பு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்களே பிரதான மான காரணமாக இருக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லா மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவை காரணமாக இருக்கிறது. மேலும் பிரசவ காலத் தில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களும் ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது.
ஏன் கர்ப்பகாலத்தில் கூட பெண்கள் இவ்வாறு நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்? இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், அதாவது 90 சதவிகித நோய்கள் தண்ணீர் மூலமே பரவுகிறது என்று தெரிய வந்திருக்கிறது. அப்படியென்றால் நாட்டில் சுகாதாரமான குடிநீர் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெ டுத்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடி யும். ஆனால் இதையெல்லாம் உணர்ந்து இந் திய அரசு அதற்கான வருமுன்  காக்கும் திட்டங் களை தீட்டியிருக்கிறதா என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதைவிட இன்னும் கொடுமை என்னவென்றால், சுத்தமான குடிநீர் என்பது இன்று வியாபாரப் பொருளாக இந்தியாவில் கோலோச்சுகிறது.


உலகமயக் கொள்கை என்று இந்தியாவிற் குள் என்று புகுந்ததோ அன்றில் இருந்து கொஞ் சம் கொஞ்ச மாக சுகாதாரமான குடிநீர் வழங்கும் பொறுப்பில் இருந்து இந்திய அரசு தன்னை விடு வித்துக் கொண்டே வருகிறது. அதன் எதிரொலி தான் கோக்ககோலா பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமது நிலத்தில் உள்ள நல்ல தண் ணீரை உறிஞ்சி நமக்கே விற்கும் அவலம் ஏற் பட்டிருக்கிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் மக்களுக்கான சுகாதாரத்தை பேணிக்காத்து உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசு அந்த பொறுப்பில் இருந்தும் தன்னை கொஞ்சம் கொஞ் சமாக விடுவித்து வருகிறது. இதுநாள் வரை தொற்று நோய் பரவுவதை தடுப்பது என்பது அரசின் கடமையாக இருந்து வந்தது. இன்று அந்த தொற்று நோய் மருந்தை கூட அரசு மருத்துவமனைகளிலேயே காசுக்கு விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது காசு உள்ளோருக்கே சுகாதாரம் என்ற பாகுபாட் டினை அரசே கடைப்பிடிக்கும் அவலம் அரங் கேற்றப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப் படை காரணமாக உலகமயக் கொள்கையே இருந் து வருகிறது. எனவே அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி சுகாதாரம் பேணிக்காத்திட உலக மயக் கொள்கையை இந்தியாவை விட்டு விரட்டிடுவது என்பது ஒரு முக்கியப் பணி யாகும். உலகமயம் கருவறை சிசுவுக்கும் எதிரானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக